March

மார்ச் 10

விசுவாசத்தினாலேநீதிமான் பிழைப்பான் (எபி.10:38).

தோற்றங்களும்,உணர்ச்சிகளும் விசுவாசம் என்றெண்ணப்படுகின்றன. இன்பமளிக்கும் உணர்ச்சிகளும், ஆழ்ந்ததிருப்தி கொடுக்கும் அனுபவங்களும் கிறிஸ்தவ ஜீவியத்தின் ஒரு பகுதியாகும். ஆனால் அவைமாத்திரமே கிறிஸ்தவ ஜீவியம் அல்ல. சோதனைகளும், போராட்டங்களும், மனச்சஞ்சலங்களும்,பரீட்சைகளும் வழியெல்லாம் இருக்கின்றன. அவைகளைத் துர்ப்பாக்கியங்கள் என்றுஎண்ணக்கூடாது. நமக்குத் தேவையான ஒழுங்கு முறையின் ஒரு பகுதியென்று கொள்ளவேண்டும். நாம் இயேசுவின்முன்கீழ்ப்படிந்து நடந்து, இந்தப் பற்பலவித அனுபவங்களிலும் நம்முடைய உணர்ச்சியைப் பெரிதும்பாராட்டாது, கிறிஸ்துவை நம்முடைய இருதயத்தில் வசிப்பவராகக் கொள்ளவேண்டும். அநேகர்விசுவாச வழியில்லாது, உணர்ச்சி வழி செல்ல முயலுகிறார்கள். ஆகையால் அவர்கள் துன்பத்திற்குஆளாகிறார்கள்.

கர்த்தர் தன்னைவிட்டுவிலிகிவிட்டதுபோல் தோன்றிற்று என்று ஒரு பக்தியுள்ள மாது சொல்கிறாள். அவருடைய இரக்கம்முற்றிலும் நீங்கிப் போனதாகக் காணப்பட்டது. இந்த நிர்ப்பந்தமான நிலைமை ஆறுவாரம்நீடித்தது. பின்பு அவனது தெய்வீகக் காதலர் அவளைப் பார்த்து: காத்தரீன்! நீ என்னைஉணர்ச்சி வழி தேடினாய், நான் அப்போதெல்லாம் உள்ளேயிருந்து உனக்காகக் காத்திருந்தேன்.உன் ஆவியின் உள்ளந்திரியத்தில் என்னைத் தேடு. ஏனென்றால் நான் அங்கேயிருக்கிறேன்என்கிறார்.

கர்த்தரின் சமுகம் என்றஉண்மையையும், உணர்ச்சியின் உண்மையையும் பாகுபடுத்தி காண். உன் ஆத்துமா கதியற்று,ஆதரவற்று இருக்கும்போது நீ விசுவாசத்தோடு உம்மை நான் காணவில்லை. உம்மை நான்தொடக்கூடவில்லை. ஆயினும் நான் இருக்கும் இந்நிலையில், நான் இருக்கும் இடத்தில் நீர்கிருபையோடு நிச்சயமாய் இருக்கிறீர் என்று சொல்லக்கூடுமானால் அது சந்தோஷமான காரியமே.நீர் இங்கே இருக்கிறீர். முட்செடி எரிவதுபோல் காணப்படாவிட்டாலும் அது எரிகிறது. நான்நிற்கும் பூமி பரிசுத்த பூமி. ஆதலால் என் பாதரட்சையை என் பாதங்களிலிருந்துஎடுத்துப்போடுவேன் என்று திரும்பத் திரும்ப சொல்லு.

உன் அனுபவத்தையும், உன்உள்ளுணர்ச்சியையும் நம்புவதைவிட கர்த்தருடைய வல்லமையையும், வார்த்தையையும் நம்பு. கிறிஸ்துஉன் கன்மலை. கன்மலையல்ல, கடலே. உயர எழும்பவும் தாழவும் செய்யும்.

கிறிஸ்துவின்பூரணப்படுத்தப்பட்ட வேலையையும், நீதியின் மகிமையையும் நோக்கிப் பார். இயேசுவைநோக்கிப் பார்த்து அவரை நம்பு. இயேசுவை நோக்கிப் பார்த்து ஜீவனடைந்து கொள். அதுமாத்திரமல்ல. இன்னும் இயேசுவை நோக்கிப் பார்த்து உன் படகைச் செலுத்து. உலக ஜீவியமாகியகடலிலே ஊக்கத்தோடு தண்டு வலித்துச் செல். அவநம்பிக்கை என்னும் துறைமுகத்தில் தங்காதே,செயலற்று ஓய்வு என்னும் நிழலில் தூங்கிக்கொண்டிராதே. துறைமுகத்தில் வீணாய்க்காத்திருக்கும் கப்பல்கள்போல் உன் உணர்ச்சியை ஒன்றோடொன்று மோத விடாதே.உணர்ச்சிகளில் ஆழ்ந்திருப்பது சன்மார்க்க ஜீவியம் அல்ல. விசுவாசம் என்னும்அடிப்பாகத்தை மணலில் பதியவிட்டுச் சுகம் தரும் காற்றைப் பெறப் பயன்படுபவன் போல்,மண்ணின் வழியாய் உள் நம்பிக்கை என்னும் நங்கூரத்தை இழுத்துக்கொண்டு செல்லமுயற்சிக்காதே. காற்று முகமாய் பாய்விரித்து, கொந்தளிக்கும் தண்ணீரை ஆளுபவராகியஅவரையே நம்பி முன்னோக்கிச் செலுத்து. விரட்டப்படும் பட்சி பறந்துகொண்டே இருக்கவேண்டும்.தாழப்பறந்தால் விழ நேரிடும்.

நாம் உணர்ச்சி என்னும்தாழ்ந்த பூமியில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தால், அவநம்பிக்கை, சோதனை, சந்தேகம்என்னும் பல்லாயிரம் வலைகளில் சிக்கிக்கொள்வோம். ஆனால் சிறகு உள்ளவைகளுக்கெதிரேவலை விரிப்பது விருதா. கர்த்தர் பேரில் உன் நம்பிக்கையை வை.

இது நிச்சயம் என்று ஒன்றைஎன்னால் விசுவாசிக்க முடியாத பொழுதும் தேவனை நம்பி அவரைச் சார்ந்திருப்பதால் நான்உயிர் வாழ்கிறேன்.