June

யூன் 9

யூன் 9

(அவருடைய) உண்மையை உணவாக்கிக்கொள் (சங்.37:3)

ஒரு நாள் ஆப்பிரிக்க இனத்தைச்சேர்ந்த ஓர் அம்மாயாரைச் சந்தித்தேன். அன்றாடகக் கடின உழைப்பினால் சம்பாதித்துவாழ்க்கை நடத்தி வந்த அவ்வம்மையார் ஒரு சிறந்த மகிழ்ச்சியுடைய கிறிஸ்தவர்.மனஉற்சாகமற்ற ஒரு கிறிஸ்தவ மாது அவரைப் பார்த்து நீ இப்பொழுது மகிழ்ச்சியாயிருப்பதுநலம்தான். நான் உனது வருங்காலத்தை நினைத்துப்பார்த்து வருத்தமடைகிறேன்.

ஒருவேளை உனக்கு ஒரு நோய்ஏற்பட்டு, நீ வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதென்று வைத்துக்கொள்ளலாம். ஒருவேளை நீஇப்பொழுது வேலை செய்யுமிடத்தில் உனது எஜமானர் வேறு இடத்திற்குச் சௌ;று விட்டார், வேறுயாரும் உனக்கு வேலை தரவில்லை என வைத்துக்கொள்ளுவோம். ஒருவேளை …. என்று கூறித்தொடர இருந்த அம்மாதை இடைமிறத்து நான்சி என்ற அந்த ஆப்பிரிக்க மாது.

நிறுத்துங்கள், நான்ஊகங்கொள்ளுவதே இல்லை. கர்த்தர் என் மேய்ய்பராய் இருக்கிறார். நான் தாழ்ச்சியடையேன்என்பது எனக்குத் தெரியும். எனது அன்புச் சிநேகிதியே! நீ ஊகிப்பதுதான் உன் கேட்டிற்குக்காரணம். ஊகிப்பதை விட்டுவிட்டு ஆண்டவரை மட்டும் நம்பு என்று கூறினார்.

வேதாகமத்தில் ஒரு வசனம்உண்டு. அதை ஏற்றுக்கொண்டு, குழந்தையின் நம்பிக்கையோடு கடைப்பிடித்தோமானால்,ஊகங்களுக்கு வாழ்க்கையில் இடமில்லாதுபோகும். அவ் வசனம் இதுதான். நீங்கள்ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமன்று எண்ணுங்கள். நான்உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.அதினாலே, நாம் தைரியங்கொண்டு, கர்த்தர் எனக்கச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன்எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே (எபி.13:5-6).

இருண்டு அகன்றுஆழமானதோர் ஆறு

மருண்ட என் பாதைமுன்குறுக்கிடுகிறது.

கசப்பாம் என்வருங்காலம் நான் அக்

கரிய அற்றைக்கடக்கையில் தோன்றுகிறது.

நான் நகைத்துப்பாடிஅப்போதும் கூறுவேன்,

நான் நம்பி என்றும்கீழ்ப்படிவேன்.

நாளை வரும் துயரம்சகிப்பேன்,

நாளை நோவை இன்றனுபவிப்பேன்.

நாளைய தினம் பாலம்ஆபத்தானதே,

நாளைய பாலத்தை இன்றுகடவேன்.

அதன் தூண்கள்ஆடிப்போயுள்ளன,

அதன் வளைவுகளில்வெடிப்புகளுள்ளன.

என்று நீ நம்பியிரு இதயமே,

என்றும் நீ பாடிக்கொண்டுநம்பியிரு,

நாளைய துயரம் நாளைசகித்திடு

நாளைய துயரம் இன்றுஎடுத்திடாய்.

உயரத்தில் பறக்கும் கழுகு, எவ்வாறு ஆறுகளைக்கடப்பதென்று கவலைப்படாது.