March

மார்ச் 27

ஆதலால் இக்காலத்துப்பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்றுஎண்ணுகிறேன் (ரோ.8:18).

இங்கிலாந்தில் ஒருதிருமணத்தில், ஒரு விசேஷித்த காரியம் நடந்தது. பத்து வயதாயிருக்கும்போது, ஒரு விபத்தால்கண்ணிழந்து, உயர்தரக் கல்லூரியில் படித்துப் பட்டங்கள் வாங்கி, ஓர் உன்னதபதவியிலிருந்த பணக்கார வாலிப மாப்பிள்ளை, ஓர் அழகிய பெண்ணை மணந்தான். அவள் முகத்தைஅவன் பார்த்ததில்லை. அவன் கலியாணத்திற்குச் சற்று முன்புதான் கைதேர்ந்த வைத்தியரிடம்சிகிச்சை பெ;றுக்கொண்டு வந்தான். அதன் பலன் திருமணத்தன்றே தெரிந்தது.

அந்த நாள் வந்தது.விருந்தினராலும், வெகுமதிகளாலும் ஆலயம் நிறைந்தது. நாட்டின் மந்திரிகளும், தளகர்த்தர்களும்,பிஷப்களும், கற்றோரும், ஆண் பெண் பலரும் குழுமியிருந்தனர். மணமகன் மண உடை அணிந்துவந்திருந்தான். அவன் கண்கள் இன்னும் மூடிபோட்டு மூடப்பட்டிருந்தன. கண் வைத்தியரும்அங்கிருந்தார். பெண் தன் தலை நரைத்த தகப்பன் கையி;ல் சாய்ந்துகொண்டு ஆலயத்திற்குள்நுழைந்தாள். அவள் மிகுந்த சந்தோஷ உணர்ச்சியால் பேசச் சக்தியற்றிருந்தாள். பிறர்பார்த்து வியந்த தன் பேரழகைக் காதலன் தடவி மாத்திரம் பார்த்திருந்தான். அன்றைய தினம்அத்திருவழகைத் தன் காதலன் தன் சொந்த கண்களால் காண்பான் என்று அவள் உள்ளம் எண்ணிமகிழ்ந்தது. மங்கள வாத்திய இன்னிசை ஆலயமெங்கும் நிரம்ப அவள் பீடத்தண்டைநெருங்குகையில், ஒரு விநோதமான காட்சியைக் கண்டாள்.

தகப்பன் அங்கு தன்மகனோடு நின்றார். நிபுணரான கண் வைத்தியர் மாப்பிள்ளை முன் நின்று கண்கட்டுகளைக்கடைசிமுறையாக அவிழ்த்துக்கொண்டிருந்தார். தான் விழித்திருக்கிறேனா என்ற நிச்சயமற்றமனிதன்போல் தள்ளாடிக்கொண்டே மாப்பிள்ளை ஓர் அடி எடுத்து வைத்தான். ஆலயத்திலுள்ள ஒருகண்ணாடி ஐன்னலிலிருந்து ஒரு ரோஐhநிற வெளிச்சம் அவன் முகத்தில் விழுந்தது. ஆனால் அவன்அதைக் கவனிக்கவில்லை.

அவன் எதையாவது பார்த்தானா?ஆம், அவன் தன்னைத் திடப்படுத்திக்கொண்டு, தன்னில் இதற்குமுன் காணப்படாத சந்தோஷத்தோடு,கம்பீரமாய்த் தன் மணமகளை நோக்கி நடந்தான். இருவரும் ஒருவர் கண்ணை ஒருவர் நோக்கிநின்றனர். மணமகன் ஒரே நிலையில் மணமகளின் அழகைப் பருகினான்.

கடைசியாக, கடைசியாகஎன்று அவள் வியப்போடு கூறினாள். அவன் தலை வணங்கி அதே வார்த்தைகளைக் கூறினான். அந்தக்காட்சி சந்தேகமின்றி, சந்தோஷத்தை எடுத்துக்காட்டும் ஓர் ஆனந்த காட்சியாகும். ஆனால்அது துன்பத்தையும், சோதனைகளையும் சகித்த ஒரு கிறிஸ்தவன், ஆண்டவரை முகமுகமாய்ப்பரலோகத்தில் தரிசிக்கும்போது உண்டாகக்கூடிய இன்பம் எத்தகையது என்று காட்டும் ஒருசிறிய உவமையே.

தேவா, அன்பான இயேசுவே

உமக்காககாத்திருக்கிறோம்

நீர் திரும்ப வரும் நாளைஎதிர் நோக்கி,

விரும்பி, அலைந்துதிரிகிறோம்.

நாங்கள் சொல்வதிலும்,செய்வதிலும்

உம்மையே தேடி அலைகிறோம்.

கடைசியாக ஒரு சந்தோஷதினத்தில்

நாம் காத்திருப்பது நீங்கநீர் வருவீர்.

அப்போது நாங்கள் உம்மைப்பார்ப்போம்

உமது குரலைக் கேட்போம்.

இந்த நம்பிக்கையின் இன்பமேஎங்களை

உமக்காக காத்திருக்கும்படிசெய்கிறது.