March

மார்ச் 16

நம்முடையபிரயோஜனத்திற்காகவே (எபி.12:10).

ரால்ப் கோனார் என்பவரின்புத்தகங்களில் அவர் குவன் என்ற ஒரு பெண்ணைப்பற்றி ஒரு கதை கூறுகிறார். குவன் ஒருபிடிவாதமான, முரட்டுக்குணமுள்ள வாலிபப்பெண். சிறு வயதிலேயே தான் நினைத்த வழியில்சென்றாள். ஒரு நாள் அவளுக்கு ஒரு பெரிய விபத்து நேரிட்டதால், அவள் ஜீவிய காலமெல்லாம்நொண்டியாயிருக்க நேர்ந்தது. இதனால் அவள் அதிகமாக முறுமுறுத்து, இன்னும் அதிக முரட்டுக்குணம்உடையவளானாள். இவ்விதமான நிலையில் அவள் இருந்தபொழுது வான வழிகாட்டி என்று மலைதேசத்தாரால் அழைக்கப்பட்டு வந்த ஒரு சுவிசேஷப் பிரசங்கியார் அவளைப் பார்க்க வந்தார்.

அவர் அவளுக்கு ஒருபள்ளத்தாக்கின் உவமையை எடுத்துக்கூறினார். ஆதியில் பூமியெல்லாம் சமமானபுல்வெளியாயிருந்தது. அதில் பிளவு ஏற்படவில்லை. எஜமான் ஒரு நாள் அதன் புல் மைதானத்தில் வெளியில் நடந்து திரிந்து, புல் வெளியை நோக்கி, ஏன் உன்னில் பூக்கள் இல்லை என்றுவினவினார். அதற்குப் புல்வெளி என்னிடம் விதைகளில்லை என்று பதிலுரைத்தது.

பின்பு அவர் பட்சிகளிடம் பேசினார். அவைகள்சகலவித பூ விதைகளையும் கொண்டுவந்து வெளியெங்கும் தூவின. விரைவில் அவ்வெளியெங்கும்கல்வாழை, ரோஜா, சூரியகாந்தி, காட்டுச் செவ்வந்தி, சிவப்பு சம்பங்கி முதலிய பூக்கள்மலர்ந்தன. அப்பொழுது எஜமான் வந்து இவற்றைக் கண்டு உவகை பூத்தார். ஆனால் அவர் அதிகமாய்விரும்பிய பூக்கள் அங்கில்லை. அவர் புல்வெளியைப் பார்த்து: அல்லி, ஆம்பல் முதலியமலர்களையும் அழகிய இலை நிறைந்த செடிகளையும் காணோமே என்றார்.

திரும்பவும் அவர் பட்சிகளுக்குக் கட்டளையிட்டார்.அவை சகல பூச்செடி வித்துக்களையும் கொண்டுவந்து நாலா பக்கமும் வீசின. திரும்பவும் எஜமான்அங்கு வந்தபோது, தான் விரும்பின பூக்களைக் காணவில்லை. அந்த இனிய பூக்கள் எங்கேஎன்று கேட்க, புல்வெளி வெகு துயரத்தொனியில், ஓ என் எஜமானே! என்னால் அந்தப் பூக்களைவைத்துக் காப்பாற்ற முடியவில்லை. என்மேல் காற்று அதிக உக்கிரமாய் வீசுகிறது. பகலோன்கடும் தாபத்தோடு காய்கிறான். அப்பூக்கள் வாடி, காற்றில் பறந்துபோய் விடுகின்றனஎன்று சொல்லிற்று.

பின்பு எஜமான் மின்னலுக்குக் கட்டளையிட்டார்.ஒரே வீச்சில் புல்வெளியின்; இதயத்தை இடி பிளந்தது. அது அசைந்தது. வேதனையால் முனங்கியது.அது தன்னில் உண்டாகிய பிளந்த காயத்தினூடே அநேக நாள் வருந்தியது.

ஆனால் நதி பிளவினூடே பாய்ந்தது. அது தன்னோடேசெழிப்புள்ள மண்ணைக் கொண்டு வந்தது. மற்றொருமுறை பட்சிகள் விதைகள் கொண்டு வந்துஅங்கே தூவின. வெகு நாளைக்குப் பின் அம்முரட்டுப் பாறைகள், பச்சைப் பாசியினாலும்,படரும் கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்டன. கொட்டியும் ஆம்பலும் பூத்தன. பெரியஆலமரங்கள் தங்களின் உயர்ந்த தலையைச் சூரிய ஒளிக்கு நேரே உயர்த்தி நின்றன. அதனடியில்சின்னக் கேதுரு மரங்களும், காசித் தும்பைச் செடிகளும் குவிந்து கிடந்தன. எப்பக்கமும்முல்லையும், பவள மல்லிகையும் வளர்ந்து பூத்துக் குலுங்கி நின்றன. இந்த இடமே எஜமான் இளைப்பாறிஇன்பமடையும் விருப்பமுள்ள இடமாயிற்று.

பின்பு அந்த வான வழிகாட்டி அவளுக்கு ஒரு வசனம்வாசித்தார். கனிகள் என்னுமிடத்தில் பூக்கள் என்று வைத்து வாசித்தார். ஆவியின் பூக்கள்அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, சாந்தம் – இவைகளில் சிலபள்ளத்தாக்குகளில்தான் பூக்கும் என்றார்.

குவன் மெதுவாக அவ்வழிகாட்டியிடம்பள்ளத்தாக்குகளில் மாத்திரம் பூக்கும் பூக்கள் யாவை? என்று கேட்டாள். அதற்கு அவர்சாந்தம், தாழ்மை, நீடிய பொறுமை என்பவைகளே, ஆனால் அவைகள் வெளியிலும் பூக்கும். ஆனால்பிளவினுள் வளரும் பூக்களைப்போல் அத்தனை அதிகமாயும், நறுமணம் நிறைந்ததாயும் இருக்காதுஎன்றார்.

வெகு நேரம் குவன் மௌனமாய் இருந்தாள். பின்புஉதடுகள் நடுங்க, விசனத்துடன் என் பிளவினுள் பூக்களில்லை, அதிக கரடு முரடான பாறைகள்மாத்திரமே இருக்கின்றன என்றாள்.

எப்பொழுதாவது ஒரு நாள் அவைகள் மலரும், எஜமான்அதைக் காண்பார். நாங்களும் அதைப் பார்ப்போம் என்றார் வான வழிகாட்டி.

பிரியமானவர்களே, துன்பம் என்னும் பிளவு உங்கள் ஜீவியத்தில்ஏற்படும்பொழுது இக்கதையை நினைத்துக் கொள்ளுங்கள்.