June

யூன் 29

யூன் 29

அங்கே இராட்சதரையும்கண்டோம் (எண்.13:33).

ஆம், அவர்கள் இராட்சதரைக்கண்டார்கள். ஆனால் காலேபும் யோசுவாவும் ஆண்டவரைக் கண்டார்கள். ஐயம் நிறைந்தவர்கள்,எங்களால் மேலும் போக முடியவில்லை என்பார்கள். விசுவாசம் உள்ளவர்களோ, நாம் மேலேசென்று அதனைப் பிடித்துக்கொள்வோம். ஏனெனில் அது எங்களால் முடியும் என்று கூறுவார்கள்.

இராட்சதர் என்பது பெரியகஷ்டங்களைக் குறிக்கும். இராட்சதர் எங்கும் மறைந்திருக்கிறார்கள். நமது சமுதாயவாழ்க்கையில், நமது திருச்சபைகளில், நமது குடும்பங்களில், நமது இதயங்களிலேயே இருக்கின்றனர்.அவர்கள்மீது நாம் வெற்றியடையவேண்டும். இல்லாவிடில் கானானின் இராட்சதரைப்பற்றிச்சொல்லப்பட்டதுபோல அவர்கள் நம்மையே விழுங்கிவிடுவார்கள்.

விசுவாசமுள்ள மக்களோ,அவர்கள் நமக்கு இராயாவார்கள். நாம் அவர்களை உண்டுவிடுவோம் என்றார்கள். வேறுவார்த்தைகளில் இதை, நாம் அவர்களை வென்றுவிடுவதனால் வெல்லுவதற்கு இராட்சதர்கள் இல்லாதபொழுதுஇருப்பதைக் காட்டிலும் நாம் அதிகப் பெலன் உள்ளவர்களாகிவிடுவோம் என்று கூறலாம்.

உண்மை என்னவெனில், நமக்குவெற்றி பெறும் விசுவாசம் இல்லாவிட்டால், நாம் நமது வாழ்க்கையிலுள்ள இராட்சதர்களால்வெல்லப்பட்டு அவர்களுக்கு இரையாகிவிடுவோம். யோசுவா, காலேப் என்ற இந்த விசுவாச ஆவியைஉடையவர்களாயிருந்த மக்களைப்போல் நாமும் இருப்போமாக. நம் அண்டவரை நோக்குவோம். அவர்நமது கஷ்டங்களைப் பற்றிக் கவனித்துக்கொள்ளுவார்.

நாம் நமது கடமையைச்செய்யும்பொழுதுதான் இராட்சதரைக் காண்கிறோம். இஸ்ரவேலர் முன்னேறிச் செல்கையில்தான்இராட்சதரைக் கண்டார்கள். அச்சமுடன் அவர்கள் திரும்பிப் பாலைவனத்தைப்பின்நோக்கியபொழுது இராட்சதரை அவர்கள் காணவில்லை.

ஆண்டவரின் வல்லமை, நம்மைநமது வாழ்க்கையில், நமது சோதனைகளுக்கும் போராட்டங்களுக்கும் மேலாகத்தூக்கிக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் பொதுவாக நமக்கும் உண்டு. ஆனால், ஆண்டவருடையவல்லமை போராட்டங்களைக் கொண்டுவரும் என்பதுதான் உண்மை. பவுலடியார் ரோம் நகருக்குப்பயணம் சென்றபோது ஏதோ பெரிய ஆற்றல் அவரைப் புயல்கள், போராட்டங்கள், எதிரிகள்அகியவை தாக்கிடாது காத்துக்கொண்டிருக்கும் என்று நாம் எண்ணலாகாது. ஆனால், அதற்கு மாறாகயூதர்களுடன் ஏற்பட்ட போராட்டம், புயல்கள் நச்சுப்பூச்சிகள், உலகம், நரகம் இவற்றின்வல்லமைகளோடு நெடும் போராட்டம் செய்தார்கள். கடைசியாக அவர் மிகவும் நெருக்கமானநிலையில் காப்பாற்றப்பட்டு மெலித்தா தீவின் கரைக்கு ஒரு கட்டையைப் பிடித்துக்கொண்டுநீந்திக்கரை சேர நேர்ந்தது.

இது அளவிடப்படாத ஆற்றுலுள்ளஆண்டவருடைய செயலா? ஆம், அதேதான். பவுலடியார் கிறிஸ்து நாதரைத் தன் உடலின் உயிராகஏற்றுக்கொண்டபொழுது, ஒரு பயங்கரப் போராட்டம் உடனே வந்ததென்றும், அது முடிவில்லாப்போராட்டமாகவும், சதா தொல்லை தந்து கொண்டே இருந்ததாகவும், ஆனால் எப்பொழுதும்அதிலிருந்து அவர் இயேசு நாதரின் வல்லமையினால் வெற்றியே கண்டார் எனவும் கூறுகிறார்.

மிகவும் அழகாக அவர் இதைநாங்கள் எப்பக்கத்திலம் நெருக்கப்பட்டும், ஒடுங்கிப்போகிறதில்லை. கலக்கமடைந்தும்மனமுறிவடைவதில்லை. துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுவதில்லை, கீழே தள்ளப்பட்டும்மடிந்து போகிறதில்லை, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலேயேவிளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்துதிரிகிறோம் என்று குறிப்பிடுகிறார்.

இது எவ்வளவு பயங்கரமானதொடரும் பேராட்டமம். மூலமொழியில் உள்ள அதே உணர்ச்சி வேகத்துடன் பிற மொழியில் கூறுவதுகடினம். ஒன்றின்பின் ஒன்றாக ஐந்து ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. முதல் ஓவியத்தில்ஏராளமான எதிரிகள் கூட்டமாக, எல்லாப் பக்கங்களிலும் இருந்து வந்து நெருக்குவதுகாட்டுப்பட்டுள்ளது. அவர்கள் நெருக்கினாலும், அவர்கள் நொறுக்கப்படவில்லை. ஏனெனில்தெய்வீக படைத்தலைவர் அவர் செல்ல வழிவகுத்துத் தந்தார். சொல்லுக்கு சொல்மொழிபெயர்த்துக்கூறின் நாங்கள் எல்லாப் பக்கங்களிலும் எதிரிகளால் சூழப்பட்டுநெருக்கப்பட்டோம். ஆனாலும் நாங்கள் நசுங்கிப் போகவில்லை எனலாம்.

நாம் காணும் இரண்டாவது படம்,ஒருவன் செல்லும் பாதை முற்றிலும் அடைக்கப்பட்டதாகத் தோன்றுகிறது என்றாலும் அவன்அடைப்பை ஊடுருவிச் செல்கிறான். அடுத்த எட்டு எடுத்து வைக்கப் போதிய வெளிச்சமில்லை.புதுத்திருப்புதல் வேதாகமத்தில் இதை மனம் கலங்கியும், மனம் முறிந்து போகிறதில்லை, எனமொழி பெயர்த்துள்ளனர். ராதர் காம் தமது மொழிபெயர்ப்பில், வழியில்லாதுபோனாலும் குறுக்குப்பாதை இல்லாமலில்லை என எழுதியிருக்கிறார்.

மூன்றாவது காட்சி, எதிரிஒருவன் துரத்திக்கொண்டு வருகிறான். தெய்வீகக் காப்பாளர் ஒருவர் அருகில் நிற்கிறார்.ஆகையால் அவர் தனித்து நிற்கவில்லை. ராதர்காம் மொழி பெயர்ப்பு இதை இன்னும் தெளிவாக்குகிறது. இதில் வேட்டையாடப்பட்டும் கைவிடப்படாமல் என்று எழுதப்பட்டிருக்கிறது.

நான்காவது சித்திரத்தில்நாம் காண்பது இன்னும் தெளிவாக இருக்கிறது. ஒரு மனிதனைத் துரத்தி வந்த அவனுடைய எதிரி,அவனை அடித்து தாக்கியும்விட்டான். அடிபட்ட அம்மனிதன் கீழே விழுந்துவிட்டான். அடிமரணத்துக்கேதுவானாதல்ல. அவன் மீண்டும் எழுகிறான். இதைக் கீழே விழத்தள்ளப்பட்டாலும்,தோல்வியடையாமல் என்று மொழியாக்கம் செய்யலாம்.

ஐந்தாவது ஒவியக்காட்சிகாட்டுவது மரணம் வந்துவிட்டது. ஆனாலும் அவன் மாண்டுபோகவில்லை. அவனுக்கு உதவியாக இயேசுவிலிருந்துஉயிர் வருகிறது. அவன் இப்பொழுது மற்றொருவரின் (இயேசு நாதரின்) உயிரில் வாழ்க்கிறான்.

இவ்வாறாகதெய்வீகக்குணமளிக்கும் அனுபவத்தைப் பெறுவதற்கு பலருக்கு இயலாமற்போவதற்குக் காரணம்,அவர்கள் எவ்வித போராட்டமுமின்றி அதைப் பெற்றுக்கொள்ளவேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.ஆதலால் போராட்டம் வந்து நீடிக்கும்பொழுது மனமடிவாகிச் சோர்ந்து போகிறார்கள். அவ்வளவுஇலகுவாகக் கிடைக்கக்கூடியது ஆண்டவரிடத்தில் ஒன்றும் கிடையாது. அவருடைய கடையில்மலிவுவிலைப் பொருள்கள் ஒன்றும் விற்கப்படுவதில்லை. நம்முடைய மீட்புக்காக அவர்தம்மிடமிருந்ததனைத்தையும் தந்தார். வைத்துக்கொள்ள மதிப்புள்ள எப்பொருளுக்கும் விலைஅதிகமே. விசுவாசமும் நற்பண்புகளும் வளரும் பாடசாலைகள் கடினமானவைகளே. வெறும் மனிதபெலனுக்கு மேலாக நாம் எழும்ப வேண்டுமானால், பிரசவ வேதனை தரும் போராட்டங்களின்மூலமேமுடியும். அவற்றின் வழியாகத்தான் நாம் தெய்வீக வல்லமையையும் காண்பிக்க இயலும்.மோசேயின் எரியும் முள்செடி அல்லது அணையா நெருப்பு காட்சி, இவைதான் இதற்கேற்றஎடுத்துக்காட்டுகள். அணையா நெருப்புக் காட்சியில் நெருப்பை அவித்துவிடச் சாத்தான் குடம்குடமாகத் தண்ணீரை ஊற்றுகிறான். ஆயினும் நெருப்பு அணையவே இல்லை. ஏனென்றால்பின்புறத்தில் ஒரு தேவதூதன் குடம்குடமாக எண்ணெயை ஊற்றிக்கொண்டிருக்கிறான்.

துன்பத்தால் சூழப்பட்டுஆழ்ந்துள்ள தேவனுடைய பிள்ளையே, நீ நம்பி, உறுதியாக நின்று முறியடிக்கப்பட மறுத்தாயெனில்நீ தோற்றுப்போகவேமாட்டாய்.