June

யூன் 26

யூன் 26

சிலர்விசுவாசியமற்போனாலுமென்ன? அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை அவமாக்குமோ?

என் அற்பமான வாழ்க்கையில்ஒவ்வொரு சிறு துக்கமும் என் அவநம்பிக்கையால் மாத்திரமே வந்தது என்று நான்நினைக்கிறேன். என் கடந்த காலப் பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டன. நிகழ்காலத்திற்கேற்ற பலன் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. வருங்காலமும் பிரகாசமாகவேகாணப்படுகிறது. ஏனெனில் நிலைமாறா உண்மைகள் எனது எண்ணங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஏற்பமாறுவதி;லை. அவநம்பிக்கையினால் நான் தளாச்சியடையும்போதும் அவை தளர்வதில்லை. ஏனெனில்அவற்றின் அடித்தளம் கன்மலையாகிய கிறிஸ்து மேலும், அவற்றின் கொடுமுடி நித்தியத்தாலும்நிலைத்திருக்கின்றன. இவற்றையெல்லாம் நான் எப்போதும் விசுவாசித்தால்மகிழ்ச்சியடையாமல் இருக்கமுடியுமா? மலை ஏறுபவனுக்குத் தலைசுற்ற ஆரம்பித்தால், மலையே ஒருவெறும் தோற்றமாக அல்லது பனி சிகரமாக ஆகிவிடுமா?

தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்கண்டு நம்முடைய அவிசுவாசத்தால் பின்வாங்கினால், அது நமக்குக் கிடைக்காமல் போவதுஆச்சரியமல்ல. விசுவாசம் பலனைப் பெற்றுக்கொள்வதற்கு உரிமையுள்ளது என்பதல்ல. அது அதனைச்சம்பாதிக்கக்கூடியதுமல்ல. ஆனால் தமது ஈவைப் பெறுவதற்கு தேவன் நம்பிக்கையை ஒரு நிபந்தனைஆக்கியிருக்கிறார். கொடுப்பவர் தம்முடைய ஈவுகளுக்கு, அவருடைய இஷ்டமான நிபந்தனைகளைஏற்படுத்த உரிமை உடையவரே.

அவநம்பிக்கை இது எப்படிநடக்கும் என்று கேட்கிறது. விசுவாசம் எப்படி என்ற பத்தாயிரம் வினாக்களுக்கும் தேவன்என்ற ஒரே பதிலையேயளிக்கிறது. ஜெபிக்கும் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் எவ்வித செலவுமின்றிஜெபத்தால் அநேக காரியங்களைச் செய்யக்கூடியவர்களாயிருக்கிறார்கள். வேறு எந்த முறையிலும்அவ்வளவு குறைந்த நேரச் செலவில் அவ்வளவு ஏராளமான காரியங்களைச் செய்யமுடியாது.

பூரண விசுவாசம் நம்பிக்கை,இவற்றையுடைய ஒரு மனிதனால் உலக சரித்திரமே மாறும். இந்த வார்த்தைகள் இயேசு கிறிஸ்துவின்ஜெபத்தின் போதனையின்படி பார்த்தால் அவருடைய எண்ணத்திற்கேற்றவையே. நம்முடையபரமபிதாவின் சித்தப்படி நீ அந்த மனிதனாய் இருக்கமாட்டாயா?

விசுவாசம் அற்ற ஜெபம்சாரமற்றது. அது இலக்கு அற்ற வேலையாகவும், ஆன்மாவற்ற மாய்மாலமாகவும் ஒன்றுமற்று போகிறது.விசுவாசத்தோடுகூடிய ஜெபம் சர்வ வல்லமையுள்ள கடவுளையே தன் விண்ணப்பத்திற்கு துணையாககொள்கிறது. உன் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு பதில் கிடைக்கும் என்கிறநம்பிக்கை உண்டாகும்வரை ஜெபியாதிருப்பதே நலம். உண்மையான ஜெபம் ஏறெடுக்கப்படுகையில்வானமும் – பூமியும், இறந்த காலமும் – வருங்காலமும் ஆமென் என்று சொல்லும். கிறிஸ்துஅவ்வித ஜெபங்களைச் செய்தார்.

தேவ சித்தத்திற்கு ஏற்காததுதவிர ஜெபத்தால் கிடைக்காதது வேறு ஒன்றுமில்லை.