June

யூன் 21

யூன் 21

……. அவர் வீட்டிலிருக்கிறாரென்று ஜனங்கள் கேள்விப்பட்டு….. (மாற்.2:1).

பவளப்பாறைகளை உருவாக்கும் சிறு பூச்சிகள் பாலிப்ஸ் என்றழைக்கப்படும். அவை கடல்நீருக்கடியிலேயே செயல்ப்படுகின்றன. அப்பொழுது அவைகள், தாம் ஒரு புதிய தீவின்அடித்தளத்தை அமைக்கிறோமென்றோ, அத்தீவின்மீது நாள் போக்கில் செடிகளும், விலங்குகளும்வாழுமென்றோ, அங்கு கடவுளுடைய பிள்ளைகள் பிறந்து, இயேசுநாதருடன் உடன் சுதந்தரவாளிகளாகநித்திய மகிமையிலிருக்க வளருவார்களென்றோ கனவுகள்கூடக் காணுவதில்லை.

ஆண்டவருடைய அணிவகுப்பில் உனது இடம், தனித்ததாகவும், மறைக்கப்பட்டும் இருந்தால்,அதைக்குறித்து நீ முறுமுறுக்காதே. அவர் உன்னை அங்கு வைத்துள்ளார். அதை விட்டும், ஆண்டவருடையசித்தத்தைவிட்டும் விலகிப்போக வழிதேடாதே, ஏனென்றால் பளப்பூச்சிகளில்லாதுபவளப்பாறை உண்டாக்க முடியாது. ஆன்மீக பாலிப்ஸ்களாக விருப்பமுடன் இருக்க விரும்புவோர்ஆண்டவருக்குத் தேவை. மனிதர் காணா இடங்களில் தூய ஆவியானவரால் தாங்கப்பட்டு அவர்கள்உழைக்கிறார்கள். அவர்களை ஆண்டவர் முழுவதுமாகத் தமது பார்வையில் வைத்துக்கொண்டிருக்கிறார்.

இயேசுநாதர்வெகுமதிகள் அளிக்கும் நாள் ஒன்று வரும். உன்னைப்பற்றிக் கேள்விப்படாத சிலர், நாம் இவனைஅறியோமே, இவ்வெகுமதியைப் பெறும் தகுதி இவனுக்கு எங்கிருந்து வந்தது என்று கூறக்கூடும்.ஆனால் அண்டவர் என்றும் தவறுகள் செய்வதில்லை.

போரட்டத்தில் நீநிற்கும் இடமே

உனது இடமாகும்,வாழ்க்கை

போராட்டத்தில்பயனற்றவன் நீயென

உன்முகம் மறைத்துவருந்தாதே.

உன்னை ஒருதிட்டத்திற்கேற்பவே

ஆண்டவர் அங்குவைத்திட்டார்.

உன்னை அவரே அதற்கெனத்தெரிந்தார்,

ஆதலால் உண்மையாயுழை.

உன்கவசம் கட்டிப் போராட்டத்திலும்

ஓய்விலும் உண்மையாயிரு.

ஏதுவாயிருப்பினும் ஆண்டவர் செயல்

மிகச்சிந்ததே, ஐயுறாதே.

எதுவாயிருப்பினும், போரோ, காவலோ,

உண்மையுறுதியுடன் நின்றிடு.

இதுதான்உன் தலைவர் இப்பொழுது

உனக்கிடும் பணியென்பதறி.

நாம் இருக்கும்மிகப்பத்திரமான சமயச் சார்பான கூட்டத்தையோ, நீதிமான்களின் ஐக்கியத்தையோ,மலையுச்சியின் தனித்தியானத்தையோ விட்டுவிட்டு, நாடோடி வாழ்க்கையில் நம்மை வைத்தஎம்மாவு ஊரின் இல்லத்திறடுகோ, நமக்கு அச்சந்தரும் வேறு பணியிடத்திற்கோ, அல்லதுதொலை தூரத்திலுள்ள மக்கதோனியா போன்ற அருட்பணி தளத்திற்கோ அமைதியான மன உறுதியுடன்செல்லலாம். ஏனெனில், அங்கு நாம் ஏற்கும் பணிகளில் நேரிடும் போராட்டங்களில்வெற்றியே பெறுவோமென ஆண்டவர் தீர்மானித்திருக்கிறார்.