March

மார்ச் 2

விடியற் காலத்தில் நீ ஆயத்தமாகி, மலையில் உச்சியில் என்சமுகத்தில் வந்து நில். உன்னோடே ஒருவனும் அங்கே வரக்கூடாது (யாத்.34:23).

காலையில்தியானிப்பது வெகு அவசியமானது. நீ கர்த்தரைப் பார்க்குமுன் அந்த நாளைப் பார்க்காதே.கர்த்தரின் முகத்தைக் காணுமுன் மற்றவரின் முகத்தைப் பார்க்காதே.

உன் சுய பலத்தைக்கொண்டேநீ ஒரு நாளைத் தொடங்கினால் நீ வெற்றியை எதிர்பார்க்க முடியாது. உன் இருதயத்தில்கர்த்தரைத் தியானித்து அவரோடு சில நிமிடங்களேனும் அமைதியாய்த் தரிந்திருந்து அதனால்ஏற்படும் சிற்சில யோசனைகளின் சக்தியோடு உன் அன்றாட வேலையைத் தொடங்கு. உன்மேன்மையுள்ள விருந்தாளியும், உன் மதிப்பிற்குரிய உயிர்த்தோழனுமான இயேசு கிறிஸ்துவைச்சந்திக்கும் வரை உன் வீட்டார், நண்பர், வேறெந்த மனிதரையும் சந்தியாதே.

அவரைத்தனிமையில் சந்தி, அவரை ஒழுங்காய் ஒவ்வொரு காலையும் சந்தி. அவருடைய ஆலோசனைபுத்தகத்தைத் திறந்து வைத்து அவரைத் தரிசனம் செய். அவருடைய பிரசன்னத்தின் சக்தி உன்கிரியைகளைத் திட்டமாய் நடத்தும். திட்டமிட்ட, திட்டமிடமுடியாத உன் எல்லாகடைமைகளையும் நிறைவேற்ற அவருடைய வல்லமையோடு செல்.

கர்த்தரோடு உன் நாளைத் தொடங்கு

அவரே நாளும் ஞாயிறுமாம்

அவரே உன் காலை ஒளி

அவர் மீதே உன் கீதம் பாடு.

காலையில் புதுப்பாட்டு பாடு

மாலையோடும், காட்டோடும் சேர்ந்து பாடு

புதுக்காற்று, கடல், வெளி இவற்றோடும்

ஒளி,மலரோடும், சிறு ஓடையோடும் பாடு.

உன் முதல் பாட்டைக் கர்த்தருக்கே பாடு,

உன் போன்ற மானிடருக் கன்று,

அவருடைய சிருஷ்டிகளுக் கன்று,

மாட்சிமை பொருந்திய அவருக்கே பாடு.

முதன்முதலில் தேவனோடு நட,

அவர் உன்னுடன் கூடவே வரட்டும்

ஓடையோ, கடலோ, மலைபாதையோ,

எதிலும் அவர் துணையையே நாடு.

உன்னத கர்த்தருடனேயே

உன் முதல் வேலை இருக்கட்டும்

அதனால் உன் தொழிலனைத்தும் ஓங்கி வளரட்டும்

நாள்முழுவதும் அன்பு நிறைந்ததாய் இருக்கட்டும்.

கர்த்தருக்கு இவ்வுலகில் அதிகமாக எதையும் செய்தவர்கள் அதிகாலையில் முழங்காலில் நின்றுஜெபித்தவர்களே.

மத்தேயு கென்றி என்பவர் காலை நான்கு மணி முதல் எட்டு மணிவரை தன் வாசகசாலையிலிருப்பார். காலைபோஜனமும், குடும்ப ஜெபமும் முடிந்தபின் அவர் அந்த அறையில் மதியம்வரை இருப்பார். நடுப்பகல்போஜனம் அருந்தியபின் நான்கு மணிவரை அங்கேயிருப்பார். மிகுதியான நேரத்தை தன்சிநேகிதரைச் சந்திப்பதில் செலவிடுவார்.

டாட்ரிஜ்என்பவர் தனது குடும்ப விளக்கம் என்னும் நூல் காலை ஐந்து மணிக்கு எழுந்தரிப்பதற்கும் ஏழுமணிக்கு எழுந்தரிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தைக் காட்டும் என்று கூறியுள்ளார். நாற்பதுவருட காலம் காலை ஐந்து மணிக்கு எழுந்து கொண்டிருப்போமானால் பத்து வருடம் அதிகமாய் ஜீவித்தவர்களாவோம்.

டாக்டர் ஆதாம் கிளார்க் என்பவரின் வேதவிளக்க நூல் முக்கியமாக அதிகாலையில் எழுதப்பட்டது.

பார்ன்ஸ்என்பவரின் அதி உபயோகப் பெயர் பெற்ற வேதவிளக்க நூலும் அவர் அதிகாலையில் எழுந்ததின்பயனாகும்.

சைமன்என்பவரின் குறிப்புகளின் மிகுதியான பாகம் காலை நான்கு மணி முதல் எட்டு மணிவரைதயாரிக்கப்பட்டது.