May

மே 13

மே 13

நாம் ஏற்றபடிவேண்டிக்கொள்ளவேண்டியது இன்னதென்று அறியாமலிருக்கிறபடியால்…. (ரோ.8:26).

நம்முடைய கிறிஸ்தவ ஜீவியத்தில்நம்மை அதிகமாகக் குழப்பமடையச் செய்பவை நமது ஜெபங் களுக்கு கிடைக்கும் பதில்களே.நமக்குப் பொறுமை வேண்டுமென்று நாம் வேண்டிக்கொள்கிறோம். ஆனால் நமது தந்தை நமக்குத்தாங்கமுடியாத தொல்லைகளைத் தருபவர்களை அனுப்புகிறார். ஏனென்றால் உபத்திரவம் பொறுமையையும்உண்டாக்குகிறது என்று வேதாகமத்தில் வாசிக்கிறோம்.

பணிவானநடத்தையுள்ளவர்களாக நாம் ஆகவேண்டும் என்று ஜெபிக்கிறோம். அப்போது நமக்குத் துன்பங்கள்வருகின்றன. ஏனெனில் நாம் துன்பப்படும் காரியங்களினாலேதான் கீழ்ப்படிதலைக்கற்றுக்கொள்கிறோம்.

தன்னலமின்மைக்காகஜெபிக்கிறோம். ஆனால் ஆண்டவரோ நாம் மற்றவர்களைப்பற்றிச் சிந்தித்து, நம்மைத்தியாகம் செய்து கொள்ளுவதற்கான வாய்ப்புகளைத் தருகிறார். நம்முடைய சகோதரருக்காகநம்முடைய உயிரையே கொடுக்குமாறு சந்தர்ப்பங்களை தருகிறார்.

நாம் வலிமைக்காகவும்,பணிவுக்காகவும் ஜெபம் பண்ணுகிறோம். அப்போது, சாத்தானுடைய தூத னொருவன் நாம் மண்ணில்விழுந்து வேண்டாம், வேண்டாம் என்று கதறும்வரை, நமக்குத் துன்பங்களைத் தருகிறான்.

ஆண்டவரே எங்கள்விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணும் என்று நாம் வேண்டிக்கொள்கையில், ஒன்று நமதுபணமெல்லாம் பறந்து போகிறது, அல்லது குழந்தைகள் கொடிய நோய்க்குள்ளாகிறார்கள், அல்லதுகவலையீனம், ஊதாரித்தனம், அசுத்தம் நிறைந்த வேலையாள் நமக்கு வந்து சேருகிறான் அல்லதுஎதிர்பாரா சோதனை வந்து சேருகிறது. இதனால் இதுவரை நாம் கொண்டிராத விசுவாசம் நமக்குத்தேவைப்படுகிறது.

தேவாட்டுக்குட்டியின்வாழ்வுபோன்ற வாழ்வுக்காக ஜெபிக்கிறோம். நமக்குக் கிடைப்பதோ தாழ்வான வேலை.பெருந்துயரம் துன்பத்துக்குள்ளாகும் நமக்கு ஈடு கிடைப்பதற்கு நாம் முயற்சிக்கலாகாது.ஏனென்றால் அவர் அடிக்கப்படுவதற்காக அழைத்துச் செல்லப்படும் ஆட்டுக்குட்டியைப்போலிருந்தும்தமது வாயைத் திறவாமலிருந்தார்.

வன்செயலின்மைக்காகவேண்டிக்கொள்ளும்பொழுது வருவதெல்லாம் கடுஞ்செயல்கள், சொற்கள், எரிச்சல் இவைகள்தான்.அமைதிக்காக நாம் வேண்டுகையில் நாம் பெறுவது உணர்ச்சி மேலிடும் மனஉளைவுதான். ஆகையால்நாம் நமது ஆண்டவரை நோக்கிப்பார்த்து அமைதியைக் கற்றுக்கொள்ளுவோம். அவர் அமைதியைத்தரும்பொழுது அவ்வமைதியைக் கெடுக்க எவராலும் முடியாது.

நாம் ஆன்புக்காகவேண்டும்பொழுது அண்டவர் நம்மை விநோதமான துன்பச் சூழ்நிலையில் வைத்து, அன்பற்றமக்களிடத்தில் நம்மை நிறுத்துகிறார். அவர்களது கொடுஞ்சொற்கள் நமது நரம்புகளைச்சிதைக்கின்றன. இதயத்தைக் கிழிக்கின்றன. ஆனால், அன்பு நீடிய சாந்தமுள்ளது. அதுபாசம்காட்டும், மரியாதை தரும், கோபப்படாது, சகலத்தையும் தாங்கும். அது சகலத்தையும்நம்பும். சகலத்தையும் விசுவாசிக்கும், தாங்கும் அது ஒருக்காலும் ஒழியாது. நாம் இயேசுநாதரைப்போலாகவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறோம். அதற்கான பதில், உபத்திரவத்தின் குகையில்உன்னைத் தெரிந்து கொண்டேன் என்பது. உன் இதயம் தாங்குமா? உன் கரங்கள் வலுவாயிருக்குமா?உன்னால் கூடுமா?

அமைதிக்கும், வெற்றிக்கும்வழியாயிருப்பது ஒவ்வொரு சோதனையும், ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் அன்புள்ள நம்தந்தையிடமிருந்து நேராக வந்தவை என்று ஏற்றுக் கொள்ளுதலே. மேகங்களுக்கு மேலாக,மோட்சலோக வாசஸ்தலங்களுக்கும் கிருபாசத்தின் முன்னிலையிலுமிருந்து நமதுசூழ்நிலைகளெல்லாம் அன்புடன் அனுப்பப்பட்டவை என்று நாம் கொள்வதே அமைதிக்கும்வெற்றிக்கும் வழியாகும்.

நான் வல்லமைக்காகவேண்டினேன், அனால்,

நான் இழந்திட்டேன்தெய்வப்பிரசன்னம்,

நான் நம்பியதுநீங்கியது, இதயம் குத்துண்டது,

நான் பற்றியகரம்தன்பிடிவிட்டது.

நானிவ்வாறு பெலனற்றுநடுங்குகையில்

நான் தாங்கப்பட்டேன்தேவகரத்தினால்.

எனக்கு ஒளிவேண்டுமெனவேண்டினேன்,

என் வானின்று மறைந்தனகதிரவன், மதியும்.

எனக்கு வழிகாட்டிடும்நட்சத்திரங்களும் மறைந்தன.

எனது கலக அச்சங்கள்விளக்கை அணைத்தன.

என் கலக்கத்தில் இரவின்இருளில் நிற்கையில்

என் இயேசுவின் முகம் இருளைஒளியாக்கியதே.

அமைதி வேண்டி வருமெனக்காத்திருந்தேன்,

அமைதி அகன்றிட்டதுநோவினால், தூக்கத்தில்

அமைதி கெடுக்கும் எதிரிகள்தோன்றினர்

அமைதியில்லாப் புயலதுவும்வீசியதே

காற்றெழும்பிப்போராட்டத்தில் கலங்குகையில்

கர்த்தன் இயேசுவின் குரல்கேட்டு அமைதியானேன்.

நன்றி நவில்வேன் கர்த்தாஉமக்கே,

என் விருப்பம்போல் என்ஜெபம் கேளாததால்,

எனக்கு ஈந்தீர் உம்நலமெல்லாம்,

இன்றேயவை தந்தனபாக்கியங்கள்.

நான் தேடும் நலன்களையல்ல,எனக்கு

நாதா தருவீர் உம்சித்தப்படிதானே