June

யூன் 27

யூன் 27

உன் தேவன் உனக்குப்பலத்தைக் கட்டளையிட்டார் (சங்.68:28).

தீர்மானத்துடனும் உறுதியானசெயல்பாட்டுத் திறனுடனும் நமது வாழ்க்கையின் செயல்களைச் செய்ய நமக்கிருக்கும் ஆரம்பப்பண்பாற்றலை ஆண்டவரே நமக்குத் தருகிறார். உள்ளான மனிதனில், நாம் ஆவியானவரால்வலிமையான ஆற்றல் உள்ளவர்களாக்கப்படுகிறோம். இவ்வாற்றல் நமக்குத் தொடர்ந்துகிடைக்கிறது. இவ்வாற்றலை ஒருவரும் குறைத்திட முடியாது.

உன் நாட்களுக்குத் தக்கதாய்உன் பெலனும் இருக்கும் (உபா.33:25). பெலன் – மனதின் பெலன், அன்பின் பெலன்,நியாயத்தீர்ப்பின் பெலன், மேலான நோக்கங்களின் செயலாற்றல்களின் பெலன்.

நான் முன்னேறிச் செல்ல,கர்த்தர் என் பெலனாயிருக்கிறார். முடிவில்லா கரடான பாதையில் நாம் நடக்க அவர் நமக்குப்பெலன் அளிக்கிறார். வாழ்க்கையில் உயிரூட்டும் சம்பவங்களற்ற, களைப்புத்தரும் பாதையில்செல்கையில் அவர் நமக்குப் பெலன் தருகிறார். ஒரே மாதிரியான, தொல்லைகளாக வேலைகளை நாம்செய்து மனமடிவாகிப் போகையில் அவர் நமக்குப் பெலன் தந்து ஊக்குவிக்கிறார்.

நான், மேல் நோக்கிச்செல்ல கர்த்தர் என் பெலானயிருக்கிறார். கஷ்டங்கள் என்னும் மலைமீது நான் அச்சமின்றிஏறுவதற்கான ஆற்றலைத் தரும் வல்லமையாக அவர் எனக்கிருக்கிறார்.

நான் உயர்நிலைகளிலிருந்து,கீழிறங்கிச் செல்கையில் கர்த்தர் என் பெலனாயிருக்கிறார். இதமான உயர்ந்த மலைகள். அங்குஉற்சாகந்தரும் ஒளியும் இளங்காற்றுகளும் இவற்றைவிட்டு நாம் அன்றாடம் உழலும் சமவெளிக்குத்திரும்புகிறோம். இங்கு காற்றில்லை, புழுக்கம் மிகுதி, இதயம் சோர்ந்துபோகிறது. இந்நிலையில்கர்த்தர் நமக்குப் பெலனளித்துத் தாங்குகிறார்.

நாளுக்கு நாள் பெலன்குறைவடைந்து வந்த ஒரு நண்பர் நான் கீழிறங்கி வருவதுதான், என்னைக் களபை;பாக்குகிறதுஎன்றார்.

அமர்ந்து இருப்பதற்கு கர்த்தர்எனக்குப் பெலனளிக்கிறார். அமர்ந்திருப்பது எவ்வளவு கடினமான செயல், வேலையற்றுவாளாவிருக்கும் வேளையில், நாம் ஒருவரையொருவர் நோக்கி, நான் மட்டும் ஏதாவதுசெய்துகொண்டிருக்கக் கூடுமானால்! என்று அடிக்கடி கூறுவதுண்டல்லவா?

குழந்தைநோய்வாய்ப்பட்டிருக்கையில் தாய் தன் இயலாமையினால் சற்று நேரம் ஏதும் செய்ய இயலாது இருக்கிறாளன்றோ?அதைவிட யாதும் செய்யாது காத்துக் கொண்டிருப்பதற்கு அதிகப் பெலன் தேவை. கர்த்தர் என்பெலனாயிருக்கிறார். எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது.