March

மார்ச் 31

எதிர்காற்றாயிருந்தபடியால் (மத்.14:24).

மார்ச் மாதத்தில் காற்றுஅகோரமாயிருக்கும். அவைகள் என் ஜீவியத்தில் மிகக் குழப்பான காலத்தைக்குறிப்பிடவில்லையா? இப்படிப்பட்ட காலங்களைக் குறித்து நான் அறிந்துள்ளபடியால் நான்சந்தோஷப்படவேண்டும். எப்போதும் மத்தியானம்போலிருக்கும் தாமரை நாடு என்றழைக்கப்படும்நாட்டிலும், காற்று, ஒருபோதும் பலமாக வீசாத அவிலியன் பள்ளத்தாக்கின் புல்மைதானத்திலும் தங்குவதைப் பார்க்கிலும் மழை பெய்து வெள்ளம் ஏற்படுவது நலம்.சோதனையாகிய புயல்கள் கடுமையாகத் தோன்றுகின்றன. ஆனால் அவை என்னை ஊக்கமாய் ஜெபி க்கஏவுகிறதில்லையா? அவை என் குணத்தைச் சீர்படுத்திச் செல்வதில்லையா?

உற்றாரை இழக்கும் புயல்கடுரமானதே. ஆனால் பிதா அவற்றின் மூலமாய் என்னை தம்மண்டையில் இழுத்துக் கொள்கிறார்.தமது பிரசன்னத்தின் மறைவில் மெதுவாக எனது இருதயத்தில் பதியும்படி பேசுகிறார். எதிர்கர்றினிடையே எனது கப்பல் அலைகளால் அலைக் கழிக்கப்படுமத்போது மாத்திரமே நான்காணக்கூடிய ஒரு விசேஷித்த மகிமை இயேசுவிடம் உண்டு.

இயேசு கிறிஸ்து புயல்வராதபடி நம்மைக் காப்பவரல்ல. ஆனால் புயலில் நமக்குப் புகலிடம் ஆவார். பிரயாணம் இலகுவாயிருக்கும்என்பது அவர் வாக்கல்ல. நாம் பத்திரமாய்க் கரை சேர்வோம் என்பதே அவர் வாக்கு.

பரலோகப் புயலுக்கு நேராய்உன் பாயை விரி

அப்போது எந்தக் காற்றுஅடித்தாலும் பரவாயில்லை.

ஒரு பாறையும் உனக்குச்சேதஞ் செய்யாது

காற்றின்மையால்தாமதிக்க நேரிடாது

மூடுபனி, புயலாலும் தடைபண்ணாது,

நீ தொலை தூரத்தில் சுற்றி அலைந்தாலும்,

உப்பு நிறை கடல் பொங்கி,நுரை தள்ளினாலும்

எல்லாக் காற்றும் உன்னைத்துரிதமாய் வீடு சேர்க்கும்.