June

யூன் 22

யூன் 22

அன்போ, சகலபாவங்களையும் மூடும் (நீதி.10:12).

இந்த அன்பை நாடுவதில்கருத்தாயிருங்கள்.

உனது தொல்லைகளைஆண்டவரிடத்தில் எடுத்துக்கூறு. சில நாட்களுக்கு முன்னே நாளேடு ஒன்றில் பக்தியுள்ள ஓர்அம்மையார் தனது சொந்த அனுபவத்தை எழுதியிருந்ததை வாசித்தேன். அது என்னை மிகவும்கவர்ந்ததால் அதை ஈண்டு குறிப்பிடுகிறேன்.

உறக்கமின்மையால் நான் ஓர்இரவில் மிகவும் அவதிப்பட்டேன். எனக்கு இழைக்கப்பட்ட ஒரு கொடிய அநீதியான செயல்என்னை வாதித்துக்கொண்டிருந்தது. எல்லாப் பாவங்களையும் மூடும் அன்பு என் இதயத்திலிருந்துஎங்கோ ஓடிப்போயிருந்தது. அன்பு சகலத்தையும் மூடும் என்று குறிப்பிட்ட கட்டளைக்குக்கீழ்ப்படிய ஆற்றல் எனக்குத் தருமாறு என் துன்பத்தில் ஆண்டவரை நோக்கிக் கெஞ்சினேன்.

உடனேதானே தூய ஆவியானவர்என்னில் செயலாற்றினார். எனக்கு மறதியைத் தந்தார். என் மனதிலேயே நான் ஒரு சவக்குழியைத்தோண்டினேன். ஆழமாக அதைத் தோண்டினேன். என்னைக் காயப்படுத்தின செயலை அதனுள் இறக்கிமண்ணைத் தள்ளி மூடினேன். ஒரு கல்லறை மேட்டையும் அமைத்தேன். வெள்ளை ரோஜாமலர்களைஅதன்மேல் அடுக்கினேன். பின் திரும்பிப் பாராமல் அவ்விடத்தை விட்டகன்றேன்.

அதன்பின் இனிதாயன்றுஉறங்கினேன். பயங்கரமான எனது காயம் வடுவின்றி மறைந்துவிட்டது. எனக்குக் கவலை தந்தகாரியத்தை இன்று நான் மறந்துவிட்டேன்.

அம்மலைச்சரிவில் ஒரு வடு தோன்றுது.

கடும்புயலாலது ஏற்பட்டது.

அவ்வகன்ற பள்ளம் அழகின்றிக்

காணப்பட்டது அம்லைச்சரிவில்.

ஆண்டுகள் பல சென்றிட்டன,

புல்படர்ந்த காயம் மறைந்தது.

ஆண்டுகளின் பணியால் அவ்விடம்

முன்விட அழகாயமைந்தது.

மென்இதயமொன்றிலோர் காயம்,

மறைந்தது இனிமை எல்லாமதனால்

அன்புமாறி மனது கசப்பாயிற்றே,

பலஆண்டுகள் கடந்திட்டன மெதுவாக.

ஆண்டுகள் செல்கையில், ஒரு தூதன்

அங்குதேனர்றி மறைந்திட்டான்.

மாண்டுபோன அன்பு இதயத்தில் துளிர்த்தது

அமைதிமீண்டும் வந்ததே.