March

மார்ச் 1

தேவனுடைய செயலைக் கவனித்துப் பார். அவர் கோணலாக்கினதை நேர்மையாக்கத்தக்கவன் யார்? (பிர.7:13).

அடிக்கடிகர்த்தர் தமது பிள்ளைகளைத் தப்ப வழியில்லாதபடி இடுக்கத்தில் நிறுத்துகிறார். முன்பேஆலோசனை கேட்கப்பட்டிருந்தால் இப்படிப்பட்ட இடுக்கண்களுக்கு மனுஷீக தீர்ப்பு ஒருபொழுதும் இடங்கொடுத்திராது.மேகங்களே அவர்களை இந்நிலைமைக்கு வழி நடத்துகின்றன. ஒருவேளை இந்த நேரத்தில் நீஅப்படிப்பட்ட நிலைமையிலிருக்கலாம்.

அது நம்மைக் கலங்கச்செய்வதாயும், வெகு கவலைக்கிடமாக்குவதாயுமிருக்கலாம். ஆனால் அது சரியான காரியமே. அதன்பயன் உன்னை இவ்வழிக்கு நடத்தியவர் செய்தது சரி என்று காட்டக்கூடும். அது அவருடைய சர்வவல்லமையுள்ள ஆற்றலையும் கிருபையும் எடுத்துக் காட்டும் பீடமாகும்.

அவர் உன்னை விடுவிப்பதுமாத்திரமல்ல. நீ மறக்கக்கூடாத ஒரு பாடமும் கற்பிப்பார். இந்தப் பாடத்தை நீசங்கீதங்களாகவும், கீதங்களாகவும் திரும்பத் திரும்ப பாடுவாய். அவர் அவ்வாறுசெய்ததற்காக போதுமானபடி நன்றி செலுத்த உன்னால் முடியாது.

இயேசு ஆளுகிறார் என்பதைநாம் அறிந்திருந்தவர்களானால் அவர் விளங்கச் செய்யும் வரை பொறுத்திருப்போம். எனக்குவிளங்கவில்லை ஆனால் கர்த்தாவே நீர் அறிவீர் கோணலான இதை ஒரு நாள் எனககு விளங்கச்செய்வீர்.

அதுவரை அது நன்மையே செய்தது

என எண்ணியிருப்பேன்.

அதன் கோணலே என்னை உம்மோடு இணைத்தது.

விலகித் திரியும் என் கண்கள் உம்மேல் திரும்புமாறு

என் வழியை அடைத்து கோணலாக்கி

நான் தாழ்மையும் பொறுமையும் உடையவனாகி

உலக நேசத்தை விட்டு உம்மை நேசிக்குமாறு செய்தீர்

புரியாத இப்புதிர்க்காக உம்மைத் துதித்துப்போற்றுவேன்.

எனக்கு விளங்காதபோது உம்மை நம்புவேன்.

என்னைச் சோதிக்கப் பாத்திரவானாக

எண்ணியதால் மகிழ்வேன்

நடத்தும் உம் கரத்தையே என்றும் பற்றிக்கொள்வேன்.