May

மே 16

மே 16

தானியேலே, பயப்படாதே. நீ அறிவை அடைகிறதற்கும், உன்னை உன் தேவனுக்குமுன்பாகச் சிறுமைப்படுத்துகிறதற்கும் உன் மனதைச் செலுத்தின முதல்நாள் துவக்கி…… உன்வார்த்தைகளினிமித்தம் நான் வந்தேன். பெர்சியா இராஜ்யத்தின் அதிபதி இருபத்தொருநாள்மட்டும் என்னோடு எதிர்த்து நின்றான் (தானி.10:12-13).

இவ்வசனத்தின் ஜெபத்தைக் குறித்த சிறந்த பாடம் ஒன்றிருக்கிறது. ஜெபத்திற்குச்சாத்தான் இழைக்கும் நேரடியான தடையையும் நாம் இங்கு காணலாம்.

தானியேல்இருபத்தொரு நாட்களாக உபவாசித்து ஜெபித்துக்கொண்டிருந்தான். ஜெபிப்பதற்கு மிகவும்கடினமாக அவனுக்கு இருந்தது. இது அவன் ஒரு கெட்ட மனிதனாக இருந்ததினாலல்ல. அவனுடைய ஜெபம்சரியானதாக இல்லாததனாலல்ல. அது சாத்தானுடைய நேரடியான தாக்குதலினாலேயே ஏற்பட்டது.

தானியேல்ஜெபிக்க ஆரம்பித்தவுடனே அவனுடைய ஜெபம் கேட்கப்பட்டாயிற்று என்று அறிவிக்க ஒருதேவதூதனை ஆண்டவர் அனுப்பினார். ஆனால் அந்தத் தூதனை எதிர்த்துப் போராடி அவனுடையவேலையைக் கெடுக்க ஒரு கெட்ட தூதன் வந்தான். இரு தூதர்களுக்குமிடையே ஒரு போராட்டம்நடந்தது. இப் போராட்டம் வானில் நடந்த அதே நேரத்தில பூமியில் தானியேல் மிகுந்ததுன்பத்தை அடைந்தான்.

மாம்சத்தோடும், இரத்தத்தோடும் மட்டுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின்அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலத்திலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும்நமக்குப் போராட்டம் உண்டு (எபேசி.6:12).

இந்தஜெபத்திற்கான பதிலைச் சாத்தான் மூன்று வாரகாலம் தாமதம் செய்தான். தானியேல்ஏறக்குறைய ஆற்றலிழந்து பணிந்து விட்டானெனலாம். அவனைக் கொன்று போடுவதில் சாத்தான்மகிழ்ச்சியடைந்திருப்பான். ஆனால், ஆண்டவர் நாம் தாங்கமுடியாத எதையும் நம்மைத் தாக்கஅனுமதியார்.

பலகிறிஸ்தவர்களுடைய ஜெபங்கள் சாத்தானால் தடைசெய்யப்படுகின்றன. ஆனால், ஜெபங்கள்ஒன்றின்மேல் ஒன்றாய்க் குவிந்திருக்கும்பொழுது அஞ்சவேண்டியதில்லை. ஏனெனில், அவைவெள்ளம்போன்று எல்லாப் பதில்களையும் ஒரே நேரத்தில் கொண்டுவருவதுடன், வேறு பலஆசீர்வாதங்களையும் கொண்டுவரும்.

தன்னாலியன்றகேடுகளையெல்லாம், நரகம் தூயவர்களுக்குச் செய்யும் அபூர்வ ஆத்துமாக்களாக வளர்வோருக்குஅதிகத் துன்பங்களும், தொல்லைகளுமுண்டு. ஆனால், ஆண்டவர் அவர்களைக் கைவிடவே மாட்டார்.