June

யூன் 24

யூன் 24

… என் கரங்களின்கிரியைகளைக்குறித்து எனக்குக் கட்டளையிடுங்கள் (ஏசா.45:11).

தந்தையே நான்ஏற்றுக்கொள்ளுகிறேன் என்று இயேசுநாதர் கூறியபோது இதே கருத்தைத்தான் கூறினார். தனதுவாழ்க்கையின் உச்சக்கட்டத்தில் இருந்த யோசுவா, மறைந்துகொண்டிருந்த ஆதவனை நோக்கி,சூரியனே, அசையாது நில், என்று சூரியனுக்கு கட்டளையிட்ட பொழுது இதே தோரணையில்தான் கூறினான்.

மூன்றரை ஆண்டுகள் மழைபெய்யாதபடி வானத்திற்குக் கட்டளையிட்டபோதும், பின்னர் வானத்தைத்திறந்துவிட்டபோதும்எலியா இதே முறையில்தான் பேசினான்.

மரணத்தருவாயிலிருந்தமெலன்கிதான் என்பவருக்கருகிலிருந்த மரண தூதனை மார்ட்டின் லூத்தர் ஜெபத்தால்தடுத்தபொழுது இவ்வதிகாரத்தைத்தான் பயன்படுத்தினார்.

இத்தகைய அற்புதமானஉறவினுக்குத்தான் நம்மை ஆண்டவர் அழைக்கிறார். வேதாகமத்தில் இப்பகுதியிலுள்ள பின்வரும்வார்த்தைகள் நமக்கு மிகவும் பரிச்சயமானவைதாம். என் கரங்கள் வானங்களை விவரித்தன.அவைகளின் சர்வசேனையும் நான் கட்டளையிட்டேன். (ஏசா.45:12). தமக்கு நாம்கட்டளையிடவேண்டுமென்று, ஆண்டவர் நம்மை அழைப்பது வியக்கத்தக்க உறவுதானே?

இந்த ஆண்டவருடையமனநிலைக்கும், நமது தயக்கங்கள் நிறைந்த விசுவாசமற்ற ஜெபங்களுக்கும் எத்தனை வேறுபாடு!நாம் செய்த பழக்கமான ஜெபங்கள் திரும்பத் திரும்ப அதே காரியங்களைக் கூறுவதால், அதன்கூர்மையை இழந்து விடுகிறது.

தமது உலக வாழ்க்கையில் பலநேரங்களில், பிறர் தமக்குக் கட்டளையிடும் நிலைக்குத்தான் இயேசுநாதர் தம்மைஆளாக்கியிருக்கிறார். எரிகோ நகருக்குள் பிரவேசிக்கையில், குருட்டுப் பிச்சைக்காரனைநோக்கி, நான் உனக்கு என்ன செய்யவேண்டுமென்று விரும்புகிறாய்? என வினவினார். இது, நீகட்டளையிடு, நான் செய்வேன் என்பது போலாகும்.

சீரோபேனிக்கேயபெண்ணிடத்தில் தமது வளங்களின் ஆதாரங்களின் திறவுகோல்களைத் தந்து, அவைகளை அவள்விரும்பியபடி பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறுவதைப்போன்று அவர் கூறினாரே, அதை நாம்மறக்கக்கூடுமோ?

ஆண்டவர் எவ்வளவு பாசத்துடன்தமது சிறு குழந்தைகளாகிய நம்மை உயர்த்தும் நிலையின் முழு உள்பொருளையும், எந்தமானிடன்தான் உணர்ந்துகொள்ள முடியும்? இது, என் ஆதாரவளங்களெல்லாம் உன்னிடமே இருக்கின்றன,என்று அவர் கூறுவதுபோல் இருக்கிறது. என் நாமத்தில் எதை நீங்கள் கேட்கிறீர்களோ அதை நான்செய்வேன்.

இம்மலையைப்பார்த்து: கடலில்

தள்ளுண்டுபோ என நீ கூறின்,

உன் இதயத்தில்சந்தேகியாதே.

விசுவாசிப்பின் அது நடந்தேறும்.

அவர்வாக்கைச் சந்தேகியாதே

அதுபோல் உன் மலைக்கும் சவால் விடு,

ஆண்டவரில்.

உன்மீட்பை உரிமை எனக் கேட்டிடு

உன்மீட்பர் இரத்தத்தாற் கிடைத்ததே.

மூவரென்றாய் இணைந்தே தந்தார்.

ஆவலாயுனக்கு நலமாய் மெய்யாகவே,

அதுநடந்திடும், வசனத்திற்குக் கீழ்ப்படி,

அதுபோல் உன் மலைக்கும் சவால்விடு,

ஆண்டவரில்.

தன்னலம், நோய், துன்பம் பாவமதை

தனியாகவே சந்தித்தாரவர் அன்று

அவரன்பின் ஒரேமகன் தாங்கினார்.

அவரிடமிரந்து நீ வலகிப்போனாயே,

அதுநடந்திட்டது. வசனத்திலமர்ந்திடு.

அதுபோல் உன் மலைக்கும் சவால்விடு

ஆண்டவரில்.

எதிர்க்கும் சுவரைச் சந்தித்திடு, நீ

எதிர்க்கும் ஜெபத்தால், பின் எழும்பிடு.

எரிகோவின் மதில்கள் முன் நடந்ததுபோல,

எழும்பிடு உன் துதிப்பேரிரச்சலை.

அதுநடதே தீரும். விசுவாசம் உறுதியானது.

அதுபோல் உன் மலைக்கும் சவால்விடு

ஆண்டவரில்.

இரட்டைவெண்க்கலக்கதவுகளிலெனிலும்,

இரும்புப்பாறைபோன்ற கம்பிகளும்

அதன்வழிதனை விடுமே, விசுவாசி உனக்கே,

அதனால்விசுவாசி நீ எங்குமே வென்றிடு.

அதுநடந்தே தீரும். எதிரி ஒரு பொருட்டல்ல,

அதுபோல் உன் மலைக்கும் சவால்விடு,

ஆண்டவரில்.

ஆண்டவரில் விசுவாசம் வைத்திடு,

ஆண்டவர் வார்த்தையில் ஐயமென்றும் விடு,

அதுஅற்புதம் செய்யும் அவரின் கோல்,

அதற்கெவ்வித காரணமும் கூறமுடியாது.

அதுநடந்திடும். வசனம் பற்றி நின்றிடு.

ஆதுபோல் உன் மலைக்கும் சவால் விடு,

ஆண்டவரில்.