March

மார்ச் 25

விசுவாசமில்லாமல்தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம். ஏனென்றால் தேவனிடத்தில் சேருகிறவன் அவர்உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிப்பார் என்றும்விசுவாசிக்கவேண்டும் (எபி.11:6).

நம்பிக்கையற்றுத்தவிக்கும் நாட்களுக்குரிய விசுவாசம்.

வேதத்தில் இப்படிப்பட்டஅநேக நாட்கள் உண்டு. அதிலுள்ள பாடல்கள் விசுவாசிகளால் ஊக்கமாய் எழுதப்பட்டவைகளே.தீர்க்கதரிசனங்கள் விசுவாசத்தைப் பற்றியவையே. விசுவாசத்தின் மூலமாகவே வெளிப்படுத்தல்உண்டாயிற்று.

நம்பிக்கையிழந்தநாட்களே ஒளிக்குச் செல்லக் கால்வைக்கும் கற்கள். அவைகள் கர்த்தரின் தருணங்களும், மனிதனுக்கு ஞானமளிக்கும் கல்விச் சாலைகளுமாம்.

சங்கீதம் 107ல் அன்பின்விருந்தைக் குறித்து ஒரு பழைய ஏற்பாட்டுக் கதை இருக்கிது. இரட்சிப்பு கிடைத்த ஒவ்வொருகதையிலும், நம்பிக்கை அற்றுப் போகும் அந்நேரமே கர்த்தருக்கேற்ற தருணம் ஆகிறது. ஒருயோசனையும் ஓடாத செயலற்ற நேரமே கர்த்தரின் வல்லமை துவங்கும் நேரமாயிருந்தது. வயதுமுதிர்ந்து இனிப்பிள்ளை பெறமுடியாது என்று ;இருந்த தம்பதிகளுக்கு உன் சந்ததியைக் கடலின்மணலைப்போல, வானத்தின் நட்சத்திரங்கள்போல பெருகச் செய்வேன் என்று கர்த்தர்வாக்களித்ததை நினைவு கூருங்கள். செங்கடலையும், அதன் நடுவில் ஏற்பட்ட இரட்சிப்பையும்குறித்து மறுபடியும் வாசியுங்கள் (யாத்.14). யோர்தான் நதியின் மத்தியில், கர்த்தரின்உடன்படிக்கைப் பெட்டி நின்றதை வாசியுங்கள் (யோசு.3:17). ஆசா, யோசபாத், எசேக்கியா(2.இராஜா.20:3) என்பவர்களின் ஜெபங்களை மறுபடியும் படித்துப் பாருங்கள். அவர்கள் அதிகநிர்பந்தப்பட்டு, என்ன செய்வோம் என்று தவித்த நேரங்களில் பண்ணின ஜெபத்தைநோக்குங்கள். நெகேமியா, தானியேல், ஓசியா, ஆபகூக் என்பவர்களின் சரிதையைப் படியங்கள்.கெத்சமனேயின் இருட்டிலும், அந்தப் பயங்கர நாட்கள் முழுவதும் அவருடைய கல்லறையினருகில்தரித்திருங்கள். ஆதிச் சபையைச் சாட்சிக்குக் கூப்பிடுங்கள். அப்போஸ்தலர் நம்பிக்கைஅற்றுப்போன தினங்களைக் குறித்து அவர்களிடம் விசாரியுங்கள்.

திகைத்து நிற்றல்நம்பிக்கையிழந்து விடுவதைவிட மேலானது. விசுவாசம் நம்முடைய நம்பிக்கையை இழக்கும்நாட்களை உண்டாக்கவில்லை. அச்சமயங்களில் நம்மைக் கை தூக்கவதும் முற்றுப்பெறச்செய்வதுமே அதன் வேலையாம். நம்பிக்கையாய் பிடித்தால் மேற்கொள்ளலாம். தீவிரவிசுவாசம் இல்லாவிட்டால் நம்பிக்கையிழக்க நேரிடும்.

தைரியமான விசுவாசத்திற்குஈடில்லா உதாரணமாக, அம்மூன்று எபிரெய வாலிபரும் இருக்கிறாhகள். நிலைமை மோசமானபோதும்அவர்கள் நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்.அவர் எரிகிற அக்கினிச் சூளைக்கும், இராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாகி எம்மைவிடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும் நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனைசெய்வதுமில்லை. நீர் நிறுத்திய சிலையைப் பணிந்து கொள்வதுமில்லை என்பது இராஜாவாகியஉமக்குத் தெரிந்திருக்கக்கடவது (தானி.3:17-18) என்று தைரியமாய்ப் பதிலுரைத்தார்கள்.விடுவிக்காமற்போனாலும் என்ற பாகம் என்னை அதிகமாய்க் கவருகிறது.

கெத்சமனேயைக் குறித்துசில வார்த்தைகள் மாத்திரம் கூற இங்கு இடம் உண்டு. அதிலுள்ள ஆகிலும் கூடுமானால் என்றவார்த்தைகளைச் சிந்தனை செய்யுங்கள். நமது ஆண்டவரின் ஆத்துமாவைக் காரிருள்மூடிக்கொண்டது. இரத்த வேர்வை சிந்துவதற்கான வேதனையும், பாதாளத்திற்கு இறங்குவதற்கான இருளுமேநம்புவதின் பலனாயிருந்தது. ஆகிலும்! ஆகிலும்!…

இப்பொழுது பாடல்புத்தகத்தையெடுத்து கஷ்டத்திலும் நம்பிக்கையைக் காட்டும் உனக்குப் பிரியமான ஒரு பாடலைப்பாடு.

தடைகளும் சோதனைகளும்,

சிறைச் சுவர்போல் சுற்றிகாணப்பட்டாலும்

என்னாலானதைச் செய்வேன்

மிகுந்ததை இயேசுவிடம்விடுவேன்

என்னைத் துக்கத்தலிருந்துவிடுவிக்க,

ஒரு மாறுதலும்காணப்படாவிட்டாலும்,

நம்பிக்கை செயலற்றநிலைமையிலும் பலம் கொள்

அவருக்காக அமர்ந்துகாத்திரு.