May

மே 3

மே 3

அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ, அவன் இரட்சிக்கப்படுவான்(யோவே.2:32).

நான் ஏன்அவரை நோக்கிக் கூப்பிடுவதில்லை? அவர் என் அருகிலேயே இருக்கும்பொழுது, நான் ஏன் என்அயலகத்தாரைத் தேடி இங்குமங்கும் அலையவேண்டும்? நான் ஏன் அமர்ந்து, சிந்தித்துத்திட்டங்களைத் தீட்டவேண்டும்? என்னையும், என் பாரங்களனைத்தையும் சுருட்டி எடுத்து என்ஆண்டவர்மேல் நான் ஏன் வைத்து விடக்கூடாது? நான் ஏன் என் உயிருள்ள கர்த்தரை நோக்கிநேராக ஓடிச் செல்லவில்லை? வேறு எங்கும் நான் விடுதலையைத் தேடி அலைவது வீண் அன்றோ? என்ஆண்டவரிடத்தில் நான் சொல்வேனாகில் எனக்கு விடுதலை நிச்சயம் கிடைக்கும். அவருடையஅரச ஆணையான உறுதிப்பாடு எனக்கு உள்ளதே. அது எனது விடுதலையை உறுதிசெய்யுமன்றோ?

அவரிடத்தில் செல்லவேண்டுமா, வேண்டாமா என்று கேட்கவேண்டிய அவசியம் எனக்கேதுமில்லை.எவனோ என்னும் அப் பதம் மிக விரிவானது. அனைவரையும் தன்னுள் அடக்கியுள்ளது. எவனோ,என்னும் பதம் என்னையம் உட்படுத்தியுள்ளது. ஏனெனில் அவரைத் தொழுது கொள்ளுகிறவர்கள்அனைவரையும் உட்கொண்டது அது. எனவே நான் இவ்வசனம் கூறுகிறபடி செய்வேன். இத்தனை பெரியவாக்குத்தத்தத்தைத் தந்த மேன்மை நிறைந்த என் ஆண்டவரிடம் உடனே செல்வேன்.

என்காரியம் உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டியது. எவ்வாறு எனக்கு விடுதலை வருமென்று நான்அறியேன். அது என் காரியமன்று. வாக்குச் செய்தவர் அதை நிறைவேற்றுவதற்கான வழிவகைகளைச்செய்வாரென்று நான் நம்பியிருக்கிறேன். நான் செய்யவேண்டியதெல்லாம், அவர் சொற்களுக்குக்கீழ்ப்படிதலே, அவருக்கு ஆலோசனைகளைக் கூற நான் எம்மாத்திரம். நான் அவருடையபணியாளேயன்றி, அவருடைய ஆலோசகன் அல்லவே. நான் அவரிடம் செல்வேன். அவர் என்னைவிடுவிப்பார்.