March

மார்ச் 11

கர்த்தருடைய தாசனாகியமோசே மரித்த பின்பு, கர்த்தர் மோசேயின் ஊழியக்காரனான நூனின் குமாரன் யோசுவாவைநோக்கி: என் தாசனாகிய மோசே மரித்துப் போனான். இப்பொழுது நீயும் அந்த ஐனங்கள்எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக் கடந்து…. போங்கள் என்றார் (யோசு.1:1-2).

நேற்று மரணம் உன்குடும்பத்தில் நுழைந்து வீட்டை வெறுமையாக்கிற்று. எல்லாவற்றையும் விட்டுவிட்டுநம்பிக்கையின் இழப்பின் மத்தியில் உட்காரவே உன் எண்ணம் தூண்டுகிறது. ஆனால் அப்படிநீ எண்ணுவது தகாது. நீ போர்க்களத்தின் முன்னிலையில் நிற்கிறாய். அபாயம் கிட்டுகிறது.ஒரு நிமிடம் தயங்கினால், பரிசுத்த முயற்சியை நீ தடை பண்ணக்கூடும். நீ நிற்பதால் மற்றஉயிர்களுக்குச் சேதம் உண்டாகும். உன் கை கட்டப்பட்டிருந்தால் பிறர் உயிர் கெடும். நீதுக்கிக்கக்கூடாது, தாமதிக்கலாகாது.

ஒரு சிறந்த தளகர்த்தன்போர்க்கால அனுபவத்தில் நடந்த ஒரு பரிதாபகரமான சம்பவத்தைச் சொன்னார். தளகர்த்தனின்மகன் துப்பாக்கி வீரரின் தலைவன். போர் நடந்துகொண்டிருந்தது. தகப்பன் தன் ஆட்களைப்போர் முன்னிலையில் நடத்தித் தாக்குதல் செய்துகொண்டிருந்தான்.போய்க்கொண்டிருக்கும்பொழுது ஒரு துப்பாக்கி வீரரின் தலைவன் செத்துக்கிடப்பதைக்கண்டான். ஒரே பார்வையில் அது தன் மகன் என்று கண்டுகொண்டான். தகப்பனுக்குரிய அன்புதான்நேசித்த மகனண்டை நின்று கதற வேண்டுமென்றிருந்தது. அனால் அவன் கடமையின்படி முன்னேறிச்செல்ல வேண்டியவன். ஆகையால் சடுதியில் மகனுக்கு ஒரு முத்தம் ஈந்து தன் படையுடன் முன்னேறிச்சென்றான்.

ஆறுதலடையாமல் கல்லறைஅண்டை நின்று அழுவதால் மறைந்துபோன நமது அன்பின் பொக்கிஷம் திரும்பி வரப்போவதில்லை.அப்பபடிப்பட்ட துக்கத்தால் யாதொரு பாக்கியமும் வரப்போவதில்லை. துக்கம் ஆழமானதழும்புகளை உண்டுபண்ணுகிறது. துக்கம் இருதயத்தை உருக்குகிறது. நம்முடைய ஆழந்ததுக்கத்திலிருந்து நாம் முற்றிலுமாய் ஆறுதலடைவது முடியாது. அதைக் கடந்தபி;ன்முன்னிருந்ததுபோல் முற்றிலுமாயிருக்க முடியாது. ஆனால் துக்கத்தைச் சரியான முறையில்ஏற்றுக்கொண்டு, சந்தோஷமாய் சகித்தால் அது நம்மைச் செழிப்புள்ளவர்களும்,பட்சதாபப்படுகிறவர்களுமாக்கும். ஒருபோதும் துக்க அனுபவம் இல்லாதவர்களும், துக்கத்தின்தழும்பு இல்லாதவர்களும் தரித்திரரே. மேகத்தினூடே சூரியன் பிரகாசித்து அதைக் கவினுறச்செய்வதுபோல், நமக்கும் வருங்காலத்தில் வைக்கப்பட்டிருக்கும் சந்தோஷம் நம்முடையதுக்கித்தினூடே ஒளிவிடவேண்டும். கடமையைச் செய்துகொண்டே போவதால் நமக்கு உண்மையானஏராளமான ஆறுதல் கிட்டவெண்டுமென்பது தேவனது தீர்மானம். நமது துக்கத்தைக் குறித்துஉட்கார்ந்து, யோசித்துக்கொண்டே இருப்போமானால், நம்மைச் சுற்றி இருள் கவிந்து இருதயத்தினுள்சென்று நம் பலத்தை பலவீனமாக மாற்றிவிடும். ஆனால் துக்கிப்பதிலிருந்து திரும்பி,கர்த்தர் இட்ட ஊழயத்தையும் கடமைகளையும் தொடர்ந்து செய்தால் நாம் இன்னும் பலமடைவோம்.

சுயம் நிறைந்தகண்ணீராலும் புலம்பலாலும்,

நிச்சயமாய்பாவமுண்டாகும் என்றறிவீர்.

எம் இழப்புக்குஎவ்வளவோ மேலான,

லாபம் எமக்கீயகாத்திருக்கிறீர்.

மேலானதாய்ப்பகட்டாய்த் தோன்றின

யாவையும் நாங்கள் இழந்தோம்ஆயினும்

உம் கரம் பற்றி நீர்நடத்தும் வழி செல்லின்

மகிழ்ச்சி, வலிமைஎன்னும் பரம தைலத்தால்,

அபிஷேகமும் இன்பமும்அடைவோமென

நிச்சயமாய் அறிவோம்.