June

யூன் 10

யூன் 10

தேவனிடத்தில்அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்(ரோ.8:28).

பவுலடியார் எவ்வளவுநிச்சயமாக இவ்வுறுதிப்பாட்டைக் கூறுகிறார். அவர் சில காரியங்கள் என்றோ, பல காரியங்கள்என்றோ, மகிழ்ச்சியான காரியங்கள் என்றோ, கூறாமல், சகலமும் என்று கூறுகிறார். மிகவும்நுண்ணிய காரியத்திலிருந்து மிகவும் தகுதி வாய்ந்த காரியமும், அன்றாட எளியகாரியங்களிலிருந்து, நெருக்கடியில் ஆண்டவருடைய கிருபை தேவைப்படும் காரியங்களும்நன்மைக்கேதுவாக நடக்கிறது. சகல காரியங்களும் நடக்கின்றன. அவை நடந்துகொண்டிருக்கின்றன.சகல காரியங்களும் நடந்தனவென்றால், நடக்கப்போகின்றன வென்றல்ல, இந்த நேரத்திலேயேநடந்துகொண்டிருக்கின்றன.

உமது நியாயங்கள் மகாஆழமாகவும் இருக்கிறது என்று கூறி, ஆண்டவருடைய திட்டங்களின் வளர்ச்சியைக்கவனித்துக்கொண்டே இருக்கும் தேவதூதர்கள், தங்களைத் தங்கள் செட்டைகளால் மூடி, கர்த்தர்தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம்கிருபையுள்ளவராயிருக்கிறார் (சங்.145:17) என்று கூறுகிறார்கள்.

அடுத்துள்ளது, சகலமும்சேர்ந்து நடக்கிறது. எவ்வளவு அழகான இணைப்பு. தனித் தனியே சிறப்பு இல்லாத வண்ண நூல்கள்பல சேர்ந்து நெய்யப்படும்பொழுது அழகான துணி உருவாகிறது.

இசையிலும் பலதரப்பட்டசுரங்கள் உண்டு. சில ஏற்காதவைகளாயிருக்கலாம். சில ஒத்துவராதவைகளாயிருக்கலாம். ஆனால்சகல சுரங்களும் சோந்தால்தான் ஒரு சிறந்த கீதம் இசைக்கப்படக்கூடும்.

பலதரப்பட்ட உருளைகளும்,சக்கரங்களும், இணைப்புகளும், ஒரு பொறியை இயக்கத் தேவைப்படுகிறது. ஒரு நூலையோ, ஒருசக்கரத்தையோ, ஒரு சுரத்தையோ தனித்தனியாக எடுத்துக்கொண்டால் துணியோ, பொறியோ, இசையோஏற்படுமா? அவை தனித்து விரும்பிய பயனைத் தரமுடியாதன்றோ?

துணியை நெய்து பார்!சுரங்களை இசைத்துப் பார். பொறியைப் பொருத்திப் பார், விளைவு சிறந்ததாகுமன்றோ?விசுவாசத்தின் பாடம் இதுதான். நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீயறியாய், இனிமேல்அறிவாய்.

ஆயிரம் சோதனைகளில்,நன்மைக்கேதுவாக நடப்பது, அவற்றில் ஐநூறு மட்டுமல்ல, தொளாயிரத்து தொண்ணூற்று ஒன்பதுவும்,மேலும் ஒன்றுமாம்.

தேவனோ அதை நன்மையாய்முடியப்பண்ணினார்.

நலமாக முடியச் செய்தார்,ஆண்டவர்!

எத்தனை பாக்கியமானஉறுதிமொழி!

நலமாக்கினார் உஎலகின்தீங்கனைத்தையும்,

அத்தனையாய்த் தந்தார்அமைதிதனை,

தற்செயலாயல்ல யோசேப்பின் சோதரர்

தம்பியை யடிமையாய் விற்றது.

கற்சிறையில் வாடிய யோசேப்புமே

கர்த்தனால் அரசாள ஏற்பட்டானே.

இறைவன் தந்தார், மக்களின் தேவையை

ஒருவனால் அதைச் சந்திக்கத் திட்டமிட்டார்.

சிறையின் கஷ்டமவன் அனுபவித்தான்.

ஒருவனால், நலச்செயலாக்கினாரே.

முடிவு கைதியின் கண்களில் படவில்லை,

அவன் ஆன்மா அல்லலுற்று வாடியது,

கடினப்பாதையை யவன் கண்டான்,

முடிவை அவனால் காணமுடியவில்லை.

விசுவாசத்தில் உறுதியாய் நின்றான் அவன்,

ஆண்டவன் மீது அவன் பற்று வெற்றியாயிற்று.

விசுவாசத்தின் பலன், யோசேப்பு மக்களை

பஞ்சத்தில் ஆதரிக்கும் பேறுபெற்றான்.

என்னை இங்கனுப்பியது நீங்களல்ல,

ஆண்டவரே எனச்சாட்சி கூறினான்.

என்னாலாண்டவர் நலம் செய்யத் திட்டம்

தந்தார் – துயரம் நீங்கித் துதியானதே.

அன்பனே, உனக்கு மாண்டவர் நலமாகவே.

ஆக்கிவிடுவார் உன்தொல்லையையெல்லாம்

அன்புள்ள ஆண்டவர் அனுமதித்தார் நீ

அறியா வழியிலுனை நடத்திடவே.

உன்னாண்டவர் அறிவார் முடிவுதனை

உனக்கென அன்பின் செயல் செய்வார்,

அன்பரவர் கரம்பற்றித் தொடர்ந்து செல்,

நீயவர் செல்வம்தனைக் காணும்வரை.

மாட்சியின் வீட்டில் நீ வாழுங்கால், உன்

வாழ்வின் வழிகளை அறிவாய் நீ

மாட்சிப் பேறுக்குனை யிட்டகரம் காணுவாய்,

வாழ்வளித்தோரை வாழ்த்திடுவாய்.