March

மார்ச் 18

அவரோ மாற்றுத்தரம்ஒன்றும் சொல்லவில்லை (மாற்.15:3).

தம்மை குற்றப்படுத்தியமனிதரை இயேசு தெய்வீக வல்லமையாலும், ஒரே பார்வையாலும், ஒரே கண்டிப்பான எச்சரிப்பாலும்கீழே விழச்செய்திருக்கலாம். ஆனால் அச்சமயத்தில் இரட்சகர் மாறுத்தரம் ஒன்றும்சொல்லாதிருந்தது வேதாகமத்திலேயே உன்னதக் காட்சியாகும். மௌனமானதேவஆட்டுக்குட்டியானவர் அவர்களைத் தீமையானவற்றைப் பேசவும், கொடிய செய்கைகளைச் செய்யவும்விட்டுவிட்டு தமது அமைதியின் வல்லமையில் தரித்திருந்தார். நாம் மௌனமாக இருந்துகர்த்தரை நமக்காக காரியத்தை நடத்திடச் செய்ய தேவையான அமைதி ஒன்று உண்டு. நாமாகவேசெய்யும் வழியைத் தேடி, நியாயமானது, ஞானமானது, முன்யோசனையானது எது என்று ஆராய்வதைவிட்டுஓய்ந்து தேவன் தமது உண்மையான நித்திய அன்பினால் நமக்கு ஏற்பட்ட அநீதிக்குஉத்தரவளிக்கக்கூடும் என்று இருக்கும் அமைதி இது.

நமக்காக நாமே போராடிநம்மைக் காப்பாற்றிக்கொள்ள முன்வந்ததால் கர்த்தருடைய உதவியை அநேகமுறை இழந்துள்ளோம்.இந்த அமைதியின் வல்லமையையும், அடக்க சிந்தையையும் இறைவன் நமக்குக் கொடுப்பாராக. இவ்வாறாயின்துன்பமும் போராட்டமும் நிறைந்த நமது உலக வாழ்வு முற்றுப் பெற்ற பின், காலைப் பனியையும்,மென்மையான ஒளியையும், மாலைத் தென்றலையும், கல்வாரிக்கும் உகந்து சென்ற கிறிஸ்து இரட்சகரையும்,புறா வடிவில் வந்த சாந்தமான பரிசுத்த ஆவியானவரையும் நாம் இப்போதும்நினைத்திருப்பதுபோல் மக்கள் நம்மையும் நினைப்பார்கள்.

கர்த்தர் தனிமையாக நின்று,

மானிடர் கல்மனதைஉணர்ந்தபோது,

ஈடு கொடுக்கவேவந்தோமென்று,

அந்நாள் அவர்பேசாதிருந்தார்.

அவர் வார்த்தையை பொய்யாகக் கூறினார்,

அவரைக் கொடுங் கயிற்றால் கட்டினர்,

இராஜன் என்று கேலி செய்தனர்,

ஆனால் இயேசு ஒன்றும் பேசவில்லை.

அவர் திருமுகத்தில் துப்பினர்

அங்கு மிங்கும் இழுத்துச் சென்றனர்.

அவர் மேல் வசைச் சொல் குவித்தனர்.

ஆனால் இயேசு வாயைத் திறவாதிருந்தார்.

என் சிநேகிதனே! இதிலும் மிகச் சிறிய விஷயத்திற்காக

நியாயமான கோபம் என்று நீ யெண்ணி

நீயடைந்த இகழ்ச்சிகளை நினைத்துச் சீறுவாயோ?

உன் இரட்சகர் மௌனமாயிருந்தாரன்றோ?

செவ்விந்தியரின் அப்போஸ்தலன்என்றழைக்கப்படும் மினஸோட்டோ பிஷப்பான விப்பிஸ் சொன்ன ஒரு வாக்கியம் எனக்குஞாபகமிருக்கிறது. முப்பது வருடமாக என்னோடு மாறுபட்டவர்களின் முகத்தில், இயேசுவைக்காணமுயன்று வருகிறேன் என்றார். இத்தகைய எண்ணம் நமக்கு உண்டானால் நாம் மிக பெருந்தன்மைஉள்ளவர்களாகவும் அல்லது (எது உண்மை, எது நீதி என எண்ணாமல்) எல்லாவற்றையும்சகிப்பவர்களாகவும் இருப்போம். சினங்கொண்டு பதிலுக்குப் பதில் செய்யவும் மாட்டோம்.மக்களை அழிப்பதற்கன்றி இரட்சிப்பதற்கே வந்த கிறிஸ்துநாதரைக் குறித்து நாம்கொடுக்கும் சாட்சிக்கு ஒருவித இழுக்கும் நேராதவாறு நடந்து கொள்பவர்கள் ஆவோம்.