March

மார்ச் 13

தேவரீருடைய வழிகள்நீதியும் சத்தியமுமானவைகள் (வெளி 15:3).

இருபந்தைந்து ஆண்டுகளாகநோயற்றிருந்த சார்லஸ் ஸ்பர்ஜனின் மனைவி பின்வரும் சம்பவத்தைக் கூறுகிறார்.

இருண்டு, பிரகாசமற்றிருந்த ஒரு நாளின் இறுதியில்,இரவு நெருங்குகையில், நான் படுக்கையில் இளைப்பாறிக் கொண்டிருந்தேன். என் சௌகரியமானஅறையில் எங்கும் வெளிச்சமாயிருந்தபோதிலும், வெளியிலிருந்த இருள் சற்று என் ஆத்துமாவில்நுழைந்து அவிக்குரிய தரிசனத்தை மறைப்பதுபோல உணர்ந்தேன். வேதனையென்ற கடினமான வழியில்வழுக்கி விழுந்துவிடாதபடி கர்த்தரின் கரம் என்னைக் கைபிடித்து வழி நடத்துகிறது என்பதைஅறிந்தேன். ஆயினும் அன்று எவ்வளவு முயன்றும் அவர் கரத்தை என்னால் காண முடியவில்லை.

என் இதயத்தில் பொங்கி எழும் வருத்தத்தில் நான்கர்த்தர் தம்முடைய பிள்ளைக்கு ஏன் இப்படிச் செய்தார்? சகப்பான சகிக்க முடியாத வேதனையைஅடிக்கடி, நான் அனுபவிக்கச் செய்ததேன்? அவருடைய ஏழை ஊழியருக்கு நான் செய்ய விரும்பும்உதவியைச் செய்ய முடியாதபடி இந்த நீடித்த பெலவீனம் உண்டாக ஏன் அனுமதித்தார் என்று என் இதயத்தில்வினவினேன்.

இந்தப் பொறுமையற்ற கேள்விகளுக்கு விந்தையானமுறையில் சீக்கிரமே பதில் கிடைத்தது. அதன் பொருளை அறிந்துகொள்ள என் ஆத்துமாவின்மெல்லிய சத்தமே போதுமானதாயிருந்தது.

சற்று நேரம் கணப்பு அடுப்பில் எரியும் கட்டைகளின்வெடிக்கும் சப்தமேயன்றி, எங்கும் நிசப்தமே இருந்தது. திடீரென ஒரு சப்தம் கேட்டது. அந்தச்சப்தம் என் ஐன்னலருகேயிருந்து ராபின் என்னும் பறவை மெதுவாக இனிமையாகத் தெளிவாகப்பாடுவது போன்று இருந்தது.

அந்தப் பருவத்தில் இரவு நேரத்தில் அப்பறவைஎப்படிப் பாடக்கூடும்? அது என்ன சப்தமாயிருக்கக்கூடும்?

திரும்ப அதே சம்தம், மெதுவாய் இனிமையான கானம்நிறைந்ததாய்த் தொனித்தது. அது என்ன சப்தம் என்று அறிய ஆவலுற்றேன். அப்பொழுது என்சிநேகிதி, அந்தச் சப்தம் நெருப்பில் எரிந்து கொண்டிருக்கும் கட்டையிலிருந்துஉண்டாயிற்று என்று சொன்னாள். அந்த முதிர்ந்த மரத்தின் அழியாத உள் பாகத்தில்அடைப்பட்டிருந்த இன்னிசை நெருப்பால் விடுவிக்கப்பட்டது.

ஒருவேளை அந்த மரம் தன் நல்ல காலத்தில் தன்கிளைகளில் பறவை ஆனந்தமாய்ப்பாடி களித்தபோது, சூரிய வெளிச்சம் தன் மெல்லியகிளைகளை அலங்கரித்தபோது, இந்த இன்னிசைக் கீதத்தை தன்னுள் சேமித்துவைத்ததுபோலும்.அதன் பிறகு அது முதிர்ந்து, கடினமானது. அநேக வளையங்கள் உண்டாக்கத்தக்கதாய்ச் சற்றுச்சுற்றாய் வளர்ந்து மறந்துபோன இன்னிசையை அடைத்து வைத்தது. அதன் முரட்டுப் பாகத்தைத் தீஎரித்தபொழுது நெருப்பின் உக்கிரம் அதனிடமிருந்து பாட்டை வருவித்தது. ஆம், வருவிக்கும்துன்பங்கள் நம்மிடமிருந்து துதியின் பாட்டை வருவிக்கும்பொழுது நிச்சயமாகவே நாம்புடமிடப்படுகிறோம். கர்த்தர் மகிமைப்படுகிறார் என்று எண்ணினேன்.

ஒரு வேளை நம்மில் சிலர் இந்த முதிர்ந்தகட்டையைப்போல் குளிர்ந்து கடினப்பட்டு, உணர்வற்றிருக்கலாம். நம்மைச் சூழப்பற்றி எரியும்நெருப்பு நம்மிலிருந்து அவர்மேல் நம்பிக்கை என்னும் இசையையும், சந்தோஷமாய் அவர்சித்தத்திற்கு உடன்படுதல் என்னும் இசையையும், வெளியேற்றாவிட்டால், நாம் ஒருபோதும்அந்த இன்னிசை நாதத்தை வெளியிட்டிருக்கமாட்டோம்.

நான் இவ்வாறு தியானத்தில் சூழ்ந்திருக்கையில்நெருப்பு எரிந்தது. என் முன் அதிவிந்தையாய் வைக்கப்பட்ட இந்த உவமை என் ஆத்துமத்திற்குஆறுதலை அளித்தது.

நெருப்பில் பாடவேண்டும். சிந்தனையற்றஆத்துமாக்களை இன்னிசையில் இணையச்செய்ய, இதுவே வழியென்றால் அக்கினி சூளை ஏழு மடங்குஉஷ்ணமாக்கப்படட்டும். அதைத் தாங்க கர்த்தரும் துணை புரிவாராக.