March

மார்ச் 7

நாங்கள் எப்பக்கத்திலேயும் உபத்திரவப்பட்டோம் (2.கொரி.7:5).

கர்த்தர்ஏன் இவ்வாறு ஓயாத கொடிய உபத்திரவங்களைக் கொடுத்து எங்களைச் சோதித்தார்? ஏனெனில்கஷ்டத்துக்கும் சோதனைக்கும் விலகியிருக்கும்போது, நாம் அறிவதைவிட இப்பொழுது நன்றாய்அவருடைய பலத்தையும், கிருபையையும் அறியும்படியே, பொக்கிஷம் மண்பாண்டங்களில் இருக்கிறது.பலத்தின் மகிமை கர்த்தருடையதேயன்றி நம்முடையதல்ல.

இது நாம்அவர்மேல் சார்ந்திருப்பதை நன்றாய் உணரச்செய்கிறது. நாம் அவரையே சார்ந்திருப்பதற்கும்,நம்மை முற்றிலும் அவர் கரத்தில் ஒப்படைப்பதற்கும், அவருடைய கரிசனையின் பேரில்எப்போதும் சார்ந்து கொள்வதற்கும் அடிக்கடி கர்த்தர் நமக்குப் போதித்து வருகிறார். நமதுசுயபலத்தில் சாராது அவர் கரத்தின் ஆதரவின்றி தனியே ஓர் அடியும் எடுத்துவைக்க முயலாதபடி, இயேசுதாம் பிதாவின் கட்டளைப்படி நடந்தபடியே நாம் இருக்க விரும்புகிறார். இது நமக்குநம்பிக்கையைப் போதிக்கிறது.

சோதனையின்றிவிசுவாசத்தைக் கற்றுக்கொள்ள முடியாது. சோதனைகள் கர்த்தரின் விசுவாசப் பள்ளிக்கூடம்.நாம் வாழ்க்கையை ருசிப்பதைவிடக் கர்த்தரை நம்பப் படிப்பதே மேல்.

விசுவாசிப்பதை ஓருமுறை கற்றுக்கொண்டுவிட்டால் அது நித்திய பொக்கிஷம்.நம்பிக்கையில்லாவிட்டால் திரண்ட ஆஸ்தியும் நம்மை ஏழ்மையாய் விட்டுச் செல்லும்.

ஏனையோர்களித்துப் பாடுகையில் நான் ஏன் துக்கிக்கிறேன்?

பாடுகளின் ஆழத்தைக் காணவே

ஏனையோர் ஓய்ந்திருக்க நான் உழைப்பதேன்?

என் பலனைப் பயன்படுத்தவே!

ஏனையோர் இலாபம் பெறுகையில்

நான் நஷ்டமடைவதேன்?

தோல்வியின் உரிய வேதனையை உணரவே

உன் நிலை நன்றாயிருக்கையில்

நான் படுவேதனைப்படுவானேன்?

நித்தியத்தில் அவர் திட்டம்

என் வாழ்க்கையில் பூத்துக் குலுங்கவே!