March

மார்ச் 23

யுத்தத்தில் அகப்பட்டகொள்ளைகளில் எடுத்து கர்த்தருடைய ஆலயத்தைப் பரிபாலிக்கும்படிக்குப், பரிசுத்தம் என்றுநேர்ந்துகொண்ட(hர்கள்) (1.நாளா.26:26-27).

பௌதீக தன்மை பூமியின்ஆழங்களிலுள்ள நிலக்கரிச் சுரங்கங்களில் புதைந்து கிடக்கிறது. அவைகள் அநேகமாயிரம்யுகங்களுக்குமுன் கடும் உஷ்ணத்தால் எரிக்கப்பட்ட பெரிய காடுகளாகும். அதுபோல ஆவிக்குரியசக்தி நம் இருதயத்தின் ஆழத்தில் சேமிக்கப்பட்டுள்ளது. நமக்கு விளங்காத வேதனையின்மூலம் உண்டானது அச்சக்தி.

நாம் மோட்சப் பிரயாணம்என்னும் புத்தகத்தில் காணப்படும் தைரிய நெஞ்சன் போல ஆகும்படியாக நம்முடைய சோதனைகள்பயன்படுகின்றன. சோதனைகளின் வழியாய் பரம இராஜாவின் பட்டணத்திற்கு வெற்றிகரமாய்நம்மோடுள்ள இதர மோட்சப் பிரயாணிகளை அழைத்துச் செல்லக்கூடியவர்களாகிறோம்.

வெற்றிகரமான சகிப்பேமற்றவர்களுக்கு நம்மை உதவி செய்கிறவர்களாக்குகிறது என்பதை மறந்துவிடக்கூடாது.முறுமுறுப்போடும், சிணுக்கத்தோடும் சகித்தல் யாருக்கும் நன்மை பயக்காது.

பவுல் தன்னோடு துக்கத்தைஅல்ல. ஜெபதுதி பல்லவியையே கொண்டு சென்றார். துன்பங்கள் அதிகமாயிருக்கும்பொழுது, அவர்அதிகமாய் நம்பி, அதிகமாய்ச் சந்தோஷப்பட்டார். அவர் உங்களுடைய விசுவாசமாகிய பலியின்மேலும், ஊழியத்தின் மேலும் நான் ஊற்றப்பட்டு போனாலும் நான் உங்களோடு சந்தோஷித்துக்களிகூருவேன் (பிலி.2:17) என்றார். கர்த்தாவே, இந்த நாளில் நேரிடும் எல்லாசம்பவங்களின் மூலமாகவும் நான் பெலனைப்பெற எனக்கு உதவி செய்யும்.

அழகிய தோட்டங்களுக்குவெகு தொலைவில்

அவர் என்னைச் சிறுகூண்டில்அடைத்தார்

ஆனால் அவர் என்னை அங்குவைத்தால்

நான் மிகவும் இனியகீதங்களைப் பாடவேண்டும்

அது என்னைப் படைத்தவரின்சித்தமாகையால்

கூண்டைவிட்டு வெளியேற நான்விரும்பவில்லை

ஆனால் பரத்துக்கு நேராய்என் குரலை

உயர்த்தி இன்னும் உரக்கப்பாடுவேன்.