June

யூன் 18

யூன் 18

ஆகையினால் நெகிழந்தகைகளையும், தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள் திரும்ப நிமிர்த்தி, முடமாயிருக்கிறதுபிசகிப்போகாமல் சொஸ்தமாகும்படிக்கு உங்கள் பாதங்களுக்கு வழிகளைச்செவ்வைப்படுத்துங்கள் (எபி.12:12-13).

நமது ஜெபங்களுக்காக நாம்முழங்காலூன்றி நிற்பதற்கும், நமது விசுவாசக் கரங்களை உயர்த்துவதற்கும், ஆண்டவர் நம்மைஉற்சாகப்படுத்துவதற்கும் இவ்வார்த்தைகள் நமக்கு உற்சாகத்தைக் கொடுக்கின்றன. அடிக்கடிநமது விசுவாசம் களைப்படைந்து ஊக்கமிழந்து, தளர்வுற்றுப் போகிறது. நமது ஜெபங்களும் வலுவையும்,பயன்தரும் நிலையையும் இழந்துவிடுகின்றன.

இங்கு கூறப்படும் உவமானம்மிகவும் கவர்ச்சிகரமானது. நாம் மனமடிவாகி அச்சத்தால் நிறைந்தவர்களாகக் கோழைகளாகப்போய்விடும்பொழுது, சிறிய தடைகளும் நம்மை இன்னும் மனமடிவாக்கி அச்சுறுத்துகின்றன. ஆதலால்நாம் இச்சிறு தடைகளையும் எதிர்த்து நிற்காது, இலகுவான வழியாக அதைச் சுற்றிப்போய்விடுகிறோம் என்னும் தத்துவம் இங்கு கூறப்படுகிறது.

ஒருவேளை அது அண்டவர்நம்மில் குணமாக்காமல் இருக்கும் உடல் உபாதையாயிருக்கலாம். அனால், அதனால் ஏற்படும்கஷ்டங்கள் அதிகமாக இருப்பதால், நாம் மனுஷருடைய உதவியை நாடுகிறோம், அல்லது அதைச்சுற்றிக்கடந்து சென்றுவிடுகிறோம்.

நெருக்கடி நிலைகளுக்குஊடாகச் சென்று, அவற்றைச் சுற்றிக் கடந்து செல்வதற்கு அநேக வழிகள் உண்டு. நம்மைத்திகைக்க வைக்கும் நிலைகளை அடிக்கடி நாம் சந்திக்கிறோம். பின்வருமாறுசாக்குப்போக்குகளைச் சொல்லித் தவிர்த்து விட விரும்புகிறோம். இந்த நிலைக்கு இப்பொழுதுநான் ஆயத்தமாயில்லை, என்பது அச்சாக்குப்போக்கு. ஏதோ ஓர் அர்ப்பணம் நாம் செய்யவேண்டிஇருக்கலாம். நம்மிடம் கீழ்ப்படிதல் எதிர்பார்க்கப்படுகிறது. எரிகோ நகரத்தைப்பிடிப்பதுபோன்ற பெரிய காரியத்தை செய்ய நாம் எதிர் பார்க்கப்படுகிறோம். ஓர் ஆத்துமாவைநாம் ஆண்டவருக்கென்று பிடித்துக்கொள்ளவேண்டிய தைரியமற்றவர்களாயிருக்கிறோம். நமக்கு இருக்கும்உடல் உபாதை அரைகுறையாகக் குணம் ஆகியிருக்கிறது. அதைத் தவிர்க் நாம் சுற்றிப்போகிறோம்.

ஆண்டவர் நெகிழந்த கைகளைநிமிர்த்துங்கள் என்று கூறுகிறார். வெள்ளத்தினூடே துணிந்து செல்லுங்கள். நீர் பிளந்துவழிவிடும். செங்கடல் பிளக்கும், யோர்தான் ஓட்டம் நின்று வழிவிடும். ஆண்டவர் உன்னைவெற்றிக்கு வழி நடத்துவார்.

உன் கால்கள் வழிதவறாதிருக்கட்டும், உன் உடல் குணமாகட்டும், உன் விசுவாசம் உறுதிப்படட்டும். முன்னேறிச்செல், வெற்றி பெறாது உனக்குப் பின்னால் எரிகோவை விட்டுச் செல்லாதே. சாத்தான்உன்னை வென்றிடுவான் என்று சொல்லக்கூடிய இடம் ஒன்றையும் பின்விட்டு முன் செல்லாதே. இதுஉனக்கு சிறந்த இலாபத்தைத் தரக்கூடிய, நடைமுறைக்கான பாடம். எத்தனைமுறைகள் நாம் இவ்வாறானஇடங்களில் இருந்திருக்கிறோம். இன்று நீ ஒரு வேளை அவ்வாறான இடத்தில் இருக்கிறாயோ?

உன் மனவடிவைப்பொருள்படுத்தாதே, ஒரு கப்பல், கொந்தளிக்கும் கடலிலோ, அமைதிக்கடலிலோ, வெயிலடிக்கும்பொழுதோ மழையிலோ அயராது முன் செல்வதுபோல் முன்னேறிச் செல். உனது நோக்கம், நீ அடையவேண்டிய துறைமுகத்தை நேராக அடைந்து, உனது சரக்குகளை அங்கு கொண்டு சேர்ப்பதாயிருக்கட்டும்.