March

மார்ச் 12

கர்த்தர்….. அன்று இராமுழுவதும்,கீழ்க்காற்றைத் தேசத்தின்மேல் வீசப்பண்ணினார். விடியற்காலத்திலே, கீழ்க்காற்றுவெட்டுக்கிளிகளைக் கொண்டுவந்தது…. அப்பொழுது பார்வோன் மோசேயையும், ஆரோனையும்தீவிரமாய் அழைப்பித்து…. கர்த்தர் மகா பலத்த மேல்காற்றை வீசும்படி செய்தார். அதுவெட்டுக்கிளிகளை அடித்துக்கொண்டு போய்ச் செங்கடலிலே போட்டது. எகிப்தின் எல்லையில்எங்கும் ஒரு வெட்டுக்கிளியாகிலும் மீதியாயிருந்ததில்லல (யாத்.10:13,16,19).

கர்த்தர் பூர்வகாலத்தில்இஸ்ரவேலருக்காக, கொடுரப் பார்வோனுக்கு விரோதமாய்ப் போர் புரிந்தபோது, புயல் காற்றுஅவர்களுக்கு விடுதலை கொண்டு வந்தது. எகிப்தியரின் எதிர்ப்பைக் கடைசி முறையாக உன்னதமானசெய்கையால், முறியடிக்க உதவியது இந்தப் புயல்காற்றே. இஸ்ரவேல் புத்திரருக்கு முன்னால்கடலும், பக்கங்களில் தப்பியோட முடியாதபடி உயர்ந்த பாறைகளும் காணப்பட்டன. சுற்றிலும் இருளும்,புயலும் கவிழந்து இருந்தன. இஸ்ரவேல் புத்திரருக்கு அத்தனை அபாயங்களால் தாங்கள்சூழப்பட்டுத் தப்ப வழியில்லாதிருப்பது வெகு கொடுரமான காரியமாகத் தோன்றியிருக்கும்.முதல் விடுதலை பெற்றது நிச்சயமான சாவுக்குத் தங்களை ஒப்பவிக்கத்தான்கொடுக்கப்பட்டதோ என்றுகூட எண்ணியிருப்பார்கள். பயத்தை முற்றுப்பெறச் செய்ய இதோ,எகிப்தியர் நம்மேல் வருகிறார்கள் என்ற சப்தமும் கிளம்பிற்று.

பகைஞருக்குத் தப்பமுடியாதபடி,அடைபட்டோம் என்று தோன்றினபோது, மகிமையான வெற்றி கிடைத்தது. புயல்காற்று வீசிஅலைகளைப் பின்னே தள்ளியது. கர்த்தரின் பாதுகாக்கும் அன்பு என்னும் பந்தல் நிழலிட,கடலின் ஆழத்தில் உண்டாகிய பாதையில் இஸ்ரவேலின் சேனைகள் அனைத்தும் முன்னேறிச்சென்றன. கர்த்தரின் மகிமையாகிய ஒளியில் இருபுறமும் நின்ற தண்ணீர்ச் சுவர்கள் தளதளவென்றுமின்னின. அவர்கள் தலைக்குமேல் இடியும் புயலும் குமுறிக்கொண்டிருந்தன. இரவு முழுவதும் இவ்விதமேஇருந்தது. அடுத்த நாள் அதிகாலையில் இஸ்ரலேவரின் கூட்டத்தில் கடைசி அள் கரையில் கால்வைத்தவுடன் புயல்காற்றின் வேலை முடிந்தது.

பின்பு இஸ்ரவேலர் புயல்காற்று கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றினதைக் குறித்துப் பாடினார்கள்.அந்தப்பாட்டு:

சத்துரு நான்பின்தொடர்வேன். நான் பிடித்துக்கொள்வேன். கொள்ளையைப் பங்கிட்டுக் கொள்வேன்என்றான். நீர் உம்முடைய காற்றை வீசச் செய்தீர். சமுத்திரம் அவர்களை மூடிற்று. ஆழமானதண்ணீரில் ஈயம்போல் ஆழ்ந்து போனார்கள்.

கர்த்தருடைய பெரிதானகிருபையால், நாமும் ஒருநாள் கர்த்தருடைய வாத்தியங்களைக் கையில் கொண்டு, பளிங்குக்கடலருகே நிற்போம். அப்பொழுது நாம் தேவனுடைய ஊழியக்காரனான மோசேயின் பாட்டையும்பாடுவோம். ஆட்டுக்குட்டியானவரின் பாட்டையும் பாடுவோம். பரிசுத்தவான்களின் இராஜாவே!தேவரீருடைய வழிகள் நீதியும், சத்தியமுமானவைகள் என்று பாடுவோம். அப்பொழுது நாம்புயல்காற்று எவ்வாறு நமது விடுதலையை உண்டாக்கிற்று என்று அறிவோம்.

இப்பொழுது உன் விசனம்உனக்கு விளங்காத இரகசியமாயிருக்கிறது. பின்பு நீ பயங்கரமான துக்கம் நிறைந்த இரவில்,உன்னைப் பயமுறுத்தின சத்துரு எப்படி வாரிக்கொண்டு போகப்பட்டான் என்று அறிந்துகொள்வாய்.

நீ உனக்குண்டான நஷ்டத்தையேநோக்குகிறாய். பின்பு உன்னை விலங்கிடும் தீமையை அதுவே அகற்றினதை அறிவாய்.

நீ இப்பொழுது ஓலமிடும்காற்றிற்கும் குமுறும் இடிக்கும் பயப்படுகிறாய். பின்பு நீ அதே ஜலம் பின்னோக்கிவாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பூமிக்கு வழிதிறந்தது என்பதை அறிவாய்.

காற்று வேகமாய் வீசிடினும்

புயல் சீறிப் பாயினும்

அவை எனக்குத் தீமையல்ல,

கர்த்தர் அதன் சிறிகில்செல்கிறார்

என்று நம்பி என் இதயம்பாடும்.