May

மே 14

மே 14

தேவன் சொன்னபடி…அந்நாளில்தானே (ஆதி.17:23).

கீழ்ப்படிதலில் ஒரேஒருவகைதானுண்டு. அது உடனடியாகக் கீழ்ப்படிதலே. காலதாமதாமாகக் கீழ்ப்படிதல்கீழ்ப்படியாமையே. ஆண்டவர் நம்மை ஒவ்வொரு கடமையைச் செய்ய அழைக்கும்பொழுதும், நம்முடன்ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ள முன் வருகிறார். கடமையை நிறைவேற்றவது நமது பங்கு. அவருடையபங்காக அவர் நமக்குச் சிறப்பு ஆசீர்வாதங்களை அருளுகிறார்.

நாம் கீழ்ப்படிவதில் ஒரேஒரு முறைதான் உண்டு. அது ஆபிரகாம் செய்ததுபோல அந்நாளிலேயே கீழ்ப்படிவதுதான். நாம்தவறிப்போய்விடாதபடிக்கு, பல வேளைகளில் நாம் நமது கடமைகளைப் பின்தள்ளி விட்டுவிட்டு,பின்னர் நம்மாலியன்றவரை அதை நிறைவாகச் செய்து முடிக்கிறோம். நமது கடமையைச்செய்யாதிருத்தலைவிட இது சிறந்ததுதான். ஆனால் இது ஊனமான, சிதைந்துவிட்ட, அரை மனதானகடமையாற்றலேயாகும். ஆண்டவா நமக்கென்று திட்டமிட்டுள்ள முழு அசீர்வாதத்தையும் இதனால்அவர் நமக்குத் தரமுடியாது. ஆனால், அக்கடமை உடனடியாக நிறைவேற்றப்பட்டால்,அவ்வாசீர்வாதங்கள் அனைத்தும் நமக்குக் கிட்டும்.

ஒத்திப்போடுவதினால் நாம்ஆண்டவரையும், பிறரையும், ஏன் நம்மையுமே ஏமாற்றிக்கொள்ளுகிறோம். இந்த நிலைமைபரிதாபகரமானது. அந்நாளிலேயே என்று ஆதியாகமத்தில் கூறப்படும் இப்பதம் உடனடியாக, இப்பொழுதேஎன்று பொருள் தரும்.

உண்மையான விசுவாசி, ஏன்என்னும் கேள்வியைச் சிலுவையிலறைந்து கொல்லவேண்டும்மென்பான். கேள்வியேதும் கேட்காமலேஅவன் கீழ்ப்படிவான் என்று மார்ட்டின் லூத்தர் கூறுகிறார். அடையாளங்களையும், அற்புதங்களையும்கண்டாலல்லாது விசுவாசியாக மக்களில் ஒருவனாக நான் இருக்கமாட்டேன். வினாவேதும்கேட்காமலே நான் கீழ்ப்படிவேன்.

என் கடமை பதில் கூறுவதல்ல,

என் கடமை ஏனெனக்கேட்பதல்ல,

என் கடமைகீழ்ப்படிந்து, செயலாற்றுதலே

கீழ்ப்படிதல்விசுவாசத்தின் பொறுமை. அக்கினியின் மீதுள்ள மலர்.