June

யூன் 25

யூன் 25

… புறப்பட்டுப் போங்கள், என்று இஸ்ரவேல்புத்திரருக்குச் சொல்லு…. (யாத்.14:15).

ஆண்டவருடைய அருமைப் பிள்ளையே, பின்வரும்,காட்சியை உன் மனக்கண்முன் கொண்டுவந்து பார். எத்தனை மகத்தான வெற்றிப் பவனி அது!ஆபத்தில் அகப்பட்ட பெற்றோர், பெரியோரின் அமைதியினாலேற்பட்ட அச்சத்தினின்றுவிடுதலை பெற்ற குழந்தைகளின் ஆரவாரம். மரணத்தைக் காட்டிலும் கொடிதான ஒரு நிலையிலிருந்துஅதாவது அடிமைத்தனத்திற்குத் திரும்பும் நிலையிலிருந்து காப்பாற்றப்பட்டதால்மாதர்களினூடே ஏற்பட்ட மட்டற்ற மனக்கிளர்ச்சி, அதனால் அவர்கள் ஏற்படுத்தியபேரிரைச்சல். ஆண்கள் மத்தியில் தாங்கள், தங்களை முன் நின்று நடத்திய மோசேக்கும்,அற்புதமாகச் செங்கடலைப் பிளந்து நீரைச் சுவர்போல் நிறுத்தி தங்களைப் பேராபத்தினின்றுமீட்ட வல்லமையுள்ள கர்த்தரின் கரங்களுக்கும் எதிராகக் கொண்டிருந்த அவநம்பிக்கையையும்நினைத்து வெட்கத்தாலும் அவமானத்தாலும் குறுகிப்போன நிலை! நிலையான உறுதியானவிசுவாசத்துடன், ஆண்டவர் தமது மக்களுக்கு என்றும் நலமானதையே செய்வார் என்ற மனஉறுதியுடன்நின்ற மோசே! இக்காட்சியைச் சிந்தித்துப் பாருங்கள்.

ஆண்டவருடைய கட்டளைக்கு அக்கணமே கீழ்ப்படிவதால்ஏற்படும் விளைவுகளைக் குறித்து அச்சங்கொள்ளாதே. உனது முன்னேற்றத்தைத் தடுக்கும்அலைகளின் சீற்றத்தைக் கண்டு நீ அஞ்சவேண்டியதில்லை. அலைகளின் பேரிரைச்சலுக்னுகும்ஆற்றலுக்கும் மேலாக ஆண்டவர் இராஜாவாக அரியணையில் நித்தியகாலமாக வீற்றிருக்கிறார்.கர்த்தர் சதாகாலங்களுக்கும் இராஜா வாயிருக்கிறார் (சங்.10:16).

புயல் அவருடைய ஆடையின் ஓரமாகவும், அவருடையவருகையின் அடையாளமாகவும் அவருடைய முன்னிலையைக் காட்டும் சுற்றுச் சூழல் தோற்றமாகவும் இருக்கிறது.

அவரை நம்பத் தணிந்துவிடு. துணிந்து அவரைப்பின்பற்றிச்செல், உன் முன்னேற்றத்தைத் தடுத்து, உன் உயிருக்கே பங்கம் விளைவிக்க இருந்தஅதே ஆற்றல்கள்தான், அவருடைய கட்டளையினால் உனது விடுதலைக்கான நிழல் பாதையாவதைத்தெரிந்துகொள்ளுவாய்.

உன் வாழ்வின் செங்கடலைஅடைந்திட்டாயோ?

அங்கிருந்து நீ யாதுசெய்திடினும்,

முன் செல்ல வழியில்லை,பின்வாங்கவும் வழி இல்லை.

கடலுக்குள் செல்வதன்றி வேறுவழியில்லையே.

கர்த்தருக்கு காத்திரு,அமர்ந்த நம்பிக்கையுடன்

உன் அச்சம்நீங்கும்வரையிலும்.

கர்த்தர் காற்றை அனுப்புவார்,கடல் பிளந்திடுமே.

உன் ஆத்துமாவை அவர் போஎன்பார்.

அவர் கரம் உன்னை நடத்தும்,முற்றும் நடத்தும்.

நீர்ச் சுவர்கள் மீண்டும்வீழந்திடும்முன்

எவ்வெதிரியும் உன்னைத்தொடரான்

அலை அணுகாது.அமிழ்ந்திடமாட்டாய் நீ.

அலைகளையும் தலைதூக்கிடும்,அதன்

நுரைகள் உன் காலடியில்கிடக்கும்.

அலைகடலின் வெறுந்தரையில்நடப்பாய் நீ

உன் கர்த்தர் செய்தபாதையில்.

காலைத்தியான நேரத்தில்,கலைத்த முகிலின்கீழ்

கர்த்தரைமட்டிலுமே நீகாண்பாய்.

அலையுமாக்கடல் நின்றுஅழைத்திடுவார் உன்னை

நீயறியாப் புது நாடுகளுக்கே

உன் எதிரி கடந்ததுபோல்உன் அச்சம் அகலும்.

நீ இனி அஞ்சிடாய்எதற்குமே.

உன்னாண்டவரை நீதுதித்திடுவாய்

அவர் தந்த உயிரடந்தனிலே