June

யூன் 30

யூன் 30

அமைதலுண்டாயிற்று,அப்பொழுது நான் ஒரு மெல்லிய சத்தம் கேட்டேன் (யோபு 4:16).

இருபதாண்டுகளுக்கு முன் என்நண்பர் ஒருவர், மெய்ச்சமாதானம் என்ற ஒரு புத்தகத்தை என்னிடம் தந்தார். மத்தியகாலத்தில் பிரபலமாயுள்ள ஒரு செய்தியை அது தந்தது. நாம் மட்டிலும் அவர் குரலைக் கேட்கும்அளவுக்கு அமைதியாய் இருந்தால், ஆண்டவர் நமது உள்ளத்தின் ஆழத்தில் நம்முடன்பேசுவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறார் என்பதே அச்செய்தி.

அது ஓர் இலகுவான காரியம்என்று எண்ணினேன் நான். அது, முதல் நான் அமைதியாயிருக்கப் பயிற்சிசெய்ய முயற்சித்தேன்.ஆனால் நான் ஆரம்பித்தவுடனே, ஒரே குழப்பமான குரல்கள் எனது காதுகளில் ஒலிக்கஆரம்பித்தன, வெளியிருந்தும் என்னுள்ளிருந்தும் உரத்த கூச்சலான ஒலிகள் எனது காதுகளில்ஒலிக்க ஆரம்பித்தன, வெளியிலிருந்தும் என்னுள்ளிருந்தும் உரத்த கூச்சலான ஒலிகள் என்காதுகளில் ஒலிக்க ஆரம்பித்ததால் அவ்விரைச்சலைத் தவிர என்னால் வேறொன்றையும் கேட்கமுடியவில்லை.

அக்கூச்சல்களில் சில எனதுசொந்தக்குரல்கள். எனது கேள்விகளில் சில, எனது ஜெபங்கள், மற்றவை சோதனைக்காரன்தந்த சில ஆலோசனைகளும், உலகத்தின் குழப்ப கூச்சல்களும் ஆகும்.

எப்பக்கத்திலிருந்தும் நான்இழுக்கப்பட்டேன், தள்ளப்பட்டேன். மிகச் சப்தமான சொற்கள் தான் என் காதுகளில்விழுந்து சொல்ல முடியாத அலைக்களிப்பை உண்டுபண்ணி சிலவற்றிற்குப் பதிலளிக்கவேண்டும்என்று எனக்கும் தோன்றியது.

ஆனால், அண்டவர், நீஅமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்துகொள் என்றார். அதன்பின் மறுநாளையதினத்தைப்பற்றிய எண்ணங்கள், அதன் கவலைகள், கடமைகள் ஆகியவை போராட்டங்களாக வந்தன.ஆனால் ஆண்டவர் அமர்ந்திரு என்றார்.

நான் கவனித்துச் சிறுகச்சிறுகக் கீழ்ப்படியக் கற்றுக்கொண்டேன். எல்லா ஓசைகளுக்கும், ஒலிகளுக்கும், என்செவிகளை அடைத்துக்கொண்டேன். சில காலங்களுக்கப்பறம் வெளி ஓசைகள் அமர்ந்தபின், என்குரலுக்கு என் செவிகளை நான் அடைத்துக்கொண்டபின் என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஒருமெல்லிய குரலைக் கேட்டேன். அது சொல்ல முடியாத மென்மையானதும், ஆறுதலளிப்பதும்,வல்லமையானதுமாக இருந்தது.

நான் அதைக் கவனித்துகேட்டபோது அது எனக்கு ஜெபத்தின் குரலாகவும், ஞானத்தின் பேச்சாகவும், கடமையின்வார்த்தைகளாகவும் கேட்டது. நான் மிகவும் கஷ்டத்துடன் கவனிக்கவேண்டியதாயிருக்கவில்லை.என் ஜெபம் எனக்கு இலகுவாயிற்று. நான் எளிதாக நம்பிக்கைகொள்ளவும் முடிந்தது. பரிசுத்தஆவியானவரின் மெல்லிய குரல் என்னுடைய உள்ளான ஆன்மாவில் ஆண்டவர் கேட்கும் ஜெபமாயிற்று.அதுவே அவரிடமிருந்து எனக்கு வரும் பதிலுமாயிற்று. அதுவே என் உடலுக்கும் ஆன்மாவுக்கும் உயிரும்உலடலுமாயிற்று. என் ஞானத்தின் மொத்தமும் என் சகல ஜெபமும் என் எல்லாஆசீர்வாதங்களுமாயிற்று. உயிருள்ள என் ஆண்டவர் எனக்கு யாவற்றிலும் எல்லாமுமாயிருக்கிறார்என்பது உறுதியாயிற்று.

இவ்வாறுதான் நமது ஆவி நமதுஉயிர்த்தெழுந்த அண்டவரில் பங்குகொள்கிறது. நாம் புதிதாக மலர்ந்த மலரைப் போன்று நமதுகடமைகளையும் போராட்டங்களையும் எதிர்கொள்ளப் புறப்படுகிறோம். புயலடிக்கும் இரவில் பனிபெய்வதில்லை. அதுபோலவே, அவருடைய கிருபையாகிய பனி குழப்பமடைந்து, அமைதியற்றஆன்மாவுக்கு கிடைப்பதில்லை.