May

மே 17

மே 17

நாற்பது வருஷம் சென்ற பின்பு…. கர்த்தருடைய தூதன்… அவனுக்குத்தரிசனமானார்…. பின்னும் கர்த்தர் அவனை நோக்கி… நீ வா நான் உன்னை எகிப்திற்குஅனுப்புவேன் என்றார் (அப்.7:30-34).

நமதுவேலைகளிலிருந்து ஆண்டவர் சிறிது காலத்திற்கு நம்மைப் பிரித்து வைக்கிறார். அவர் நம்மைஅமைதியாயிருக்கச் செய்து, நமது பணிக்கு நாம் செல்லுமுன் சில காரியங்களைக்கற்றுக்கொள்ளச் செய்கிறார். இவ்வாறு நாம் காத்திருக்கும் காலம் வீணான காலமல்ல.

ஒரு வீரன்தன் எதிரிகளிடமிருந்து தப்பத் தன் குதிரைமீதேறி ஓடிக்கொண்டிருந்தான். அப்பொழுதுஅவனுடைய குதிரைக்கு இலாடம் அடிக்க வேண்டியிருந்தது. அவனுடைய உலகியல் மதி அவனைத்தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்குமாறு தூண்டியது. ஆனால் ஞானம் ஒரு கொல்லன் பட்டறைக்கு அவன்சென்று குதிரைக்கு இலாடம் மாற்றச் செய்தது. பின்தொடரும் எதிரிகளின் சப்தம்கேட்டபோதிலும், அவன் தன் குதிரையின் இலாடங்கள் சரிசெய்யப்படும் வரை தாமதித்தான்.எதிரிகள் நெருங்கிவி;ட்டனர். இலாடங்கள் சரிசெய்யப்பட்டுவிட்டதால் உடனடியாகத் தன்குதிரை மீதேறித் தப்பிச் சென்றுவிட்டான். அவனுடைய தாமதம் அவனுக்கு அதிக வேகத்தைத்தந்து அவனைக் காப்பாற்றிவிட்டது.

இதுபோலத்தான்நாம் நமது பணிக்குச் செல்லுமுன் நம்மைத் தாமதிக்கச் செய்கிறார். இத்தாமதம் நம்மை நமதுபணியின் மறுகட்டத்திற்கு ஆயத்தமாக்கும். அதனால் தாமதம் குறித்து நாம்கவலைகொள்ளவேண்டியதில்லை.

காத்திருக்கிறேன், பொறுமையுடன் காத்திருக்கிறேன்,

அடுத்தகட்டம் தெளிவாகும்வரை

காத்திருக்கிறேன் ஆண்டவரென்னை

அழைக்கும்வரை நான் காத்திருக்கிறேன்.

காத்திருக்கிறேன், நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்,

குறையாதிருக்கும் நம்பிக்கையுடன்,

கர்த்தர் எனக்காக உறுதி பூண்டுள்ளார்

அவரை நோக்கி என் கண்களை ஏறெடுப்பேன்.

காத்திருக்கிறேன், எதிர்பாத்துக் காத்திருக்கிறேன்,

ஒருவேளையது இன்றாயிருக்கலாம்.

கர்த்தன் சீக்கிரம் எனக்கெனத் திறந்திடுவார்,

என் வருங்கால வாழ்வின் வழியை.

காத்திருக்கிறேன் ஆம் இன்னும் காத்திருக்கிறேன்,

நான் நெடுநாள் காத்திருந்தபோதிலும்

கர்த்தன் தாமதித்தாலும், நானறிவேன்

அவர் தாமதம் என்றும் தவறில்லை அறிவேன்.

காத்திருப்பேன், இன்னும் காத்திருப்பேன்,

என் தலைவர், என்றும் பிந்திடார்

கர்த்தர் அறிவார் எனக்குக் கதவைத் திறந்திட

நான் காத்திருப்பதையும் அவர் அறிவார்.