June

யூன் 12

யூன் 12

நீங்கள் இயேசுகிறிஸ்துவுக்குள்ளாய்எல்லாவற்றிலும் சம்பூரணமுள்ளவர்களாக்கப்பட்டிருக்கிறபடியால்… (1.கொரி.1:5).

பெருந்துன்பம் தயரத்தினால்,ஜெபம் செய்யத் தூண்டப்பட்டு, நாளடைவில் தனது துன்பத்தையே மறந்து, பக்தி வாழ்க்கையில்ஈடுபட்டுத் தங்கள் ஆத்துமா உற்சாகப்படுத்தப்பட்ட மக்களை நீ சந்தித்ததுண்டா?

இளவேனிற்காலம் ஒன்றின்பின் பகுதியில் ஒருநாள் புயல் ஒன்று வீசக்கண்டேன். கருமேகங்கள் வானத்தை மறைத்திருந்தன.மின்னல் பாய்ந்த பொழுதிலன்றி, காரிருளே எங்கும் நிறைந்திருந்தது. காற்றடித்தது.வானத்தின் மதகுகள் திறந்து விடப்பட்டதுபோன்ற மழை கொட்டியது. எவ்வளவு பெருஞ்சேதம்உண்டாயிற்று. வெளியில் ஒரு சிலந்திக்கூடும் விடப்படவில்லை. பலத்த கிளைகள் கொண்டதேக்கு மரத்தையும் முறித்தது.

மின்னல் விட்டது. இடியோசைஅமர்ந்தது. மழையும் நின்றது. இதமாக மேல்காற்று வீசலாயிற்று. மேகங்கள் விரைந்தோடின.பின்வாங்கும் புயல் அழகிய வானவில்லைக் காட்டியது. புயல் புன்னகை பூத்து மறைந்தது.

பின் சிலவாரங்களிலெல்லாம் வெளியெங்கும் வண்ண வண்ண மலர்கள் தோன்றின. கோடை காலமெல்லாம்புல் பசுமையாகவும், நீரோடைகள் நிறைந்ததும் மரங்கள் இலைகள் படர்ந்ததும் நிழலைத்தந்துமிருந்தன. நிலமும் அதிலுள்ள மரங்கள் ஓடைகள் யாவும் கடும்புயலை மறந்திடுபோதிலும்,அப்புயலின் நலந்தரும்பயன்களை அவையனைத்தும் அனுபவித்துக் கொண்டிருந்தன.

வாக்குத்தத்த நாட்டைஅடைய ஆண்டவர் நமக்கு ஓர் இலகுவான பயணத்தைத் தராதிருக்கலாம். ஆனால் அவர் நமக்கு ஒருபாதுகாப்பான பயணத்தையே தருவார்.

இந்தியாவின் தங்கச்சுரங்கங்களைக் கண்டுபிடிக்கக் காரணமாயிருந்தது ஒரு புயலே. இதைவிட சிறந்த செல்வச்சுரங்கமாகிய கிறிஸ்து நாதருடைய அன்பைக் கண்டுபிடிக்கச் சிலரைத் துன்பங்களாகிய புயல்தூண்டிவிட்டிருக்கிறதல்லவா?

மழை கொட்டுகிறதா,சிறுமலரே?

மகிழ்திரு நீ அதைக்குறித்து.

அதிக வெப்பம் உன்னைவாட்டும்

அலை மீண்டும் ஒளிதந்திடும், இப்போ

மேகங்கள் கனத்துகறுத்திருப்பினும்

மேகங்களுக்குப்பின்உள்ளதே நீல வானம்.

இளநெஞ்சே,களைத்திட்டாயோ?

களைப்புத்தரும் நோவினால்மகிழந்திடு.

துயரத்தில் வளரும்நற்பண்புகளே

துயரமழையால் வளர்ந்திடும்மலரே

மேகங்கள் தம்பனிசெய்தோய்ந்த பின்

மேகங்கள் மறைந்திடாஒளியருள்வார், இயேசுவே