March

மார்ச் 28

சம்பவிப்பதுஎன்னவென்றால், சர்வ பூமிக்கும் ஆண்டவராகிய கர்த்தரின் உடன்படிக்கைப் பெட்டியைச்சுமக்கிற ஆசாரியர்களின் உள்ளங்கால்கள், யோர்தானின் தண்ணீரிலே பட்டமாத்திரத்தில்,மேலேயிருந்து ஓடிவருகிற யோர்தானின் தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நிற்கும் என்றான்(யோசு.3:13).

தைரியமான லேவியர்! அவர்கள்கால்களில் தண்ணீர் படும்வரை தண்ணீர் பிளவுபடவில்லை. அவர்கள் உடன்படிக்கைப் பெட்டியைநதிக்குள் தூக்கிச் சென்றார்கள். இதனால் இவர்கள் செய்கை வியத்தக்கதே. கர்த்தர்வேறொன்றும் வாக்குச் செய்யவில்லை. கர்த்தர் விடாப்பிடியான விசுவாசத்தையேகனப்படுத்துகிறார். வாக்குத்தத்தமும் அது ஒன்றையே எதிர்பார்க்கிறது. சுற்றிலும் பார்த்துநின்ற ஐனங்கள், அவர்கள் நடந்து செல்வதைப் பார்த்து, நான் அப்படிப்பட்ட மோசமானகாரியத்திற்குள் தலையிடமாட்டேன். அந்த உடன்படிக்கைப்பெட்டி அடித்துக்கொண்டு போய்விடும்என்று சொல்லியிருப்பார்கள். அப்படியல்ல., அந்த ஆசாரியர்கள் உலர்ந்த தரையில் உறுதியாய்நின்றார்கள். தேவனுடைய திட்டங்கள் நிறைவேற உறுதியாய் நின்றார்கள். தேவனுடையதிட்டங்கள் நிறைவேற நமது விசுவாசம் தேவை என்னும் சத்தியத்தை நாம் மறந்து விடக்கூடாது.தேவனுக்கு உதவி செய்ய முன்னோக்கி வாருங்கள்.

உடன்படிக்கைப் பெட்டியைத்தோளில் சுமந்து செல்ல தடிகள் உண்டு. உடன்படிக்கைப் பெட்டி தானே நகரவில்லை. அதைச்சுமந்து செல்ல வேண்டியிருந்தது. கர்த்தர் சிற்பியாயிருக்கும்போது, மனிதரே கொல்லரும்,கூலியாள்களும் ஆகின்றனர். விசுவாசம் கர்த்தருக்குக் கைகொடுக்கிறது. அது சிங்கத்தின் வாயைஅடைத்து அக்கினியின் வெப்பத்தைத் தணிக்கிறது. அது தேவனைக் கனப்படுத்துகிறது. தேவன்அதைக் கனப்படுத்துகிறார். தேவன் தமக்கும் சரியென்று தோன்றும் வேளையில் தம்முடையவாக்குத்தத்தை நிறைவேற்றத் தகுந்த விசுவாசம் நம்மில் உண்டானால் எத்தனை நலம்.லேவியரைப் பின்பற்றி, நம்முடைய பாரச்சுமையைத் தோள்மேல் தூக்குவோமாக. தேவனுடையசவப்பெட்டியைச் சுமக்கிறவர்களாக நாம் காணப்படவேண்டாம். இது ஜீவனுள்ள தேவனுடையஉடன்படிக்கைப் பெட்டி. ஆகையால் வெள்ளத்தை நோக்கிச் செல்கையில் பாடுங்கள்.

அப்போஸ்தலரால் ஸ்தாபிக்கப்பட்டசபைகளுக்குப் பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டபோது, அவர்கள் ஆவியில் தைரியங்கொண்டதுகவனிக்கத்தக்க காரியம். தேவனுக்காகப் பெரிய காரியங்களைச் செய்ய முயன்றும்,தேவனிடத்திலிருந்து பெரிய காரியங்களை எதிர்பார்த்தும் இருப்பவர்களிடம் இருக்க வேண்டியமுக்கிய தன்மை பரிசுத்த துணிவே. இயற்கைக்கு மேலான ஒருவராகிய தேவனோடு நாம் பழகிமனிதரால் கூடாததை, அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும்போது, கொஞ்சம் அல்ல. அதிகம்பெற்றுக்கொள்வதே எளிது. பயந்து, துணிவின்றிக் கரையில் நிற்பதைவிட துணிவானநம்பிக்கையில் நிற்பதே இலகுவாயிருக்கும்.

அதுபோலவே, விசுவாச ஜீவியத்தில்கடலோடிகளைப் போல், படகுகளை ஆழத்தில் தள்ளிக்கொண்டுபோய்க் கர்த்தரால் எல்லாம்ஆகும், அவரை நம்புகிறவர்களுக்கு எல்லாம் ஆகும் என்பதைக் கண்டுபிடிப்போமாக.

இன்றையதினத்தில்தேவனுக்காகப் பெரிய காரியங்களைச் சாதிக்க முயலுவோமாக. அவருடைய விசுவாசத்தைக் கொண்டுஅவருடைய பலம் எல்லாவற்றையும் சாதிக்கும் என்று நம்புவோமாக.