May

மே 9

மே 9

ஆபிரகாமோ, பின்னும்கர்த்தருக்கு முன்பாக நின்றான் (ஆதி.18:2).

ஆண்டவருக்குநண்பனாயிருப்பவன்தான் அவரிடத்தில் பிறருக்காகப் பரிந்து பேசமுடியும். ஒருவேளைஆபிரகாமுடைய விசுவாசத்தின் உயர்வும், ஆண்டவரிடம் அவன் கொண்டிருந்த நட்புறவும்எளியவர்களாகிய நம்மால் எட்ட முடியாதவனாக இருக்கலாம். இதனால் மனம் தளர்ந்துபோகவேண்டாம். விசுவாசத்தில் ஆபிரகாம் வளர்ந்தான். படிப்படியாகத்தான் வளர்ந்தான்.தாண்டிக்குதித்து அவன் வளரவில்லை. நாமும் அவனைப்போல் விசுவாசத்தில் வளரலாம்.

எவனொருவனுடைய விசுவாசம்வெகுவாகச் சோதிக்கப்பட்பொழுது வெற்றியும் அடைந்தானோ, அவனுக்குத்தான் மிகக்கடினமானசோதனைகள் வரும்.

மிகவும் சிறப்பானவிலைமதிப்புள்ள இரத்தினக்கற்கள் கவனத்துடன் வெட்டப்பட்டு மெருகேற்றப்படுகின்றன.விலைமதிப்பில் அதிகமாகும் உலோகங்கள் உயர் வெப்பத்தில் உருக்கப்பட்டுச்சுத்தமாக்கப்படுகின்றன. கடுஞ் சோதனை ஒன்றில் ஆபிரகாம் வெற்றி பெற்றதால்தான் அவன்விசுவாசிகளின் தகப்பன் என்று அழைக்கப்பட்டான் (ஆதி.22ம் அதிகாரம்).

ஆண்டவருடைய கட்டளைகள்என்பது அவன் தூய்மைப்படுத்தப்பட்ட, உள்ளார்வமிக்கவனாய், ஆனால், துணிவு மிக்ககீழ்ப்படிதலுடன் மோரியா மலைக்குச் செல்வதைப் பார். அவனுடைய அருமை மகன்,பலியிடப்போகிறவன் அருகில் நடந்து செல்கிறான். அவன் அதிகமாக நேசித்துச் சேவைசெய்தஆண்டவருடைய கட்டளை மகனைப் பலியிடவேண்டுமென்பது.

ஆபிரகாமுடைய செயல்,ஆண்டவர் செய்வதைக் கேள்வி கேட்கும் நமக்கும் எத்தனை வன்மையான கண்டிப்பு. இந்த மாபெரும்காட்சியைப்பற்றிய நமது அவநம்பிக்கையான அவிசுவாசங்களை விட்டொழிப்போம்.காலாகாலங்களுக்கும் தரப்படும் ஒரு செயல் விளக்கம் அது. அதை தேவதூதர்களேகவனித்துக்கொண்டிருந்தனர்.

இந்த மனிதருடைய விசுவாசம்வலுவாக நிற்குமா? அது ஆண்டவருடைய மக்கள் அனைவருக்கும் வலிமையும் உதவியும் தரவல்லமையுடையதாயிருக்குமா? இதன்மூலமாக அவர் ஆண்டவர்மேல் கொண்டிருக்கும் அசையா விசுவாசம்,அவருடைய உண்மையை மெய்ப்பிக்கும் என உலகிற்கு அறிவிக்குமா?

ஆம், மாபெருஞ்சோதனையிலும்விசுவாசம் வெற்றி பெற்றவுடனே கர்த்தருடைய தூதனானவர், கர்த்தராகிய இயேசுவே, யேகோவாவே,எவரில் தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் ஆம், என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதோஅவரே ஆபிரகாமை நோக்p, நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுதுஅறிந்திருக்கிறேன் என்றார். நீ என்னை முற்றிலும் நம்பினால் நானும் உன்னை நம்புவேன்.நீ என்றும் எனது நண்பனாகவே இருப்பாய். நான் உன்னைப் பெரும் பாக்கியமாகஆக்கப்போகிறேன்.

அது அவ்வாறேதான் இன்றும்உள்ளது. இன்னும் எப்பொழுதும் இருக்கும். விசுவாசத்தின் மக்கள் ஆபிரகாமைப்போலவேஆசீர்வதிக்கப்படுவார்கள்.

ஆண்டவரோடுநட்புள்ளவர்களாயிருப்பது எளிதான காரியமல்ல.