May

மே 18

மே 18

பிழைப்போம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக, எங்கள்பலத்துக்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டாயிற்று. நாங்கள் எங்கள்மேல்நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாக இருக்கத்தக்கதாகமரணம் வருமென்று நாங்கள் எங்களுக்குள்ளே நிச்சயித்திருந்தோம் (2.கொரி.1:8-9).

அளவுக்குமிஞ்சி நெருக்கப்பட்டோம்,

அதிகமதிகமாக நெருக்கப்பட்டோம்,

உடலில் நாம் நெருக்கப்பட்டோம்,

உடல் ஆன்மாவிலும் நெருக்கப்பட்டோம்,

மனதிலும் நெருக்கப்பட்டோம் அலைகளெழும்பி,

மனம் வேலைசெய்ய மறுக்கும்வரை.

எம் எதிரிகளால் நெருக்கப்பட்டோம்,

எம் நண்பர் தம்மாலும் நெருக்கப்பட்டோம்,

நெருக்கத்தாலேயே வாழ்வு முடியும்போல்

நெருக்கத்தின்மேல் நெருக்கப்பட்டோம்.

இறைவன் உதவி தவிர வேறேதுமின்றி

இறைவன் தன் கோலும் தடியும் அறியும்வரை

எதுவும்சேரா விடுதலை பெற்றிட நெருக்கப்பட்டோம்,

எதுவும் நடக்காதது நடக்கும் விசுவாசம்வரை

எம்மாண்டவரில் வாழ்வு யாம் பெற்றிடும்வரை

இங்கு நாங்கள் நெருக்கப்பட்டுள்ளோம்.

வாழ்வில்கடினமான இடங்களில் ஏற்படும் நெருக்கங்கள், நம் வாழ்வுக்கு மதிப்பைத் தருகின்றன.ஒவ்வொரு நெருக்கடியினாலும் நாம் புது வாழ்வு பெறுகிறோம். ஒவ்வொரு நெருக்கடியிலும்,நல்வாழ்வு எவ்வளவு சிறந்ததென்று நமக்குக் காட்டுகிறது. எனவே நாம் ஆண்டவருக்கும்,பிறமக்களுக்கும் மேலும் பயனுள்ளதாக வேண்டியவர்களாயிருக்கிறோம். நமக்கு வரும்சோதனைகளாகிய நெருக்கங்கள், மற்றவர்களுக்கு வரும் சோதனைகளை நாம் புரிந்துகொள்ளஉதவுகின்றன. அவர்களுக்காகப் பரிவு கொள்ளவும், அவர்களுக்கு உதவி செய்யவும் நம்மைத்தகுதியுள்ளவர்களாக்குகின்றன.

மனிதரில்சிலரில் இயற்கையாகவே ஆழமற்ற கருத்தற்ற சுபாவம் உண்டு. அவர்கள் ஒரு கோட்பாட்டையோ,வாக்குத்தத்தத்தையோ மெலேழுந்தவாரியாகப் பற்றிக்கொண்டு ஒவ்வொரு சோதனையிலும்தயங்கி நடுங்குவார்கள். மற்றவர்களின் நம்பிக்கையின்மையைப்பற்றி வீணான சொற்களால்விமர்சிப்பார்கள். ஆனால் வாழ்வில் அதிகம் சோதனைகளுக்கான மனிதர் அவ்வாறு ஒருநாளும்செய்யார். அவர்களுக்குத் துன்பப்படுதல் என்றால் என்னவென்று தெரியும். ஆதலால் துன்பப்படும்மக்களுடன் மென்மையாகவும் பெருந்தன்மையுடனுடே நடந்துகொள்வர். இதைக்குறித்துத்தான்பவுலடியார், மரணம் உங்களில் கிரியை செய்கிறது என்று குறிப்பிடுகிறார்.

நெருக்கங்களும், நெருக்கடியான நிலைகளும் நம்மை முன்னோக்கிச் செல்ல உந்தித்தள்ளஅவசியமாகின்றன. ஒரு கப்பலில் நெருப்பு மூலம் கப்பலின் இயந்திரங்களை இயக்குவதனால்,பெருங்கப்பல் காற்றையும், அலைகளையும் எதிர்த்துப் பெருங்கடலில் செல்லமுடிகிறது. இதுபோலத்தான்நெருக்கங்களும் நெருக்கடிகளும் நம்மைக் கிறிஸ்தவ வாழ்வில் முன்னேறிச் செல்லச்செய்கின்றன.

துன்பமென்னும்ஆலையிலிருந்துதான்

இன்பந்தரும் இரசம் ஆன்மாவுக்குக் கிடைக்கும்.

கண்ணீர் சிந்தாக் கண்கள் என்றும்

பிரகாசிக்க முடியாது.