June

யூன் 13

யூன் 13

என்னுடைய (சொந்த)சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். (யோ.14:27).

இளைப்பாறுதல் என்றகருத்தை விளக்க தங்கள் கற்பனைகளை இரு ஓவியர்கள் ஓவியங்களாகத் தீட்டினர். ஒருவருடையஓவியத்தில் நெடுந் தொலைவில் மலைகளும் அவற்றின் மத்தியில் அமைதியான ஓர் ஏரியும்சித்தரிக்கப்பட்டிருந்தது. மற்றவருடைய ஓவியம் ஓலமிடும் நீர்வீழ்ச்சி ஒன்றைக் காட்டியது.ஒடிந்து விழுந்து விடுவோமோ என்னும் நிலையிலுள்ள மரக்கிளைகள் ஒன்று வரையப்பட்டிருந்தது.மரக்கிளையை நீர்வீழ்ச்சியின் நீர்த்திவலைகள் நனைத்தன. அக்கிளையில் ஓர் இராபின்பறவை தன் கூட்டை அமைத்து அதில் அமர்ந்திருப்பது சித்தரிக்கப்பட்டிருந்தது.

முதலாவது ஓவியம் காட்டியதுவெறும் தேக்கம். இரண்டாவது காட்டியதோ இளைப்பாறுதல்.

அதிகமாகத் தொல்லைகள்நிறைந்ததாக உள்ள இவ்வுலக வாழ்க்கைகளில் கிறிஸ்து நாதருடைய வாழ்க்கையை முதன்மையாகக்கூறலாம். சோதனைகளும் துன்பங்களும் அவருக்கு மாறி மாறி வந்து கொண்டிருந்தன. களைப்படைந்தஅவருடைய உடல் கல்லறையில் அடக்கம் செய்யப்படும்வரை, துன்பங்களாகிய அலைகள் அவர்மீதுமோதிக் கொண்டே இருந்தன. ஆனால் அவருயைட உள்ளான வாழ்க்கை கண்ணாடிக்கடல் போன்றுஅமைதியாயிருந்தது. எப்பொழுதும் அதில் பேரமைதி நிலவியது.

நீ எந்த நேரத்திலும்அவரிடம் சென்று அமைதியைப் பெறக்கூடும். வேட்டை நாய்கள்போன்று எருசலேமின் யூதர்கள்அவரைப் பின்தொடர்ந்து வந்த நேரத்திலும் அவர் தமது சீடர்களுக்கு தம் சமாதானத்தைவாக்களித்தார்.

சமாதானம் அல்லது அமைதிநாம் ஆலயத்தில் அமர்ந்திருக்கும்பொழுது நம் மனதில் வரும் தூய உணர்ச்சியல்ல. அதுஆண்டவருக்குள் ஆழமாகப் பதிந்து பெறும் ஓய்வாம்.

என் சமாதானமுன் துன்பநேரம் தருவேன்,

தந்திடுமது அமைதி,நம்பிக்கை விடுதலை,

என் சமாதானம் உன்ஜெபம் வீணென நீ

நினைக்கையில் என்வேத வாக்கை நம்பு நீ.

என் சமாதானம் தருவேன் நீதனித்து நிற்கையில்,

அது தந்திடும் துன்பத்தில்இன்பகீதம்

என் சமாதானம் நீ நொடிந்துபோகையில் தருவேன்

அதுன்னை மாட்சி வழியில்சிலுவைக்கழைத்திடும்.

என் சமாதானம் எதிரிகுறைமிகுகையில் தருவேன்,

உன் தொல்லையில் என்ஐக்கியம் இனியதே.

என் சமாதானம் உன் துன்பம்வியர்வையில் தருவேன்,

என் நெற்றியிலும் வந்ததேவியர்வை.

என் சமாதானம் நண்பர்தம்துரோகத்தில்

அச்சமாதானம்ஜெபிப்போர்க்கே தருவேன்,

என் சமாதானம் உன் சாவிலும்தருவேன்,

என்னண்டை வரும் வழிசிலுவையே.