June

யூன் 16

யூன் 16

…. நான் நம்புகிறதுஅவராலே வரும் (சங்.62:5).

நமது விண்ணப்பங்களுக்கானபதில்களை எதிர்பார்ப்பதில் பொதுவாக நாம் கவனக்குறைவைக் காட்டுகிறோம். நமதுவேண்டுகோள்களில் நாம் எவ்வளவு அக்கறையற்றவர்களாக இருக்கிறோம் என்பதை இது காட்டுகிறது.தன் விவசாயத்தில் தகுந்த மகசூல் கிடைக்காவிட்டால், ஒரு விவசாயிமனநிறைவுகொள்ளமாட்டான். குறிபார்த்துச் சுடும் ஒருவன் தான் அனுப்பும் குண்டு எவ்விடத்தில்படுகிறதென்பதைக் கவனிப்பான். மருத்துவர் தான் கொடுக்கும் மருந்துகள் அளிக்கும் பயன்கள்யாவை என அறிவதில் கவனமாயிருப்பார். அப்படியானால், ஒரு கிறிஸ்தவன் மட்டும் தனதுசேவையின் பலனைக் குறித்து அக்கறையற்றிருக்கலாமோ?

வாக்களிக்கப்பட்டபடிதேவசித்தத்திற்கேற்பத் தூய ஆவியானவரின் தூண்டுதலின் பேரில், இயேசு கிறிஸ்துவின்நாமத்தில் செய்யப்பட்ட ஒவ்வொரு கிறிஸ்தவனின் ஜெபமும், இவ்வுலக நன்மைக்கோ அல்லதுஆன்மீக ஆசீர்வாதத்திற்கோ வேண்டிக்கொள்ளப்பட்டால் நிச்சயமாக முழுமையான பதிலைப்பெறுகிறது அல்லது பெறும்.

ஆண்டவர் தமது மக்களின்ஜெபங்களுக்கு, அவைகளின் நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டு பதில் தருகிறார். அவர்அம்மக்களின் ஆன்மீக, நித்திய நலத்தையும் தமது மகிமையையும் முக்கியமானதாகக்கொண்டுபதிலளிக்கிறார். இரக்கத்திற்காகத் தம்மண்டை வந்த எவரையும் இயேசு நாதர்ஒதுக்கித்தள்ளியதே இல்லை. அதனால் அவருடைய நாமத்தில் செய்யப்பட்ட எந்த ஜெபத்திற்கும் பதில் இல்லாமற்போகாது.

ஜெபத்திற்கான பதில்வந்துகொண்டிருக்கலாம். அது வருவதை நாம் தெரிந்துகொள்ளாமற்போகலாம். குளிர் காலத்தில்நிலத்தினடியில் கிடக்கும் வித்தானது வேர் விட்டு முளைத்தெழுந்து பலன் தர இருக்கிறது. நாம்அதனை நிலத்திற்குமேல் காண்பதில்லை. அதை நாம் மறைந்து செத்துவிட்டதென நினைத்தாலும்,அது உயிருடன் இருந்து பலனளிக்கும்.

தாமதமாகும் ஜெபங்களின்பதில்கள் விசுவாசச் சோதனைகள். அது மட்டுமல்ல, எதிர்ப்புகளின் மத்தியிலும் நாம் நம்ஆண்டவரை மதித்து அவர்மீது மாறாத, உறுதியான நம்பிக்கைகொள்ள, நமக்குப் பதில்கிடைக்காத தாமதமாகும் ஜெபங்கள், நல்ல வாயப்புகளாகும்.