March

மார்ச் 8

தேவரீர் சொன்னபடியே செய்தருளும்…. உமது நாமம் என்றைக்கும்மகிமைப்படவும் கடவது (1.நாளா.17:23-24).

இதுவேபாக்கியமான ஜெபம். அநேக தடவைகளில் வாக்குப்பண்ணப்படாத காரியங்களைக் கேட்கிறோம்.நாம் சிறிது காலம் கேட்டுக்கொண்டேயிருந்த பின்னரும் அது கர்த்தருடைய சித்தத்திற்கு இசைந்ததாஎன்று இலகுவில் நாம் அறிந்து கொள்கிறதில்லை. தாவீது தன் ஜீவியத்தில் கண்டதுபோல்சில சமயங்களில் நாம் கேட்பது கர்த்தருடைய சித்தத்திற்கு எற்றதுதான் என்று நம்பத்தக்ககாரியங்களுண்டு. வேதாகமத்திலிருந்து அது நமக்கென்று விசேஷ செய்தியாய் அமைத்திருப்பதாகக்கண்டு, அவர் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றக் கெஞ்சும்படி ஏவப்படுகிறோம். அச்சமயங்களில்ஜெபத்தில் உறுதியான விசுவாசம் கொண்டு, நாம் தேவரீர் சொன்னபடியே செய்தருளும் என்றுஜெபிக்கிறோம். நமது தேவைகளுக்கேற்ற வாக்குத்தத்த்ததைக் குறித்துக் காட்டி அதைநிறைவேற்றும்படி கெஞ்சுவதுபோன்ற வெகு அழகான வல்லமையான ஜெபம் வேறொன்றுமில்லை.பணச்சீட்டை நீட்டிப் பணம் பெறுவதுபோல், வாக்குத்தத்தத்தை காட்டி நிறைவேறுதலைப்பெறுகிறோம். அதன் பயனைக் குறித்துச் சந்தேகமும் வேண்டியதில்லை. திட்டமான ஜெபம்,ஜெபத்தில் ஆவலையுண்டாக்கும். பல காரியங்களைப் பொதுவாய்க் கேட்பதைவிடச் சிலகாரியங்களைக் குறிப்பாய் கேட்பது நல்லது.

வேதத்தில்ஒவ்வொரு வாக்குத்தத்தமும் கர்த்தரின் எழுத்து. அதை நாம் காரணமாகக் காட்டி வேண்டுதல்செய்யலாம். தேவரீர் சொன்னபடியே செய்தருளும் என்று ஜெபி. சிருஷ்டிகர் தமது உண்மையின்மேல்சார்ந்திருக்கும் சிருஷ்டியை ஏமாற்றமாட்டார். பரம தகப்பன் தம் சொந்தப் பிள்ளைகளுக்குக்கொடுத்த வாக்கை முறிக்கமாட்டார்.

நான்நம்பும்படி செய்த உம்முடைய வாக்கை அடியேனுக்காக நினைத்தருளும் என்ற ஜெபம் நமக்கு விடைஅருளக் கெஞ்சுவதாகும். இதில் இரட்டை நியாயம் உண்டு. இது உம்முடைய வார்த்தை. இதை நீர்நிறைவேற்றுவீரா? நீர் நிறைவேற்ற மனதில்லாவிடில் ஏன் அதைச் சொன்னீர்? என்னை ஏன் அதைநம்பச் செய்தீர்? என்னில் நீர் உண்டாக்கின நம்பிக்கையை அபத்தமாய் செய்வீரா?

தேவன்வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பு(ரோ.4:21).

கர்த்தரின்மாறாத உண்மையை வேதத்தில் மா உன்னத விலை மதிக்கமுடியாத வாக்குத்தத்தம் ஆக்குகிறது.மானிடரின் வாக்குகள் ஒன்றுக்கும் உதவாதவை. வாக்கு மாறினதால் மனமுடைந்தவர்கள் அநேகர். இவ்வுலகஆரம்பமுதல் கர்த்தர் தம் பிள்ளைகளுக்குத் தாம் கொடுத்த வாக்குகள் ஒன்றிலும்தவறினதில்லை.

பிள்ளை தன் தகப்பனின் வீட்டினுள் செல்வதுபோலக் கிறிஸ்தவர்கள் உரிமையுடன் வாக்குத்தத்தமாகியகதவினுள் செல்லக்கூடும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்ய அஞ்சியவர்களாய்த் துன்பமாகிய கடும்இரவில் வெளியில் நிற்பது பரிதாபமே.

ஒவ்வொரு வாக்குத்தத்தமும் நான்கு தூண்களின்பேரில் கட்டப்பட்டிருக்கிறது. வஞ்சிக்கவிடாதகர்த்தரின் நீதி, அவரது பரிசுத்தம், மாறாத அவர் கிருபை, அல்லது அன்பு. மாறாமல் தாம்சொன்னவற்றை முடித்துவிடச்செய்யும் அவரது உண்மை – இவைகளே அந்த நான்கு தூண்கள்.