June

யூன் 19

யூன் 19

…..அப்பத்துக்குத்தானியம் இடிக்கப்படும் (ஏசா.28:28).

கிறிஸ்து நாதருடைய கரங்களினால் நாம் மாவு ஆக்கப்பட்டலான்றி நாம் உலகத்தின் பசியைத்தீர்க்கும் அப்பங்களாக முடியாது. அப்பத்துக்கு தானியம் இடிக்கப்படும். கிறிஸ்து நாதரின்ஆசி சில நேரங்களில் துயரமாகும். ஆனால், மற்ற மக்களின் வாழ்க்கைகளில் ஆசீர்வாதம்தரக்கூடுமானால், நமது துன்பம், துயரம் நமக்குப் பெரும் விலையாகிவிடாது. உலகின் இன்றுள்ளஇனிமையான காரியங்களனைத்தும் கண்ணீர், நோவு ஆகியவற்றின்மூலம் வந்தவைகளே.

ஆண்டவர் தாம் தெரிந்துகொண்டவர்களுக்கு என்னை அப்பமாக உருவாக்கியுள்ளார். அந்த அப்பம்அவர்களைப் போஷிக்கச் சிங்கங்களின் பற்களில் அறைக்கப்பட வேண்டுமானால், அதனால்ஆண்டவருடைய நாமத்திற்கே துதி உண்டாவதாக.

பிரகாசிக்கப்படுவதற்கு முன் நாம் எரிந்து எரிக்கப்பட வேண்டும். எப்பொழுது நாம்இரத்தம் சிந்துதலை நிறுத்துகிறோமோ, அப்பொழுதே ஆசீர்வதிப்பதையும்நிறுத்திவிடுகிறோம்.

ஏழ்மை,கடினமான வாழ்க்கை, இடர்பாடுகள் ஆகியவை பல வாழ்க்கைகளை அறமுiயான வீரத்திற்கும் ஆன்மீகஉயர்வுக்கு வழி நடத்தியுள்ளன. கஷ்டங்கள், ஆற்றலுக்கும் விடா முயற்சிக்கும்சவாலாயிருக்கின்றன. அது ஆன்மாவின் வலிமை நிறைந்த பண்புகளைச் செயலிழக்க செய்கிறது.அவை பழங்கால கடிகாரத்திலுளள அதை ஓடச் செய்யும் பளுக்கள் போன்று இருக்கின்றன.கப்பலோட்டும் மாலுமிகள் எதிhகாற்றையும்கூட துறைமுகம் சேரப் பயன்படுத்திக்கொள்ளுகிறார்கள். விசுவாசத்திற்கும், தூய்மையான செயல்களுக்கும் தூண்டுகோல்களாகஎதிர்ப்புகளை ஆண்டவர் நியமித்திருக்கிறார்.

வேதாகமத்தின் பிரபலம் வாய்ந்த மக்களனைவரும் பசியுள்ள ஆத்துமாக்களுக்கு உணவாகப்போரடிப்பினால் காயப்பட்டு மாவாக அரைக்கப்பட்டவர்களே. ஆபிரகாமுக்கு கொடுக்கப்பட்டசான்றிதழ் அவரை, விசுவாசிகளின் தந்தை எனக் குறிப்பிடுகிறது. அது ஏனெனில் அவருடையவகுப்பில் துன்பம் சகித்தலிலும், கீழ்ப்படிதலிலும், அவர் முதலாவது மணவராகத் திகழ்ந்தார்.

யாக்கோபும் அதிகமாக அடிக்கப்பட்டு நொறுக்கப்பட்டார். யோசேப்பு காயப்பட்டார்,நொறுக்கப்பட்டார். போத்திபாரின் சமயலறையிலும், தமது உயர் நிலையை அடையுமுன்அவதிப்பட்டார்.

தாவீதரசன் ஒரு கவுதாரியைப்போல, மலைகளில் வேட்டையாடப்பட்டுக் காயப்பட்டுக் கால்கள்சோர்ந்தவராகக் களைப்புற்றுப் போனதின் பின்னர்தான் அரியணையேற முடிந்தது.

பவுல்அப்போஸ்தலர் ரோமப் பேரரசரது இல்லத்தார்க்கு ஆன்மீக உணவை ஈந்திட முடிந்தது வாரடிபட்டுக்கல்லால் காயப்பட்டதினால்தான். அரச குடும்பத்தினரின் ஆன்மீக ஆகாரத்திற்கென அவர்மெல்லிய மாவாகத் துன்பங்களினால் அரைக்கப்பட்டார்.

போராட்டம் போன்றேதான் வெற்றியும், உனக்கு ஆண்டவர் சிறப்பச் சோதனைகளைஏற்படுத்தியிருந்தாரென்றால், அவர் தமது இதயத்தில் உனக்கென ஓர் சிறப்பு இடம்வைத்திருக்கிறார் என்று உறுதிகொள். பெரிதும் துன்பமனுபவிக்கும் ஆத்துமா ஆண்டவரால்தெரிந்தெடுக்கப்பட்ட ஆத்துமாவாகும்.