May

மே 8

மே 8

அக்கினியின் நடுவிலேஉலாவுகிறதை (தானி.3:25).

அவர்களுடைய நடமாட்டத்தைஅந்தச் சூளையின் நெருப்பினால் தடைப்படுத்த முடியவில்லை. நெருப்பின் மத்தியில் அவர்கள்உலாவிக்கொண்டிருந்தனர். அது தங்களது முடிவிற்கு அவர்கள் சென்று கொண்டிருந்த வழிகளில் ஒன்று.துயரத்தினின்று விடுதலையைக் கிறிஸ்து நாதரின் வெளிப்பாடு காட்டவில்லை. ஆனால்,துயரத்தின்மூலம் விடுதலையை அது காட்டுகிறது.

நிழல்கள் என்னைச்சூழ்ந்து என் பாதையை இருள்மயமாக்குகையில், நான் இருண்ட ஒரு சுரங்கப்பாதை வழியாகத்தான்சென்று கொண்டிருக்கிறேன் என்பதை, என் ஆண்டவரே, எனக்குக் காட்டும். ஒருநாள் யாவும்நலமாகிவிடும் என்னும் அறிவே எனக்குப் போதுமானது.

உயிர்த்தெழுதலின்மகிமையாகிய ஒலிவிமலையின் முடியில் நான் நிற்பேன் என்று கூறுகிறார்கள். ஆனால், அதற்குமேலாக எனக்குத் தேவை. என் தந்தையே, கல்வாரியின் வழி, என்னை அங்கு நடத்த வேண்டும்.இவ்வுலகின் துன்பங்களாகிய நிழல்கள், என் தந்தையின் இல்லத்திற்கென்னை நடத்திச்செல்லும் இருமருங்கும் மரங்களடர்ந்த சாலையின் மரங்களின் நிழல்களே என்பதைத்தெரிந்துகொள்ள நான் விரும்புகிறேன். உயரமான இடம் நோக்கி ஏறிச் செல்ல நான்வற்புறுத்தப்படுவது, உமது இல்லம் மலை மீதிருப்பதால்தான் என்று எனக்கு கூறும். நெருப்பின்மத்தியில் நான் நடந்தாலும், துயரம் எனக்கு கெடுதி ஏதும் செய்திடாது.

பாதை மிகக் கடினமாம்,

பாதை செங்குத்தாயேறுதே,

மலரில்லை எங்கும் முட்களே,

உயர் வானமும் கறுத்துள்ளதே.

ஒருவர் என் கரம் பற்றினார்,என் பாதை

இருவருக்கும் இனியதாயிற்றே.

சிலுவை மிகப்பெரியதென்றேன்,

குருசின் பாரம் தாங்கா தென்முதுகு,

முரடாயது கனமாயுள்ளதே

கருத்துக் கொண்டுதவ யாருமில்லர்

ஒருவர் குனிந்து என் கரம் பற்றினார். அவர்

தெரிவேன், கருத்துடன் புரிவேன் நானென்றார்.

ஏன் முறுமுறுப்புப் பெருமூச்சுடன்

என்றும் சிலுவைதனைச் சுமக்கிறோம்

எம் பாதை சீக்கிரமேதான்

நாம் விரும்புமிடத்திலேயே முடியும்.

நாதன் அவருடன் என்றும் நாம் நடந்திடின்,

நாமெடுக்கும் ஒவ்வோரடியும் இனிதாகுமே.