June

யூன் 8

யூன் 8

தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிறஜெயம் (1.யோ.5:4).

தனது வாழ்க்கையின்ஒவ்வொரு திருப்பத்திலும் ஒரு கிறிஸ்தவன் பெறும் வெற்றியையும், அவனுடைய மனசமாதானத்தையும்யாதோ ஒன்று அவன் அனுமதிக்கும் பொழுது, பறித்துக்கொள்ளக் காத்திருப்பதை அவன்காணக்கூடும். தன்னால் முடியுமானால், தேவபிள்ளைகளை ஏமாற்றிக் கெடுத்துவிடச் சாத்தான்ஆயத்தமாயிருக்கிறான். நமது வாழக்கைப் பாதையின் ஒவ்வொரு சிறப்புக் கட்டத்திலும்,நம்முடைய அனுபவம் சரியாக இருக்கிறதா, நாம் ஆண்டவருடன் சரியான உறவு கொண்டுள்ளோமாஎன்று கவனித்துக் கொள்வது அவசியம்.

ஒரு கிறிஸ்தவன் தனதுவிசுவாசத்தைத் தகுதியான நேரத்தில் மன உறுதியுடன் செயலாற்றினால் அவனுக்கு விருப்பமானால்,வெற்றியைத் தோல்வியின் வாயிலிருந்தே பறித்துக்கொள்ளக்கூடும்.

எந்த நிலையையும் விசுவாசம்மாற்றிவிடக்கூடும். எவ்வளவுதான் மோசமான நிலைமையாயிருப்பினும், நோக்கு எவ்வளவுதான் இருளாயிருப்பினும்,துரிதமாக ஒருவன் தன் இதயத்தை ஆண்டவரிடத்தில் ஏறெடுத்து, அவரில் உண்மையான விசுவாசம்கொண்டானேயாகில், எந்நிலையும் கணநேரத்தில் மாறிப்போகும்.

ஆண்டவர் தம்அரியாசனத்தில் வீற்றிருக்கிறார். அவரை நாம் உண்மையாக, முற்றிலுமாக நம்பினால் ஒருகணநேரத்திலேயே, அவரால் தோல்வியை வெற்றியாக மாற்றிவிட முடியும்.

அவர் வல்லவர்,விடுவிக்க வல்லவர்,

அவரில் விசுவாசம்வெற்றியாகும் எந்நேரமும்.

அச்சம், கவலை, பாவம்துயரமும் தோற்றிடும்,

அவரது வல்லமையை நாம்நம்பிடில்,

ஆண்டவரை நம்பு உன் இருள்நேரத்திலும்

திண்ணமாய்கருமேகங்களுடேயும் ஒளிவரும்.

எண்ணு நம் பாதையைத்திட்டமிட்டாரவர்.

அண்ணலவரைவிசுவாசித்திடென்றுமே.

விசுவாசமுள்ள ஒருவன்பின்வாங்குவதில்லை, எதிரியை நின்ற இடத்திலேயே பின்னடிப்பான்.