March

மார்ச் 20

துக்கப்படுகிறவர்கள்என்னப்பட்டாலும் எப்போதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும்… (2.கொரி.6:10).

ஒரு சிலர் கண்ணீர் வடிப்பதைஏளனமாய் எண்ணுகின்றனர். கிறிஸ்தவன் அழக்கூடாது என்று சொல்லப்படவில்லை. உரோமத்தைக்கத்தரிப்பவன் கைகளின் கீழ் நடுங்கியவாறே அசையாதிருக்கும் ஆட்டைப்போல் நம் ஆத்துமாஅதிகத் துக்கத்தின் கீழ் மௌனமாக இருக்கலாம். அடுத்து அடுத்து வரும் அலைகள்போன்றதுன்பங்களால் இருதயம் உடைந்து போகும் நிலையில் இருக்கையில் துன்பப்படுபவன் சப்தமிட்டுஅழுது தனக்கு விடுதலை தேடலாம். ஆனால் அதைவிட மேலானது ஒன்றுண்டு.

கடலில் உப்புத்தண்ணீருக்கு மத்தியில் நல்ல தண்ணீர் ஊற்றுகள் சில சமயம் உண்டாகுமென்று சொல்லுகிறார்கள்.ஆல்பைன் மலையில் மிகுந்த அழகுள்ள மலர்கள் கரடு முரடான மலைக்கணவாய்களில் மலரும். வெகுஉன்னதக் கருத்துக்கள் சங்கீதங்கள் மிகுந்த வருத்தம் அனுபவித்த ஆத்துமாவிலிருந்துண்டாகும்.

அது அப்படியே இருக்கட்டும்.அதுபோலவே எண்ணற்ற துன்பங்களின் மத்தியில் கர்த்தரை நேசிக்கும் ஆத்துமாக்கள் துள்ளிக்குதித்து ஆனந்தம் கொண்டாடக் காரணம் காணும். ஆழம் ஆழத்தைக் கூப்பிட்டு, இரைந்தாலும் இரவுபூராவும் கர்த்தரின் பாட்டு வெள்ளி மணி ஓசைபோல், துல்லியமாய் இனிமையாய்க் கேட்கும்.ஒருபோதும் மானிடருக்கு எற்படாத அத்தனை துன்பம் நேர்ந்தாலும் நாம் அப்பொழுதும் நம்முடையகர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனைத் துதிக்கக்கூடும். நீ இதுவரை இந்தப்பாடம் படிக்கவில்லையா? கர்த்தருடைய சித்தத்தைத் தெரிந்து கொள்வது மாத்திரமல்ல.மகிமையோடு சொல்லமுடியாத ஆனந்தத்தோடும் அதை நிறைவேற்றி மகிழவும் வேண்டும்.

என்மீது பெரும்பாரம்அழுத்தினாலும்

நொறுங்கிய இதயம்முனங்கினும்

அழுகையோடு, கதறலோ,பெருமூச்சுமின்றி

கண்ணீரை அடக்கி,உதடுகளைக் கடித்து

நான் அமைதியாயிருப்பேன்

நான் முன்னோக்கி பார்க்க முடியாவிட்டாலும்

அவ்வன்பு சுவாலைபோல் எரியினும்

என் ஆறுதல் அனைத்தும் போயினும்

கீத வாத்தியம் நின்று போயினும்

நான் அமைதியாயிருப்பேன்.

தேவன் அன்பாகவே இருக்கிறார்

ஆத்துமாவே இதை மறந்து விடாதே

அவர் உயர்த்தும்வரை காத்திரு

அவர் சித்தம் நித்தியமே, ஆகவே

நான் அமைதியாயிருப்பேன்.

என் ஆத்தும உறுதியை நோக்கினேன்

காத்திருப்பது கடினமாயினும்

காய்ந்த கண்களை பரம் நோக்கி

உம் சித்தம் ஆகட்டும் என்பேன்

ஆகவே அமைதியாயிருப்பேன்.

சுமை நிறைந்த இதயமும்

முடியுள்ள உன் உதடுகளும்

திடீரென பேச முற்பட்டன

இதைவிட அதிகம் செய்யலாம் ஆத்துமாவே

அமைதலாயிருப்பதிலும் மகிழ்ச்சியாயிரு.

இப்போதும் நானும் என் ஆத்துமாவும்

இனிமையாகப் பாடுகிறோம்

பாலைவன நீரோடையில் குடித்து மகிழ்ந்து

நசுக்கப்பட்டும் கழுகைப்போல் உயரப்

பறந்து சென்று பாடுகிறோம்.