March

மார்ச் 9

கொடு முடியிலிருந்து (ம்)….. கீழே பார் (உன்.4:8).

அழுத்தும்பாரம் கிறிஸ்தவனுக்கு இறக்கையை அளிக்கிறது. இது எதிர்மாறான வார்த்தைபோல் தோன்றினாலும்அதுவே பாக்கியமான சத்தியம். தாவீது கசப்பான கஷ்டத்தை அனுபவிக்கையில், ஆ எனக்குப்புறாப்போல் சிறகுகள் இருந்தால் நான் பறந்துபோய் இளைப்பாறுவேன் (சங்.55:6) என்றுகதறினான். இவ்விதமாக எண்ணுகையில் தன் விருப்பம் கைக்கூடி வரக்கூடியதே என்று உணர்ந்ததாகத்தெரிகிறது. ஏனென்றால் அவன் கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு. அவர் உன்னைஆதரிப்பார் (சங்.55:22) என்று அதே அதிகாரத்தில் சொல்லுகிறான்.

பாரம் என் வார்த்தை யேகோவா உனக்கு ஈந்தது என்று வியாக்கியானப்படுத்தி வேதாகமத்தில்குறிப்பு எழுதப்பட்டுள்ளது. பக்தியுள்ளவனுடைய பாரங்கள் கர்த்தரால் கொடுக்கப்பட்டவை. அவைஅவனைக் கர்த்தருக்கு காத்திருக்க நடத்துகின்றன. அது முடிந்தவுடன் அந்தப் பாரம்ஏற்றப்பட்டவன் கழுகுகளைப்போல் செட்டை அடித்து எழும்புவான்.

ஒருநாள் தெருவழியே நடந்து செல்லும்போது என் வேலைகளைப் பற்றி நினைத்தேன். நூறுகவலைகள்மழை பொழிய ஆயத்தமான மேகங்கள்போல் என் உள்ளத்தில் கவிழ்ந்தன. என்மேல் நானே இரக்கங்கொண்டேன்.நீ ஏழை, இரங்கத்தக்கவன். உனக்கு அளவுக்கு மீறிய வேலைகள் உள்ளன. உன் வாழ்க்கை மிகவும்கடினமானது. இந்தப் பாரம் உன்னை நசுக்கிவிடும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.என் மனதில் துக்கம் நிறைந்தது. வெயிலில் எரிக்கும் வெயில்கூட அதிக வெப்பத்தால்என்னைத் தாக்குவது போல் தோன்றிற்று. புழுதியும் கார்கள் ஓடும் சப்தமும் எனக்குச்சினமூட்டின. களைத்து அலுத்துப்போயிருந்த என் உள்ளத்துக்கு இதுவே என் கழுத்தை உடைக்கும்கடைசி சுமைபோல் தோன்றிற்று.

என்போன்றவர்களால் அளவற்ற கவலைகளைத் தாங்க முடியாது. இவற்றின் பாரத்தினால் என்வாழ்க்கை உடைந்து நொறுங்கிப் போகும் என்று எண்ணி என் துன்பத்திலேயே அழுந்தினேன்.அப்போது அமைதியான மெல்லிய குரல் ஒன்று இவை உன்னைத் தாழ்த்த அல்ல. உயர்த்தவேஅனுப்பப்பட்டவை என்று தெளிவாய்ச் சொல்லிற்று. அப்போது நான் என் பிழையை உணர்ந்தேன்.நான் துன்பப் பாரத்தினால் அழுத்தப்படாமல் அதற்கு மேலாக உயரவேண்டும். நான் இவற்றைத்தாங்கவேண்டுமென்றே தேவன் எண்ணுகிறார். என் பலவீனத்தை அவர் அறிவார். வெயில் மழைஆகியவற்றை வேண்டி நிற்கும் சிறு கிளைகள்போல் நான் அவர் கிருபையையும், பணியாற்றும்சக்தியையும் வேண்டி நிற்பதை அவர் கண்டார். ஆகையினால் நான் வளரக்கூடிய இடத்தில் அவர்அன்போடு என்னை வைத்தார். துன்பப் பாரத்தின் கீழ் வீழந்து கிடந்தால் மரணம்தான்.ஆனால் அதற்கு மேலாக உயர்பவர்களோ புதிய ஆற்றலைப் பெறுகிறார்கள். நாம் பாரம் என்றுஎவ்றை நினைத்தோமோ அவற்றையே சிறகுகள்போல உபயோகித்து மேற்செல்லலாம். துன்பங்கள்இல்லாவிட்டால் நாம் நிலத்திலேயே இருப்பவர்கள் போன்று தாழ்ந்த நிலையிலே இருப்போம்.மிகக் கடினமான சந்தர்ப்பங்களிடையே இருக்கும்பொழுதே விசுவாசம் வளர்கிறது.

நம்மை அழுத்தும் பாரமே நம்மைக் கர்த்தரிடம் அழைத்துச் செல்கிறது. இது முரணாகத்தோன்றினும் இது ஒரு தெய்வீகச் சத்தியமே. ஆகையினால் என் ஆத்துமாவே நீ உயரச் செல்.பாரத்தின்கீழ் இருப்பதுதானே நசுக்கும், நீயோ மேலே செல்லாம்.

நாம்வாழ்க்கையின் கவலைகளை எவ்வாறு தாண்டி மேற்செல்லலாம் என்றால் அதற்கு விடையும்கர்த்தரது வார்த்தையிலேயே இருக்கிறது. கிறிஸ்துவோடு தனித்திருந்து நாம் நமது பாரங்களைத்தீர்த்து அவரிடம் இளைப்பாறுதலையும் பெறலாம்.