March

மார்ச் 4

விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களைப்பின்பற்றுகிறவர்களாயிருந்து… (எபி.6:12).

தாங்கள் அடைந்துள்ளஉன்னதப் பதவியிலிருந்து விசுவாச வீரர்கள் நம்மைக் கூப்பிட்டு, ஒருதடவை மனிதன் செய்ததைத்திரும்பவும் செய்யக்கூடும் என்கிறார்கள். விசுவாசம் தேவை என்பது மாத்திரமல்ல, விசுவாசம்பூரணமாய்க் கிரியை செய்யப் பொறுமையுங்கூட வேண்டும் என்கிறார்கள். நாம்சந்தேகப்படுவதினாலும் உற்சாகம் இழந்து போவதினாலும் சில வேளைகளில் கர்த்தரின்கையிலிருந்து விலகிப்போகிறோம். அவர் நமக்குக் கற்றுக்கொடுக்க இருக்கும் போதனைகளை இழந்துவிடுகிறோம்.இவ்வாறு நிகழாதபடி நாம் எச்சரிக்கையாயிருக்கவேண்டும்.

குப்பைமேட்டில் போடப்படுவதற்கு மாத்திரமே நான் பயப்படுகிறேன் என்று ஒரு கொல்லன் சொன்னான்.

நான்ஓர் உருக்குத் துண்டை உறுதிப்படுத்தும்பொழுது, அதைக் காய்ச்சி சம்மட்டியால் அடித்து,சீக்கிரமாக அதைக் குளிர்ந்த தண்ணீருள்ள வாளியில் அமுக்குவேன். சீக்கிரமாகவே அதுஉறுதிப்படக் கூடியதா அல்லது உடைந்துவிடுமா என்பதைக் கண்டுகொள்ளுவேன். இவ்வாறு இரண்டொருதரம்பரீட்சித்து உறுதிப்படுத்த இடங்கொடுக்காது என்று கண்டால் அதைக் குப்பையில் போட்டுக்கழிவுப்பொருள் வாங்குபவனுக்கு இராத்தல் ஆறு காசு வீதம் விற்றுவிடுவேன்.

இவ்விதமாகவே கர்த்தர்என்னைத் தீயினாலும், தண்ணீரினாலும் சம்மட்டி அடிகளினாலும் சோதிக்கிறார் என்றுஅறிகிறேன். நான் பரீட்சையில் தவறினால் அல்லது உறுதிப்படுத்தக்கூடாத வஸ்துவாகக்காணப்பட்டால் அவர் என்னைக் குப்பை மேட்டில் எறிந்து விடுவார் என்று பயப்படுகிறேன்.

அக்கினி அதிக உஷ்ணமாயிருக்கும்பொழுதுஉறுதியாய் நில். பின்னால் பாக்கியமடைவாய், யோபைப்போல் அவர் என்னையும் புடமிட்டபின்தங்கமாக வெளியேறுவேன் என்று நீயும் சொல்லக்கூடும்.

துன்பத்தின்வழியாய்த்தான் பரிசுத்தராகலாம். பியானோவில் ஒரு விசையைச் சீர்ப்படுத்த பதினொரு டன்நிறையுள்ள அழுத்தம் தேவை. அதுபோலவே நாமும் சோதனையைச் சகித்தால் கர்த்தர் தெய்வீக இன்னிசையோடுநம்மை இணையச் செய்வார்.

நம்மை வருத்தி நிலைகலங்கச் செய்யும் அனுபவங்களே

கர்த்தரை நன்றாய்த்துதிக்க நம்மை ஆயத்தப்படுத்துகின்றன.

கஷ்டமும் பாரமும்அழிவுமே, மகிழ்ச்சி நிறைந்த

நாட்களைவிட நமக்குஅதிகம் நன்மை செய்கின்றன.