May

மே 2

மே 2

கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார். அவருடையஇராஜரீகம் சர்வத்தையும் ஆளுகிறது (சங்.103:19).

கொஞ்சகாலத்திற்குமுன்பு, ஓர் இளவேனிற்காலக் காலையில் என் வீட்டின் கதவைத் திறந்து வெளியே வந்தபொழுதுஒரு குளிரான புழுதிக் காற்று கீழ்த்திசையிலிருந்து எழும்பி வர நான் கண்டேன்.

என்கதவிலுள்ள தாழ்ப்பாள்களைத் திறந்துகொண்டே பொறுமையற்றவனாக, இக் காற்று மாறாதா?என்று கூற இருந்தேன். ஆனால் வார்த்தைகள் தடைப்பட்டன. நான் அவ் வாக்கியத்தை முடிக்கவேஇல்லை.

என்வழியில் நான் தொடர்ந்து செல்லும்பொழுது இச்சம்பவம் எனக்கு ஓர் உவமையாக மாறிவிட்டது.ஒரு தேவதூதன் என்னிடம் வந்து ஒரு திறவுகோலை என்னிடம் நீட்டி, என் தலைவர் உமக்குத் தம்அன்பு வாழ்த்துக்களைக் கூறி, இதை உம்மிடம் சேர்க்கக் கூறினார் என்றான்.

நான்வியப்புடன், அது என்ன என்று கேட்டேன். அது காற்றின் திறவுகோல், என்று கூறிமறைந்துவிட்டான்.

எனக்குப்பெருமகிழச்;சி – காற்றுகள் உற்பத்தியாகும் உயர் இடங்களுக்குச் சென்று அவைகள் புறப்படும்குகைக்கு முன் நின்றேன். இது கீழ்காற்று. இதை ஒரு வழியாக இன்று முடித்துவிட வேண்டும். இனிஅது நம்மைத் தொல்லைப்படுத்த விடலாகாது என்று கூறி கொடுரமான அக்காற்றை அதனுடையகுகையினும் தள்ளிக் கதவைப் பூட்டி திறவுகோலை எடுத்துக்கொண்டேன். குகைக்குள் அது அலறும்ஓசையைக் கேட்டேன். மிகுந்த மனநிறைவுடன், வெற்றி எனதே என்னும் பெருமிதத்துடன்திரும்பினேன்.

சரி இனிக்,கீழ்காற்றின் இடத்தை நிரப்ப வேண்டுமே? என்ன செய்யலாம்? என்று யோசித்தேன். இதமானதென்றலின் நினைவு வந்தது. ஆம், அது ஆட்டுக்குட்டிகளுக்கும், எல்லா இளம் விலங்குகளுக்கும்மலர்களுக்கும் ஏற்றது என்று எண்ணித் தென்றலைத் திறந்துவிடத் திறவுகோலை எடுத்தேன். அத்திறவுகோல் என் விரல்களை எரித்துவிட ஆரம்பித்தது.

என்னசெய்ய இருந்தேன்? அத் தென்றல் எத்தனை பேர்களுக்கு என்னென்ன துன்பங்கள் தருமோ? எனதுஇம் முட்டாள்தனமான செயலால் ஏற்படக்கூடிய நஷ்டங்கள் ஏராளமாகலாமே, என்று எண்ணினேன்.

திகைத்துப்போய், வெட்கம் நிறைந்தவனாக, ஆண்டவரே, தேவதூதனை அனுப்பித் திறவுகோலைத்திருப்பி எடுத்துக்கொள்ளும். இனி இவ்வாறான செயலில் நான் என்றும் ஈடுபடமாட்டேன் என்றுஜெபித்தேன்.

அவர்தாமேஎன்னருகில் நின்றார். திறவுகோலை எடுக்க அவர் தம் கரத்தை நீட்டினார். திறவுகோலை அவர்கரத்தில் வைத்தபொழுது, அக்கரங்களில் இருந்த ஆணித்தழும்புகளைக் கண்டேன். எனக்காகத்தம் அன்பு மிகுதியினால் தம்மையே தந்த என் ஆண்டவருக்கு விரோதமாகவா என் முறுமுறுப்பு? இதுஎன்னை வாதித்தது. அவர் அத் திறவுகோலைத் தம் இடையில் செருகிக்கொண்டார். காற்றின்திறவுகோலை நீரா வைத்திருக்கிறீர்? என்று கேட்டேன். ஆம், குழந்தாய் என்றார் அவர்கருணையுடன்.

நான்ஏறிட்டுப் பார்த்தபொழுது அவருடைய இடையில் என் வாழ்க்கையின் திறவுகோல்களெல்லாம் இருக்கக்கண்டேன்.வியப்புற்றேன். என் வியப்பைக் கண்ட அவர், என் இராஜரீகம் அனைத்தையும் ஆளுகிறது என்பதைநீ அறியாயோ, குழந்தாய் என்றார். எல்லாவற்றின் மேலுமா? அப்படியானால் நான்எதைக்குறித்தும் முறுமுறுக்கலாகாதோ? என்றேன்.

அன்புடன்என் தோளின்மீது தம் கரத்தை வைத்து என் குழந்தையே, யாவற்றின்மீதும் அன்பு செலுத்திநம்பிக்கை வைத்து, அவற்றிற்காகத் துதிசெலுத்துவதிலேயே உனது பாதுகாப்பு உள்ளது என்றார்.