May

மே 11

மே 11

தீயையும் தண்ணீரையும்கடந்து வந்தோம். செழிப்பான இடத்தில் எங்கைளக் கொண்டுவந்து விட்டீர் (சங்.66:12).

ஓய்வைப்போராட்டத்தின்மூலம் பெறுபவனே நிறைவான ஓய்வினைப் பெறுவான். இது முரணாக இருக்கிறது.போராட்டத்தினின்று கிடைக்கும் அமைதி, புயலுக்குப் பின் ஏற்படும் அமைதியைப்போன்றதல்ல. ஆனால், அது புயுலுக்குப்பின் ஏற்படும் கொந்தளிப்பின் தூய்மையானஅமைதியாகும்.

செல்வந்தனாக, துயரம்அனுபவியாதவனாக இருப்பவனுக்கு மன அமைதியும், மனவலிமையும் கிடையாது. அவனுடைய பண்புகள் இன்னும்சோதனைகளுக்குள்ளாகவில்லை. ஒரு சிறு அதிர்ச்சியைக்கூட தன்னால் எவ்வாறுதாங்கிக்கொள்ளமுடியும் என்று அவன் அறியான். புயலைச் சந்தித்துப் போராடாத மாலுமி,பததிரமாகத் தன் கலத்தைச் செலுத்தக்கூடியவனல்ல. அவன் நல்ல அமைதியான காலநிலைப்பயணத்திற்கே ஏற்றவனல்ல. ஆனால் புயல் ஏற்படும்பொழுது கப்பலை ஓட்டும் மீகாமன்,புயல்களை எதிர்த்துப் போராடியவனாயிருக்கவேண்டும். புயல் வீசும் நேரத்தில் அடிப்பகுதிவலுவுள்ளதாவெனத் தெரிந்தவனாகவும் இருக்கவேண்டும். அதன் நங்கூர அமைப்புகளெல்லாம் சரியானநிலையில் உள்ளனவா என்று அவன் தெரிந்திருக்கவேண்டும்.

நமக்குத் துன்பங்கள்நேரிடுகையில் முதலாவது நம்மால் எவற்றையும் தாங்கிக் கொள்ளமுடியாது போகிறது.நமக்கிருக்கும் சிறு சிறு நம்பிக்கைகளும் நாசமாகிவிடுகின்றன. காற்றிலடிபட்டபசுங்கொடிபோன்று விழுந்து விடுகின்றன. நமது ஆரம்ப அதிர்ச்சி நீங்கியவுடனே, நம்மால்நிமிர்ந்து பார்க்கமுடியகிறது. நாம், இது அண்டவருடைய செயல், என்று கூறக்கூடிய நிலைக்குவருகிறோம். சிதைந்து விழுந்துபோன நம்பிக்கையை விசுவாசம் தூக்கி நிறுத்துகிறது.மறுபடியும் நமது நம்பிக்கையை ஆண்டவருடைய பாதத்தில் வைக்க நம்மால் முடிகிறது. இதன் முடிவு?நமக்கு மன உறுதியும், அமைதியும் பாதுகாப்பும் கிடைக்கின்றன.

என் வாழ்வில்எதிர்காற்றுகள் வீசலாயின,

என் சிறுகப்பல்கவலைகளால் அடிபட்டது,

என் திட்டம் சிதைந்து,என் இருதயம் நிறைந்தது

என் போராட்டத்தால்,நம்பிக்கை இழந்திட்டேன்.

போராட்டம் நிறுத்தி,அமைதி கூறினார்,

எங்கும் அமைதி நிலவிடமனதிலும்

பங்கமில்லா இன்பம்நிறைந்தி;ட்டதே.

அச்சம் ஐயமெனும் ஒருபெருங்காற்று

நிச்சய மாயெழுந்து இருட்டடித்தது

இச்சமயமென் மனதில்தெளிவில்லை

துச்சமான ஒளிகூட எனை நடத்தஇல்லையே

என்னால், தாங்க இயலாது இவ்விருளை,

என்செய்வேன் நாளெனத்திகைக்கையில்,

அவர் எழுந்தார் அருளவதனம்தனைக்கண்டேன்,

அவர் அருளால் அமைதிநிலவிற்றே.

அலைகளின் கீழ் ஆழ்ந்ததென்இன்பம்,

அலையலையாய்ச் சோதனைகள்துன்பம்

அனைத்தும் நாசம்போலத்தோன்றியது

என்னைக்காப்தற்க்கெவருமில்லை

எனக்கு விடுதலைதருவாரெவருமில்லை

என்று நான் ஏங்குகையில்,எழுந்தாரவர்.

ஒருகுரல் தந்தார், யாவும்அமைதியாயிற்றே

ஒருவர்மட்டும் நின்றார், அவர்ஆண்டவர்.