May

மே 1

மே 1

பொய்யுரையாத தேவன் (தீத்து1:3).

ஒரு காரியம் திட்டமாகநடந்தே தீரும். அது மெய்யானது என்று ஆண்டவர் கூறியிருப்பதால், அதைக் கண்டு, அதுமெய்யாகவே இருப்பதால் மகிழ்ச்சிகொண்டு, ஆண்டவரே அதைக் கூறியிருப்பதால் அதைக்குறித்து அமைதி கொண்டிருப்பதே விசுவாசம் ஆகும். நம்முடைய மனோ வலிமையினால் அக் காரியம்நடந்தே தீரும் என்று நிச்சயித்துக் கொள்வதல்ல விசுவாசம்.

விசுவாசம் இறைவனதுவாக்குறுதிகளை நம்புகிறது. வாக்குறுதியாயிருக்கும் ஒரு காரியம் நிகழ்வது நமது ஒத்துழைப்பைப்பொறுத்தது. ஆனால் அதை விசுவாசம் தன்னுடையதாக்கிக்கொள்ளும்பொழுது, அது ஓர் இறைவாக்காக(தீர்க்கதரிசனமாக) ஆகிவிடுகிறது. ஆண்டவர் பொய்யுரையாதவராகையால், அது நடந்தே தீரும்என்ற உறுதியை நம் உள்ளத்தில் ஏற்படுத்தி விடுகிறது.

அதிகமானவிசுவாசத்திற்காக மக்கள் வேண்டிக்கொள்ளுவதைக் கேட்டிருக்கிறேன். ஆனால் அவர்களின்ஜெபத்தின் அடிப்படையை நாம் நோக்கினால், அவர்கள் வேண்டுவது அதிக விசுவாசமல்ல,விசுவாசத்திலிருந்து காட்சி அடைவதே.

எனக்கு இது நன்மையானது.ஆதலால், ஆண்டவர் தாமே பார்த்து இதை எனக்குத் தந்திருக்கிறார், என்று விசுவாசம் ஒருபொழுதும் கூறாது. ஆண்டவர் இதை எனக்னெ;று அனுப்பியிருக்கிறார். அதலால், இது எனக்குநலமானதாகவே இருக்கும் என்றுதான் விசுவாசம் கூறும்.

இருளில் ஆண்டவருடன்நடக்கும்பொழுது அவர் தன் கரத்தை இன்னும் இறுக்கமாய்ப் பற்றிக்கொள்ளவேண்டும் என்றேவிசுவாசம் வேண்டுதல் செய்யும்.

உன் விசுவாசத்தில்விசுவாசம் வை, என

உன் மேய்ப்பர்உன்னிடம் கேட்கவில்லை,

என்மேல்விசுவாசங்கொள், மகனே

என்றேயவர் கேட்கிறார்இதை அறிவாய்.

என்னிடம் வா என்றவர்கூறியதில்

இன்றே இக்கருத்தை நீகண்டிடு.

இருளிலும் ஒளியிலுமவர்சித்தமதை

மருளாமல்செய்திட்டபின்னர் நீ

மன்னர் இயேசுவிடம்மற்றவைவிட்டு

மனங்கலங்காதேஅமர்ந்திருப்பாய்.