March

மார்ச் 21

உங்கள்விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார் (மத்.9:29).

முழு விசுவாசம்பெறத்தக்கதாய் ஜெபிப்பதே ஊடுருவும் ஜெபம் எனலாம். ஜெபிக்கும்போதே, ஜெபம்ஏற்றுக்கொள்ளப்பட்டது. கேட்கப்பட்டது என்னும் நிச்சயம் ஏற்பட்டு, பெறுவோம் என்றுஉறுதியாய் எதிர்பார்ப்பதால், கேட்கப்பட்ட காரியத்தை அந்தக் காரியம் நடைபெறும்முன்னதாகவே பெற்றுக்கொண்டோம் என்று உணர்கிறோம்.

எப்போதும் மாறிக்கொண்டிருக்கும் அநித்தியமான உலகை நோக்காமல், அவர் வார்த்தை தவறாது என்பதையே விடாதுநோக்கி வந்தால் இவ்வுலக சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஒன்றும் அவ்வார்த்தை நிறைவேறுதலைத் தடைபண்ண முடியாது என்பதை அறிவோம். வேறு எந்த உறுதியுமில்லாமல் அவருடையவார்த்தையை நம்பவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். அப்பொழுது நமது விசுவாசத்தின்படியேநமக்கு அருளச் சித்தமாயிருக்கிறார்.

நான் செய்வேன் என்றுகர்த்தர்

ஒருமுறை வாக்களித்தபோது(எபி.13:5)

அந்தக் காரியம்நிச்சயமாய்க் கைகூடும்.

தேவன் வாக்கைக்காப்பாற்றுகிறார் (2.கொரி.1:20).

பெந்தேகொஸ்தே காலத்தில்ஜெபம், பணம் உடனடியாகக் கொடுக்கப்பட வேண்டிய காசோலை போலிருந்து.

தேவன் சொன்னார். அதுஅப்படியே ஆயிற்று (ஆதி.1:9).