March

மார்ச் 6

நாங்கள் நம்பியிருந்தோம் (லூக்.24:21).

எம்மாவூருக்குப் போகும்வழியில் சீடர்கள் இயேசுவிடம் நாங்கள் நம்பியிருந்தோம் என்பதற்குப் பதிலாக நாங்கள்இன்னும் நம்பியிருக்கிறோம் என்று சொல்லவில்லையே என்று நான் அதிக விசனமடைவதுண்டு. இதுமுடிந்துபோன காரியம். அதிக வருந்தத்தக்க காரியம்.

அவர்கள் அவரிடம் எல்லாம்நாங்கள் நம்பியிருந்ததற்கு மாறாக இருக்கிறது. எங்கள் நம்பிக்கை வீணானதுபோல்தோன்றுகிறது. ஆனாலும் நாங்கள் நம்பிக்கையை விடோம். அவரைத் திரும்பக் காண்போம்என்று நம்பகிறோம் என்று சொல்லிருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும். அப்படியல்ல,அவர்கள் தாங்கள் இழந்துபோன விசுவாசத்தை எடுத்துரைத்து அவரோடு நடந்து சென்றார்கள். இயேசுஅவர்களைப் பார்த்து புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே என்று சொல்ல வேண்டியதாயிற்று.

நம்மைப் பார்த்தும்கர்த்தர் இதே வார்த்தையைச் சொல்லக்கூடிய நிலைமையில் நாமில்லையா? கர்த்தரின் அன்பு,உண்மை இவைகளின்மேல் நம்பிக்கை உண்டென்றால் பிறகு எதன்பேரில்; நம்பிக்கையற்றுபோனாலும் பரவாயில்லை.

நம்முடைய விசுவாசத்தைக்குறித்துப் பேசுகையில் சீடரைப்போல் பேசாதிருப்போமாக. அவர்கள் நம்பினோம் என்றார்கள்.நாம் எப்பொழுதும் நம்பிக்கொண்டிருக்கிறோம் என்று சொல்வோமாக.

இனிமையான ஒளிநிறைந்தஇளவேனிற்காலம்

ஒவ்வொரு கிளையிலும்அழகிய பூக்கள் மலர்ந்திருந்தன.

அவரை நம்பினேன். இப்பொழுதும்நம்புகிறேன்.

இப்பொழுதுரோஜாப்பூக்கள்

மலரவில்லையென்பதனால்என் நம்பிக்கையும்

கலங்குமானால் அதுமிகவும் அற்பமானதே.

புயல் மேகங்கள் கனத்துவரும்

இவ்வேளையில் நான்விசுவாசமிழந்து

அவர் அன்பைச்சந்தேகித்தேனானால்

என் விசுவாசம் பலனற்றதே.