May

மே 4

மே 4

அவர் காயப்படுத்திக்காயங்கட்டுகிறார். அவர் அடிக்கிறார். அவருடைய கை ஆற்றுகிறது (யோபு 5:18).

பெருந்துயரத்தின் சேவை

பெரிய நிலநடுக்கம்ஏற்பட்டிருந்தது. அதனால் சிதைவுற்ற குன்றுகளினடியில் நாம் செல்லும்பொழுது, பெருஞ்சேதம்விளைவித்த அந் நில நடுக்கத்தின்பின் ஆழ்ந்த அமைதிக் காலங்கள் இருக்கக் காண்கிறோம்.இடிந்து, உருண்டு, விழுந்த பாறைகளினடியிலே, முகம் பார்க்குமளவுக்கு அமைதியான தெளிவானநீர்த்தேக்கங்கள் காணப்படுகின்றன. அவற்றில் அல்லிமலர்கள் மலர்ந்துள்ளன. கரையிலுள்ளநாணலில் சிறு அசைவு காணப்படுகிறது. இடிந்து, சிதைந்து நாசமாகிப்போன சிற்றூர் மறுபடியும்எழும்புகிறது. துயரங்களும், சாவுகளும் மறக்கப்பட்டுப்போயின. வெண்மையானஊசிக்கோபுரத்தையுடைய தேவாலயத்திலிருந்து தெய்வீக பாதுகாப்புக்காக விண்ணப்பங்கள்காலைவேளைகளில் எழும்புகின்றன. ஏனெனில், பூமியின் ஆழங்கள் அவர் கையில் இருக்கிறது.பர்வதங்களின் உயரங்களும் அவருடையவைகள்.

நிலநடுக்கத்தால் ஒருநாள்ஆண்டவர்,

நிலத்தை உழுதிட்டார், அவர்சால்கள்

ஆழமாயின, வெளிகள்உயர்ந்திட்டன,

ஆடுகள் போன்று குதித்தன,குன்றுகள்.

ஆனால் அதுவே மலைதன் இரகசியம்,

ஆழமாம் அதனுள்ளத்தில் ஓர் அமைதி.

ஆண்டவர் தரும் அமைதி நித்தியமாய்

ஆவதே அவ்வமைதியின் உறுதியாம்.

அழகின் இருப்பிடமாயதை ஆக்கினார்,

அவர் கருணையின் இல்லமாயதை,

காலைக்கதிரவன் படிவததன் மேலே,

மாலைக்கதிரவன் மறைவது மங்கேயே.

அவரனுப்பும் காற்று தந்திடும் செய்தியை,

அலை கடல் மீதிருந்து வந்திடும் செய்தியை

ஆழமாம் பள்ளங்களிலும் வீசுமலை,

ஆராவாரமாய்ப் பெருமழை யினூடேயும்.

புது ஆறுகளின் பிறப்பிடங்களவை

புகலிடமாகிடுமவை கருமுகில்களுக்கே

புதிய கருத்தும் விடுதலையும் தேடும்,

மக்கள் இன பிறப்பிடமே.

களைத்த நகரமாந்தர்கள் தேடிக்

கருத்துடன் வருவார் மலைக்கோவிலுக்கே,

கர்த்தனவரருளுவார் தம் ஆசி,

கடந்தவர் மத்தியிலவர் செல்கையிலே.

நான் கண்டேன் மலையின் இரகசியம்,

நவில இயலா மாண்பழகுள்ளதாம்,

இதுவே இக்கட்டான வாழ்வு நிலையில்

இதமாய்த் தாங்கிடும் விசுவாசம்.

நில நடுக்கம் ஒன்றால் ஆண்டவர், மா

மலையதனைப் பிளந்தார். காணுவேன்

அவர் கிருபை, அமைதியுடன் உயிர்ப்பும்

அவரால் என்றும் நான் காண்பேனே.