March

மார்ச் 17

நான் உனக்குச்சொல்லும் வரைக்கும் அங்கே இரு என்றான் (மத்.2:13).

நான் போக வேண்டும் என்றுவெகுவாய் விரும்பினும்,

பிதாவே நீர் வைத்த இடத்தில்நான் இருப்பேன்.

சேனையின் முன்னணியில்சென்று அவர்களை நடத்த விரும்பினேன் என்று நீர் அறிவீர்.

இசைக்குத் தக்கதாக காலடிஎடுத்து வைத்து,

கொடி பறக்கும் பொழுதுபிறரை ஊக்க எண்ணினேன்.

போரின் மத்தியில் நேரேநிற்க விரும்பினேன்.

ஆனால் நீர் வைத்த இடத்தில்தரிப்பேன்.

நீர் வைத்த இடத்தில் தரித்திருந்து வேலைசெய்வேன்.

பணித்தளம் குறுகலாய்ச் சிறிதாயிருப்பினும்,

நிலம் செழிப்பற்றுக் கற்களுள்ளதாய்

ஜீவனற்றுத் தோன்றினும் விலகேன்.

பூமி உம்முடையது நீரே விதை தாரும்.

பயமில்லாமல் நான் விதைக்க,

மழைக்காய் காத்திருக்கையில், பூமியைப்பண்படுத்துவேன்,

நீர் வைத்த இடத்தில் வேலை செய்வேன்.

நீர் வைத்த இடத்தில் இருப்பேன், பிரிய கர்த்தரே

பகலின் உஷ்ணத்தையும், பாரத்தையும் சகிப்பேன்,

உம்மையே முற்றிலும் நம்புவேன் – சாயங்காலத்தில்,

கனத்த கதிர்க்கட்டுகளை, உம் பாதத்தில் வைப்பேன்,

நித்தியத்தின் ஒளியை நான் கண்டு,

உலகவேலை முடிந்து ஓயுங்கால், நான்

நிலைத்திருந்து மேல் என்று காண்பேன்.

நீர் வைத்த இடத்தில் நிலைத்திருப்பேன்.

சந்தர்ப்பங்கள் என்னும் சிறைக் கம்பிகளைஉடைத்துச் சென்று இன்னும் அதிகப் பிரயோஜனமான வேலை செய்ய ஏங்கி நிற்கும் ஓய்வற்ற என்ஆத்துமாவே! உன் நாட்களை ஒழுங்குபடுத்தும் பணியை உன் கர்த்தரிடம் ஒப்புவி. சுவையற்றவாழ்விலும் பொறுமையோடும், நம்பிக்கையோடும் இரு. அதுவே பின்னால் கர்த்தர் உனக்குப்பொறுப்புள்ள வேலையை அளித்தால் அதில் வரும் கஷ்டங்களைத் தாங்குவதற்கு உன்னை ஏற்றவனாகமாற்றும்.