May

மே 5

மே 5

அவர்கள் பாடித்துதிசெய்யத் தொடங்கினபோது…. அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள் (2.நாளா.20:22).

நம்முடைய துன்பங்களைகுறித்து விவாதம் செய்து கொண்டிருப்பதை விட்டுவிட்டு, ஆண்டவரைப் பாடித் துதிக்கஆரம்பித்தால் எத்தனை நலமாயிருக்கும்! நமக்குத் தடைகள் என்று எண்ணும் காரியங்கள்ஆயிரமாயிரமாயிருக்கின்றன. அக் காரியங்களனைத்தையும், நாம் இசையெழுப்பும் இன்னிசைக்கருவிகாகப் பயன்படச் செய்யலாமே. அதை எவ்வாறு செய்வதென்பதை நாம்தெரிந்துகொள்ளவேண்டும்.

சில மனிதர்கள் ஆழ்ந்துசிந்திப்பவர்களாயிருக்கிறார்கள். சிலர் தியானம் செய்கிறவர்களாகிவிடுகின்றனர். மற்றும்சிலர் வாழ்க்கையின் சம்பவங்களை எடைபோட்டுப் பார்க்கின்றனர். ஆண்டவர் இயற்கையாய்ச்செய்யும் காரியங்களை ஆராய்ச்சி செய்து ஏன் தாங்கள் தங்களுடைய வாழ்க்கையில்அல்லுறவேண்டுமெனச் சிலர் ஆச்சரியத்திலாழ்ந்துவிடுகின்றனர். இவர்களெல்லாரும் மிகமகிழ்ச்சியுள்ளவர்களாகிவிடக்கூடும். அவர்கள் தங்களுக்குள்ளே சிந்தனை செய்வதை விட்டுத்தங்கள் அனுபவங்களை உற்றுநோக்கி அவைகளுக்காக ஆண்டவருக்குத் துதிகளை ஏறெடுக்கவேண்டும்.அவ்வாறு அவர்கள் செய்தால், அவர்கள் மகிழ்ச்சியுள்ளவர்களாவார்கள்.

நமது கவலைகளை ஆராய்ந்துஅறிந்து விரட்டுவதைக் காட்டிலும், இலகுவாகப் பாடி அவைகளை விரட்டிவிடலாம். காலையில்பாடுங்கள். பறவைகள் அதிகாலையில் பாடும் உயிரினங்கள். உயிரினங்களனைத்திலும்கவலையற்றிருப்பவை பறவையினங்களே.

மாலையில் பாடுங்கள். இராபின்எனும் பறவை நாளின் இறுதியாகச் செய்யும் வேலை பாடுவதே. அவைகள் மரத்தின்உச்சிக்கிளையிலமர்ந்து தங்கள் துதியின் கீதத்தைப் பாடிப் பின் உறங்கிவிடுகின்றன.

நாம் காலையிலும்,மாலையிலும், ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து பாடிக்கொண்டே இருக்கக்கூடுமானால் எவ்வளவுநலமானதாக இருக்கும்.

கீதம் தாழ்ந்து சில வேளைஇறங்கிடினும்,

கீதம் உன்னிலிருந்துஎன்றும் வந்திடட்டும்,

கீதம் இப்பொது தாழ்ந்துஸ்தாயியிருந்தாலும்,

உச்ச ஸ்தாயியோடு சேர்ந்துபாடு

வாழ்வின் வானில் மறைப்புக்களால், உன்

வாழ்வின் கதிரவன் மறைந்தாலும்,

நிழல் உன் கீதத்தால் மறைந்து,

கரைந்திடும், நீ கதிரவைனை கண்டிடுவாய்.

என்றும் உன் கீதம் பாடு. விட்டிடாதே,

இன்று குரல் இனிமையற்றிருப்பினும்,

உன்குரல் இன்று குறைந்துபோயிருப்பினும்,

உன் ஆவியில் கீதம் நீ பாடிக் கொண்டிரு.

இன்றுன் கீதம் பாடிடாது விடாதே நீ,

இங்குன் கீதம் உன் ஆன்மா பாடட்டும்.

எங்கு நீ சென்றிடினும் உன்னுடன் வரும்

பங்கமில் நாட்டுக்கன்னை எடுத்துச்செல்லும்.